இடுகைகள்

தலித் இலக்கியம் பற்றி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நந்தனார் தெருக்களின் மனிதர்கள்

படம்
தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொண்டே இருக்கும் நண்பர்கள் என்றால் முதல் சந்திப்பும் அச்சந்திப்பில் பேசிக்கொண்ட உரையாடல்களும் நினைவில் இல்லாமல் போக வாய்ப்புண்டு. அதே வேளையில் முதல் சந்திப்பின் உரையாடல்களே நெருங்கிய நட்புக்காரணமாக இருந்தது என்றால் முதல் சந்திப்பின் பதிவுகளும் சொற்களும் மனதிலிருந்து அழிந்துவிடுவதில்லை. மனிதர்களைக் குறித்த நினைவுகளுக்கும் ஞாபகங்களுக்கும் சொல்லப்பட்ட இந்தக் குறிப்பு வாசித்த எழுத்துகளுக்கும் பொருந்தக் கூடியனவாகப் பல நேரங்களில் இருக்கிறது. விழி பா. இதயவேந்தனின் கதைகளில் முதன்முதலில் வாசித்த கதை ‘நந்தனார் தெரு’ அவரை நினைத்துக் கொள்ளும்போது அந்தக் கதையே எப்போதும் நினைவுக்கும் வரும். முதல் தொகுப்புக்கு அந்தக் கதையைத் தான் தலைப்பாக வைத்திருந்தார். அவரது மறைவுக்குப்பின் கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளுக்கும் “நந்தனார் தெரு, மற்றும் சில கதைகள்” என்றே தலைப்பிட்டுள்ளது

அழகிய பெரியவன்: கதைவெளிப்பயணம்

படம்
நீ நிகழ்ந்த போது என்ற கவிதைத் தொகுப்பைத் தனது இலக்கிய அறிமுகத்தைச் செய்த அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான தீட்டு தமிழினிப் பதிப்பாக வெளி வந்த 2000- க்குப்பின் கவனிக்கப் பட வேண்டிய சிறுகதையாளராக ஆனதோடு தனது முதல் நாவலான தகப்பன் கொடி வழியாக முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவராக அறியப்படுகிறார். அவரது கதைகளைக் குறித்து சரியாக ஐந்தாண்டு இடைவெளியில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கே அவற்றை வரிசைப்படுத்தித் தருகிறேன்.

தலித் பெண்ணிய நோக்கில் சிவகாமி, பாமா நாவல்கள். பொதுவும் சிறப்பும்

படம்
இலக்கியம் தன்னளவில் ஒரு பொதுப்பெயராக நிற்கும்வரை அதன் வாசகக் கூட்டமும் பொதுநிலைப்பட்டதாகவே   இருந்துவிடும். அப்பொதுப் பெயர், இந்திய இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், அமெரிக்க இலக்கியம்,   எனத் தேசஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது பண்டைய இலக்கியம், இடைக்கால இலக்கியம், இக்கால இலக்கியம் எனக் காலஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது நாடக இலக்கியம், காப்பிய இலக்கியம், தூது இலக்கியம் என இலக்கிய வகை சார்ந்த அடையாளத்தைப் பெறுகிற போது காரணப் பொதுப்பெயராக ஆகி விடும். அப்போது அதன் வாசக எல்லை பொதுநிலைப் பட்டதாகவே இருந்திட வாய்ப்புண்டு. அதே போல , அக இலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக்கியம் எனச் சிறப்புப் பெயரைத் தாங்கிவிடும்போது கூட அவற்றின் வாசகர்கள் ‘பொதுவானவர்களே’ என்று ஒருவர் வாதிடவும் கூடும். அந்த வாதங்களுக்குச் சாதகமான காரணங்கள் நிறையச் சொல்லி விட வாய்ப்புகளுமுண்டு. ஆனால், வர்க்க இலக்கியம், கறுப்பு இலக்கியம், பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம் எனக் காரணச் சிறப்புப் பெயராக ‘ இலக்கியம்’ மாறிவிடும்பொழுது அவற்றின் வாசக நிலையிலும் குறிப்பான எல்லைகள் உருவாகிடக் காரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில்

