இடுகைகள்

நாவல் என்னும் பெருங்களம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஈழப்போர்க்கால நாவல்களில் பயங்கரவாதியின் இடம்

படம்
1983 ஜூலை 23 இல் நிகழ்ந்த கறுப்பு ஜூலை எனக் குறிக்கப்படும் பெருநிகழ்வு ஈழப்போராட்டத்தில் ஒரு தொடக்கம். அந்த நிகழ்வே ஆயுதப் போராட்டத்தை தனி ஈழத்துக்கான பாதை என்பதாக அறிவிக்கச் செய்தது. அந்தத் தொடக்கத்திற்கு வயது 40. ஆனால் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு நிறைவுபெற்றது. தனித்தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டத்தைக் கடைசிவரை நடத்திய விடுதலைப்புலிகள், ஆயுதங்களை மௌனித்துக் கொள்வதாக அறிவித்த நிகழ்வு முள்ளிவாய்க்கால் பேரழிவாகச் சுட்டப்படுகிறது. அந்த நாள் மே,18. 2009.

புதிய வெளிகளில் விரியும் விவாதங்கள்

படம்
 ஆ .சி. கந்தராஜாவின் 'ஒரு அகதியின் பேர்ளின் வாசல்' நாவலை வாசித்த போது போலந்தில் இருந்த இரண்டாண்டுக் காலத்துக் காட்சிகள் எனக்குள் திரும்பவும் படமாக விரிந்தன.

வெட்டியெடுக்கப்பட்ட சதைத்துண்டு: லதா உதயனின் அக்கினிக்குஞ்சுகள்

படம்
நாவல் இலக்கியம் புறநிலை சார்ந்தும் அகநிலை சார்ந்தும் பெரும் கொந்தளிப்புகளை எழுதிக்காட்டுவதற்கான இலக்கிய வகைமை. பெரும் கொந்தளிப்புகள் உருவாக்கக் காரணிகளாக இருக்கும் அரசியல் பொருளாதாரச் சமூக முரண்பாடுகளை அதன் காலப்பொருத்தத்தோடும், சூழல் பொருத்தத்தோடும் எழுதிக்காட்டும் புனைவுகள், வரலாற்று ஆவணமாகும் வாய்ப்புகளுண்டு.

மாஜிதாவின் பர்தா:பண்பாட்டுச் சிக்கலை எழுதிய புனைவு

படம்
பர்தா - கவனத்தை ஈர்க்கும் தலைப்பு. வெளிவந்துள்ள சூழலில் இந்தக் கவனம் கிடைத்திருக்கிறது. ஒரு பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ அதன் பயன்பாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் சொல்லாக மாறுவதற்குச் சூழலும் அதன் காரணிகளும் பின்னணியாக இருந்துள்ளன. அந்தச் சூழல் வரலாற்றுச் சூழலாக இருக்கலாம்; பண்பாட்டுச் சூழலாக இருக்கலாம். இன்னதென்று விளக்கமுடியாத நெருக்கடியாகவும் இருக்கலாம். பர்தா என்ற சொல் கவனம் பெற்ற சொல்லாக மாறியதில் எல்லாக் காரணங்களும் இருக்கின்றன. அதே காரணங்கள் மாஜிதா எழுதியுள்ள நாவலையும் கவனப்படுத்தியிருக்கிறது.