சாதியும் தேர்தலும்:இமையத்தின் தாலிமேல சத்தியம்

படம்
தேர்தல் அரசியலில் வெற்றியைத் தருவதில் முதல் இடம் பணத்திற்கா? சாதிக்கா? என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது.பொதுத்தேர்தல்களில் சாதியும் இடைத்தேர்தல்களில் பணமும் முதலிடம் பெற்று வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். கொள்கையையும் கோட்பாட்டையும் முன்வைத்து அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன.ஆனால் அவற்றைச் சொல்லி மட்டுமே தேர்தல் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என நம்பும் கட்சிகள் இந்தியாவில் மிகக்குறைவு. 70 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் மட்டுமே கொள்கைப்பற்றோடு, அதனை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிகமும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

படம்
இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’   அச்சில் வந்து கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது.பல பதிப்புகளும் வந்து விட்டன. இரண்டாவது நாவல் ‘ ஆறுமுகம்’ அச்சாகி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன  . இந்த இரண்டு நாவல்களையும் திரும்பவும் வாசித்துவிட்டுத் தமிழ் இலக்கியம் அவற்றை எதிர்கொண்ட விதத்தை நினைவுபடுத்திக் கொண்ட விதமாக இக்கட்டுரை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல்பகுதி விமரிசனப்பார்வைக்குள் செயல்படும் போக்குகளை விவாதிக்கிறது. இரண்டாவது இமையத்தின் ஆறுமுகம், தி.ஜானகிராமனின் அம்மாவந்தாள், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் ஆகிய மூன்றையும் ஒப்பிடுகிறது.

புதிய வருகை: புதிய நகர்வுகள்- தலித் இதழில் மூன்று சிறுகதைகள்

படம்
நிறுத்தப்படுவதும் திரும்பவும் வருவதும் இலக்கியச் சிறுபத்திரிகைகளின் அடையாளங்களில் ஒன்று. 1990 களின் இறுதியில் தொடங்கி , தான் நடத் திய தலித் - இதழைத் திரும்பவும் கொண்டுவருகிறார் பன்முகத்தன்மைகொண்ட எழுத்தாளர்     ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்) . உள்ளடக்க நிலையில் முன்னர் வந்த 12 இதழ்களின் நீட்சி யைக் காணமுடிகிறது. இந்த இதழின்     உள்ளடக்கம்:       ·          கவிதைகள் (எம்.எ.நுஃமான், என்.டி.ராஜ்குமார் ·          சிறுகதைகள் (ரவிக்குமார், அழகிய பெரியவன், ப்ரதீபா ஜெயச்சந்திரன்) ·          மொழிபெயர்ப்புகள் (கெவின் பி.ஆண்டர்சன்: நேர்காணல் தமிழில் சிசுபாலன்,   லீலாதர் மண்டலே கவிதைகள், தமிழில்:கிருஷாங்கினி) ·          கட்டுரைகள் (ஜெ.பாலசுப்பிரமணியம், கோ.ரகுபதி) ·          வெளிவராத நூலின் பகுதி (தேன்மொழியின் சாமி தந்தாள் கதை)  

ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்

படம்
தமிழ்நாட்டின் இப்போதைய விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியில் பிறந்து சொந்த ஊரிலும் மதுரையிலும் பள்ளிக் கல்வி கற்றவர். திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் கல்லூரிக்கல்வியைக் முடித்தவர். பட்டப்படிப்பில் விலங்கியல் பட்டமும் பட்டமேற்படிப்பில் தமிழ் இலக்கியமும் பயின்றவர். புதுச்சேரி அரசுக் கல்லூரிகளில் 38 ஆண்டுகள் பணியாற்றியவர். பணியிடைக்காலத்தில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும், சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் நாவல் எழுத்தாளர்களில் முன்னோடியான அ.மாதவய்யாவின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் திருநெல்வேலியில் வசித்துவருகிறார் ராஜ்கௌதமன்.

நவீன நாடகமும் தலித் நாடகமும்

நாடகம் என்றால் என்ன?  “ராமசாமி கந்தசாமியாக நடிப்பதை முத்துசாமி பார்த்துக் கொண்டிருப்பது தான் நாடகம். நாடகத்தை அதன் மற்ற அலங்காரங்களையெல்லாம் களைந்துவிட்டு சாராம்சமான விஷயம் எது என்று பார்த்தால் இது தான் நாடகம்“  நான் வாசித்த நோ்காணல் ஒன்றின் முதல் கேள்வியும் அதற்கான பதிலின் தொடக்கமும் இது. (நோ்காணல் செய்யப்பட்டவர்; கே. எஸ். ராஜேந்திரன், டெல்லி, தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவா், இந்நாள் ஆசிரியா். நோ்காணல் செய்தவா்; சி. அண்ணாமலை, பத்திரிகையாளா்) இதில் பதிலை விடவும் கேள்வியை முக்கியமானதாகக் கருதவேண்டியுள்ளது.

தன் வரலாற்றைச் சொல்லுதலின் அரசியல்: கே.ஏ. குணசேகரனின் வடு

படம்
தலித் இயக்கம் இந்தியாவில் அதிரடி மாற்றங்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது. பிற இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களை நிகழ்த்திட எடுத்துக் கொண்ட கால அளவை விடத் தலித் இயக்கங்கள் எடுத்துக் கொண்ட கால அளவு மிகக் குறைவானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று . இலக்கியம் அல்லது எழுத்துப் பரப்பில் பிற இயக்கங்கள் தயங்கித் தயங்கிக் காலடி எடுத்து வைத்த பல பிரதேசங்களில் தலித் இயக்கங்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நுழைந்துள்ளன  என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

மூன்று அசல் கதைகளும் ஆறு மொழி பெயர்ப்புக் கதைகளும்

அளவில் பெரியதாக மாறி வரத் தொடங்கிய தலித் இதழின் அடுத்தடுத்த இதழில் இமையத்தின் இரண்டு கதைகள் வந்துள்ளன. பசிக்குப்பின்.. மாடுகள்.. இரண்டு கதைகளும் வெவ்வேறு வெளிகளில், வெவ்வேறு வயது மனிதர்களை உலவ விட்டுள்ள கதைகள். பசிக்குப்பின் கதையின் உலகம் ஒரு சிறுவனின் ஒரு நேரத்து உணவு சார்ந்த உலகம்.. தானியத்தைக் குத்தி அதிலிருந்து கிடைக்கும் தவிட்டைத் தின்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு சிறுவனின் மனசைத் திசை திருப்பி விடும் ‘ஐஸ் வண்டி’ ஏற்படுத்தும் சலனத்தை விரிவாகப் பதிவு செய்கிறார். ஒரு சிறுகதைக்கு அதுவே கூடப் போதுமானதுதான்.

காலத்தின் எழுத்தாளன்

படம்
இமையத்தின் பெத்தவன் கதை அண்மையில் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது . தெலுங்கு- தமிழ்ச் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பில்  பெத்தவன் கதை முப்பது பக்கங்களில் (464-493) மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளது. மொழி பெயர்த்துள்ளவர் புருஷோத்தம தாஸ். 20 கதைகள் அடங்கிய அந்தத் தொகுப்பில் பெத்தவன் கதை இடம் பெற்றுள்ளதும், திருப்பதி பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திற்கு ஏற்றுக் கொண்டுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.  தமிழ் நாட்டில் இதுபோல ஒரு பல்கலைக்கழகத்தில் உடனடியாகப் பாடமாக ஆகும் சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

படம்
இலக்கிய இயக்கங்களில் அதிகம் கொண்டாடப்படாத இயக்கம் நடப்பியல் (Realisam) இயக்கம் ஆனால் நீண்ட கால வாழ்வையும் நிகழ்காலத் தேவையையும் கொண்ட இயக்கமாக இருப்பது. நடப்பியலின் சிறப்பு. அதன்  விளைநிலம் புனைகதை. புனைகதையின் வரவோடு நடப்பியல் வந்ததா? நடப்பியலின் தோற்றத்தோடு புனைகதைகள் உருவாக்கப் பட்டனவா? என்ற ஐயத்தைத்  தீர்க்க முடியாத அளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைந்தனவாக இருக்கின்றன.

பூமணியின் வெக்கை : தமிழ் நாட்டுக் கிராமங்களின் தகிப்பு

படம்
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப் படுகிறார்கள். பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகு வோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப் படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது.