நாவல் எழுத்து: பெருவெளியும் சிறுவெளியும்

படம்
“உங்கள் வாழ்நாளில் உங்களைப் பாதித்த பெரும் அல்லது நினைவில் இருக்கக்கூடிய நிகழ்வு அல்லது ஆளுமையைப் பற்றிச் சொல்லுங்கள். அரசியல் அல்லது சினிமா சார்ந்த ஆளுமைகளையோ, அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளாக இருக்கக்கூடாது” இப்படியொரு தூண்டுகோலை முன்வைத்து அந்த வகுப்பைத் தொடங்கினேன். பல்கலைக்கழக மானியக்குழுவின் புத்தொளிப்பயிற்சி வகுப்பு அது. நடத்தியது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆசிரிய மேம்பாட்டிற்கான இயக்குநரகம் என்றாலும் இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழக எல்லைக்குள் இருந்தும் வந்து கலந்து கொள்ளலாம். ஒரேயொரு வரையறை, அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியின் தமிழ் ஆசிரியராக இருக்கவேண்டும்; அவர்களுக்கான பணியிடைப் பயிற்சி அது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லி, கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்களின் கல்லூரிகளிலிருந்தும் மொத்தம் 48 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள்

படம்
  புலம்பெயர் இலக்கியங்கள் என்ற சொல்லாடல் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் இலக்கியப்பரப்பிற்குள் தவிர்க்கமுடியாத சொல்லாடலாக மாறியிருக்கிறது.   இலக்கிய வகைமைப்பாட்டில் வரையறைகள் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தச் சொல்லாடலின் வரவு தனி ஈழக்கோரிக்கைக்கான போராட்டங்கள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், அமைதிப் பேச்சுகள், மீறல்கள், உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வுகள், அகதி நிலை வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்புபற்றி நிற்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களைப் பற்றிய பதிவுகளாகவும் இருப்பின் துயரங்களாகவும் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களின் விவரிப்புகளாகவும் எழுதப்பெற்ற கவிதைகளும் புனைகதைகளும் இப்போது தமிழின் புலம்பெயர் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

துன்பியலும் அபத்தமும் கலந்த கலவை: இமையத்தின் இப்போது உயிரோடிருக்கிறேன்.

படம்
துன்பியல் முடிவுகளைச் சந்திக்கும் பாத்திர உருவாக்கம் எப்போதும் இலக்கியத்தின் சக்தி வாய்ந்த வெளிப்பாடாக இருந்து வருகிறது. துன்பியல் முடிவைத் தவிர்க்கும் வாய்ப்புகளைக் காட்டத் தவறியதற்காக அந்தப் பாத்திரத்தைத் சுற்றி வாழ்ந்த மனிதர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகளை வைப்பதின் வழியாகவே திறன்வாய்ந்த எழுத்தின் – எழுத்தாளரின்- தனித்துவம் உருவாகிறது. ஒரு பாத்திரம் தானே தெரிவுசெய்த வாழ்க்கைமுறையின் காரணமாக ஆகப்பெரும் துன்பியல் முடிவைச் சந்திக்க நேர்ந்தது என்பதைத் தனது பனுவலில் முன்வைக்கும் எழுத்தாளர்கூட, தன்னையும் உள்ளடக்கிய சமூகத்தைக் குற்றவுணர்வுக்குள் நிறுத்தி விவாதிக்கும் சாத்தியங்களைத் தவறவிடுவதில்லை. உலக இலக்கியத்தில் கொண்டாடப்படும் இலக்கியப்பனுவல்களைக் கவனித்தால் இந்தக்கூற்றின் உண்மை புரியவரலாம்.

கையறு: மரணத்தின் தாலாட்டு

படம்
தமிழர்களின் அலைந்துழல்வுச்சித்திரங்கள் சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அமெரிக்காவின் அணுகுண்டுகள் வீசப்பட்ட நாட்கள்: ஆகஸ்டு- 6/ 9/ 1945. உலகத்தின் பார்வையில் பேரழிவு ஆயுதமாகப் பார்க்கப்பட்ட அணுகுண்டு, சப்பானின் அருகிலிருந்த பழைய பர்மா, மலேசியா, சீனா, தாய்லாந்து, முதலான நாட்டு மக்களால் வேறுவிதமாக உணரப்பட்டது. சிலர் தங்களின் விடுதலையின் கருவியாக அதை நினைத்தனர். இதுதான் வரலாற்றின் சுவைகூடிய நகைமுரண்