ராஜ் கௌதமனின் தன் வரலாற்று நாவல்கள்

படம்
                                        கதை அல்லாத பிற குறிப்புகள் எப்போதும் தன்னை அந்நியனாக உணரும் சிலுவையின் அங்கதம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தையும் தன்னையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இலக்கிய உத்திகளின் துணையின்றி, தன் ‘வாழ்க்கைப் பார்வையையே’ மையமாகக் கொண்டு இயங்கும் புதிய புனைகதை முயற்சி இது. இப்படியான சிறு அறிமுகத்தைப் பின் அட்டையில் கொண்டிருக்கிறது ராஜ் கௌதமனின் இரண்டாவது நாவல் காலச்சுமை,

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

படம்
ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கின்ற ஒன்றுதான்.இலக்கியத் துறையில் செயல்படும் ஒருவன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, "நிகழ்கால இலக்கியப்பரப்பில் எனது இடம் என்ன ?" என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு விடை தேட வேண்டும். திருப்தியளிக்கும் பதில் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் வாசகர்களுக்கு அல்லது இலக்கிய வரலாற்றுக்குப் புதுவகையான படைப்பு கிடைக்க வேண்டும். தூர்வை என்ற நாவல் மற்றும் மூன்று சிறுகதைத் தொகுதிகள் வழியாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் ஓரிடத்தை உறுதி செய்து கொண்ட சோ.தர்மன், கிடைத்துள்ள இடத்தில் திருப்தி அடை யாமல் மேலும் கேட்டுக்கொண்டதின் விளைவு அவரது இரண்டாவது நாவல் கூகையாக உருவாகியுள்ளது.

தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்

படம்
தமிழக எல்லைக்குள் வாழ நேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி தன்னையொரு தமிழ் உயிரியாகக் கருதிக்கொண்டாலும்சரி அல்லது இந்திய மனிதனாகக் கருதினாலும் சரி கடந்த பதினைந்து ஆண்டுகளில்-1990 முதலான பதினைந்து ஆண்டுகளில்- இரண்டு முக்கியமான நிகழ்வுளுக்காகத் தன் கவனத்தைத் திருப்பியிருக்க  வேண்டும். முதலாவது நிகழ்வு ஊடகப் பெருக்கம் என்னும் சர்வதேச நிகழ்வு.

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

படம்
பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப் பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப் பண்பாடு x விளிம்புநிலைப் பண்பாடு என்று எதிர்வு எனச் சொல்லலாம்.

தமிழகத்தில் தலித் இலக்கியம்

படம்
தலித் - ஒரு பதமாக  நுழைந்து நிகழ்வாக மாறிவிட்ட அந்த வார்த்தைக்கு வயது பத்து. இருபதாம் நூற்றாண்டின்  இறுதிப் பத்தாண்டுகள்.  நுழைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தமிழ்ச் சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் தளங்களை ஆக்ரமித்துக்கொண்ட சொல்லை - இதைப்போல் வேறு சொல்லை - தமிழ் மொழி இதற்கு முன் சந்தித்திருக்க வாயப்பில்லை.

இமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ்வின் மீதான விசாரணை

படம்
எழுத்தாளர்களில் ஒரு சிலர் தாங்கள் இயங்கும் இலக்கிய வகைமைகளில் ‘மைல்கல்’  அல்லது ‘திருப்புமுனைப்’ படைப்பு என்று சொல்லத்தக்க படைப்புகளை எழுதுவதன் மூலம் கவனிக்கத்தக்க படைப்பாளிகள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். அதுவும் ஒரு படைப்பாளியின் முதல் படைப்பே அப்படிப்பட்ட ஒன்றாக அமைந்து விடும் பொழுது படைப்பாளியின் மீது குவியும் கவனம் ஆழமானது. முதல் நாவல் கோவேறு கழுதைகள், இமையத்திற்கு அப்படியொரு கவனக்குவிப்பைப் பெற்றுத் தந்தது.

தலித் அல்லாதார் பார்வையில் தலித் எழுச்சி

தமிழ்ச் சிந்தனைத்தளம் -அரசியல் , பொருளாதாரம் , கலை இலக்கியம் , போராட்டம் - என அனைத்துத் தளங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அது வரை பிராமணர்கள்/ பிராமணர் அல்லாதார் எனப்பிளவுபடுத்திப் புரிந்து கொண்ட எல்லாவற்றையும் இன்று தலித்/ தலித் அல்லாதார் என எதிர்வு களை நிறுத்தி விவாதிக்கவும் விளக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனக்கோருகிறது இந்த நெருக்கடி.