தலித் பெண்ணிய நோக்கில் சிவகாமி, பாமா நாவல்கள். பொதுவும் சிறப்பும்

படம்
இலக்கியம் தன்னளவில் ஒரு பொதுப்பெயராக நிற்கும்வரை அதன் வாசகக் கூட்டமும் பொதுநிலைப்பட்டதாகவே   இருந்துவிடும். அப்பொதுப் பெயர், இந்திய இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், அமெரிக்க இலக்கியம்,   எனத் தேசஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது பண்டைய இலக்கியம், இடைக்கால இலக்கியம், இக்கால இலக்கியம் எனக் காலஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது நாடக இலக்கியம், காப்பிய இலக்கியம், தூது இலக்கியம் என இலக்கிய வகை சார்ந்த அடையாளத்தைப் பெறுகிற போது காரணப் பொதுப்பெயராக ஆகி விடும். அப்போது அதன் வாசக எல்லை பொதுநிலைப் பட்டதாகவே இருந்திட வாய்ப்புண்டு. அதே போல , அக இலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக்கியம் எனச் சிறப்புப் பெயரைத் தாங்கிவிடும்போது கூட அவற்றின் வாசகர்கள் ‘பொதுவானவர்களே’ என்று ஒருவர் வாதிடவும் கூடும். அந்த வாதங்களுக்குச் சாதகமான காரணங்கள் நிறையச் சொல்லி விட வாய்ப்புகளுமுண்டு. ஆனால், வர்க்க இலக்கியம், கறுப்பு இலக்கியம், பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம் எனக் காரணச் சிறப்புப் பெயராக ‘ இலக்கியம்’ மாறிவிடும்பொழுது அவற்றின் வாசக நிலையிலும் குறிப்பான எல்லைகள் உருவாகிடக் காரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

படம்
இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’   அச்சில் வந்து கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது.பல பதிப்புகளும் வந்து விட்டன. இரண்டாவது நாவல் ‘ ஆறுமுகம்’ அச்சாகி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன  . இந்த இரண்டு நாவல்களையும் திரும்பவும் வாசித்துவிட்டுத் தமிழ் இலக்கியம் அவற்றை எதிர்கொண்ட விதத்தை நினைவுபடுத்திக் கொண்ட விதமாக இக்கட்டுரை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல்பகுதி விமரிசனப்பார்வைக்குள் செயல்படும் போக்குகளை விவாதிக்கிறது. இரண்டாவது இமையத்தின் ஆறுமுகம், தி.ஜானகிராமனின் அம்மாவந்தாள், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் ஆகிய மூன்றையும் ஒப்பிடுகிறது.

வாழ்க வாழ்க: திரள் மக்கள் அரசியலின் பேருருக்காட்சிகளும் சிற்றுரு நகர்வுகளும்

படம்
நம்கால அரசியல் நடவடிக்கைகளின் உச்சமாகத் திகழுவது தேர்தல் பரப்புரைகள். கட்சித்தலைமை கலந்துகொள்ளும்  பரப்புரை ஒன்றின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை வாசிப்பவர்களின் முன் விரிக்கும் எழுத்துப்புனைவின் அனைத்துச் சாத்தியங்களையும் தனதாக்கியிருக்கிறது இமையத்தின் இந்தப் புனைகதை.   சின்னக் கண்டியாங்குப்பத் துப் பெண்கள் விருத்தாசலம் நகரின் புறநகர் பகுதியான மணலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ‘500 ரூபாய், ஒரு சேலை’ என்று பேசி அழைத்துச் செல்லப்படும்போது உருவாகும் கூட்டு மனநிலையில் தொடங்கி,  கூட்ட மைதானத்தில் கிடைக்கும் துயரம், கொண்டாட்டம், அவமானம், குற்றவுணர்வு, அச்சம் எனப்பல்வேறு உணர்வுகளின் அடுக்குகளும், சந்திக்கும் அவலங்களும் ஆவலாதிகளும் அவதானங்களும் விவரிப்புகளாகவும் உரையாடல்களாகவும் காட்சிப்படுத்தல்களாகவும் எழுதப் பெற்றுள்ளன.

பூமணியின் வெக்கை: வெற்றி மாறனின் அசுரன்.

படம்
புதுச்சேரி நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்காக நவீனக் கவிதைகள் மற்றும் புனைகதைகளிலிருந்து நாடகப்பிரதிகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். புதுச்சேரிக்குப் போவதற்கு முன்பே எழுதிப்பார்த்தது சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள். போன பின்பு புதுமைப்பித்தன், பிரபஞ்சன், திலீப்குமார், கோணங்கி ஆகியோரின் சிறுகதைகளிலிருந்து ஆக்கிய நாடகப் பிரதிகள் சிலவற்றை மாணவர்கள் மேடையேற்றம் செய்தார்கள். நானும் செய்தேன்.

பாண்டிச்சி: முதல் எழுத்து என்னும் நிலையோடு...

படம்
தமிழ் இலக்கிய மரபில் கவிதைதான் பெண்களின் வெளிப்பாட்டு வடிவமாக இருந்துவருகிறது. கவிதையில் கதைசொல்லும் நெடுங்கவிதை களைக் கூட முயற்சி செய்யவில்லை. நெடும்பாடல்களையும் குறுங் காவியங்களையும் ஆண்களே முயற்சி செய்திருக்கிறார்கள். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் கூடப் புனைகதைகள் எழுதும் பெண்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது.

ஈழம் : போரும் போருக்குப் பின்னும் - அண்மைப் புனைகதைகளை முன்வைத்து

படம்
இலக்கிய உருவாக்கத்தில் உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவுபற்றிய சொல்லாடல்கள் முடிவிலியாகத் தொடர்பவை. எழுதப்படும் நிகழ்வு ஒன்றே ஆயினும், வெளிப்பாட்டுத்தன்மையையும் எழுப்பும் விவாதங்கள் அல்லது விசாரணைகளையும் இலக்கியத்தின் வடிவமே தீர்மானிக்கிறது. அடிப்படை இலக்கிய வடிவங்களான கவிதை, நாடகம், கதைகள் என்ற மூன்றிலும் எல்லாவற்றையும் எழுதிக் காட்டமுடியும் என்றாலும், வெளிப்படும்போது வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு வடிவத்திற்கும் பொருத்தமான சம்பவங்களும் சொல்முறையும் இருக்கவே செய்கின்றன. இலக்கியப் பிரதிகள் அடிப்படையில் மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் பதிவுசெய்யும் வெளிப்பாட்டு வடிவங்கள். உணர்வுகளும்சரி, உறவுகளும்சரி மனிதர்களுக்கிடையேயானதாகவும், மனிதர்களுக்கும் இயற்கைக்கு மிடையேயானதாகதாகவும் இருக்கின்றன. 

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி

படம்
நாவல்கலையினூடாக  வகைபிரித்தல் காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத் தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.  

தன் வரலாற்றைச் சொல்லுதலின் அரசியல்: கே.ஏ. குணசேகரனின் வடு

படம்
தலித் இயக்கம் இந்தியாவில் அதிரடி மாற்றங்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது. பிற இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களை நிகழ்த்திட எடுத்துக் கொண்ட கால அளவை விடத் தலித் இயக்கங்கள் எடுத்துக் கொண்ட கால அளவு மிகக் குறைவானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று . இலக்கியம் அல்லது எழுத்துப் பரப்பில் பிற இயக்கங்கள் தயங்கித் தயங்கிக் காலடி எடுத்து வைத்த பல பிரதேசங்களில் தலித் இயக்கங்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நுழைந்துள்ளன  என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

விளையாட்டு - வேட்டை - வியாபாரம்

படம்
புனைகதையின் இருவேறு வடிவங்களையும்-சிறுகதை, நாவல் -வேறுபடுத்தும் அடிப்படைகளில் 'அளவு'க்கு முக்கியமான இடமுண்டு. அளவு என்பது எழுதப்படும் பக்க அளவல்ல. புனைகதை இலக்கியத்தில் விரியும் காலம் மற்றும் வெளியின் விரிவுகளே சிறுகதையிலிருந்து நாவல் இலக்கியத்தை விரிவாக்கிக் காட்டுகின்றன. இவ்விரண்டும் விரியும் நிலையில் அதில் இடம்பெறக்கூடிய பாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிட வாய்ப்புண்டு. 

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல்

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் : 1960-1970 வரையிலான பத்தாண்டுகள் விடுதலைக்குப் பிந்திய இந்தியவாழ்வின் முக்கியமான ஆண்டுகள். காலனிய இந்தியாவின் அடையாளங்கள் விலகிப்போன ஆண்டுகள். முதல் பிரதமர் பண்டித நேருவின் மரணம் அந்தப் பத்தாண்டுகளின் மத்தியில்(1964) தான் நடந்தது. ஆனால் அவரது திட்டங்களின் பலனும் அப்போதுதான் வெளிப்பட்டன. சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த உள்வாங்கும் மக்களாட்சிமுறை, நகர்மயமாதல், கிராமசமூகத்திற்குள் நவீனத்துவத்தின் நுழைவு என அந்த வெளிப்பாடுகளைப் பட்டியலிடலாம். இவைகளும் இவைபோன்ற அரசியல், பொருளியல் திட்டங்களும் முற்றிலும் நேர்மறையானவையென்றோ, எதிர்மறையானவையென்றோ அறிவுலகம் நினைக்கவில்லை. இவைகளின்மீது விமரிசனங்களை நேரடியாக வைத்தவர்கள் அக்காலத்தில் இருக்கவே செய்தனர். படைப்புத்தளங்களில் செயல்படுபவர்கள் அவரவர் படைப்புவடிவத்திற்கேற்ப விமரிசனத்தை வைக்கத்தயங்கவில்லை. விரிவான விமரிசனங்களுக்கும் பதிவுகளுக்கும் வாய்ப்புகொண்ட நாவல் வடிவம் அறுபதுகளில் நடந்த மாற்றத்தைக் கவனமாக உள்வாங்கி வெளிப்படுத்தியது. புராணத்தன்மை, வரலாற்றுப் புனைவு,குடும்ப வெளி என அதுவரை

காமம் : உடைமையாக்குதலின் அலைக்கழிப்பு

படம்
குடும்பம், சமூக அமைப்பின் மிகச்சிறிய நுண் அலகு. எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பை உருவாக்கவும் தக்கவைக்கவும் விரும்புகின்றன. மதம், இனம், மொழி, பண்பாடு என்பதான காரணிகளால் வேறுபாடுகள் கொண்ட எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையைத் தொலைக்கவில்லை. அந்த நம்பிக்கையின் அவை ஏற்படுத்திக் கொண்ட நடைமுறையின் பெயர் திருமணம். திருமணத்தின் வழியாக நிகழும் ஆண் பெண் உறவின் முதன்மை நோக்கம் மனித உற்பத்தி ; வாரிசுகளை உருவாக்குதல். வாரிசுகளின் செயல்பாடுகள் பண்பாட்டின் அடையாளங்கள்.

குற்றவியலின் தர்க்கங்கள்-ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்

படம்
ஒரு கவிதையை வாசிப்பதற்கும் நாடகத்தை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதுபோலப் புனைகதையை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கவே செய்கிறது. புனைகதைகளுக்குள்ளும்  சிறுகதை வாசிப்பும் நாவல் வாசிப்பும் வேறுபட்டது.