இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்

படம்
நாயகப்பாத்திரம், அதனோடு முரண்படப்போகும் எதிர்நிலைப்பாத்திரம் என அறிமுகப்படுத்தி, சின்னச் சின்ன முரண்பாடுகளால் வளர்வது நல்திறக் கட்டமைப்பு நாடக வடிவம். அதனை உள்வாங்கி உருவாக்கப்படும் திரைக்கதை அமைப்பும் பார்வையாளர்களைத் தக்கவைக்கும் திறன் கொண்டது. 

தமிழ்ச் சினிமா : ஓர் இயக்குநர், ஒரு நடிப்பு முறை, ஓர் ஆசிரியரின் இரண்டு நூல்கள்-

படம்
சினிமாவை எப்போதும் பொழுதுபோக்காகவே நாம் நம்புகிறோம்; நினைக்கிறோம். அதனைக் கற்றுக் கொள்ளத் தேவையான அடிப்படை நூல்கள் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்பட்ட நூல்களும் தொடர்ச்சியான பயன்பாட்டில் இல்லை. ஒரு ஆளுமையின் ஆக்கமுறைமைகளைக் கல்வி அடிப்படையிலான அறியும் நூல்கள் இல்லை. தமிழ்/இந்திய அசைவுகளிலிருந்து நடிப்பு முறைமைகளை - நடிப்புக்கலைக்கூறுகளைக் கற்கும் பயிற்சி நூல்கள் நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகள் அதனை நோக்கிய சில சுட்டிக்காட்டல்கள் மட்டுமே நடப்பியல் சினிமாக்காரர் மகேந்திரன்: தமிழ்ச்சினிமாவின் இயக்குநர்களில் நடப்பியல் சினிமாவுக்கான முன்மாதிரியாகப் பலரும் பீம்சிங்கைச் சொல்வதுண்டு. சிவாஜி கணேசன் நடித்த பா- வரிசைப்படங்கள் நடப்பியல் கூறுகளோடு இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. நான் தொடர்ந்து சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு வந்த இயக்குநர்களில் மகேந்திரனைக் கவனமாக நடப்பியல் சினிமாவைத் தேர்வு செய்து வெளிப்பட்டவர் எனக் கணித்திருந்தேன். ஒருமுறை அவரை அருகிருந்து பார்க்கவும் பேசவும் வாய்ப்புக்கிடைத்தபோது, அந்தக் கணிப்பு உறுதியானது. அவர் அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர். நான் அப்போது படித்துக் கொண

நம்பகத்தன்மைகளினூடாக: சாமி – கோவில்பட்டி வீரலெட்சுமி பற்றிய உரையாடல்

படம்
திருநெல்வேலி என்றால் “அல்வா” என்பது நீண்டகால அடையாளம். ஆனால் “சாமி” திரைப்படம் அந்த அடையாளத்தைக் “கலவரம்” என்பதாக மாற்றிவிடத் தீா்மானித்து நிகழ்வுகளை முன்மொழிந்தது. இதனைத் திருநெல்வேலியின் மனிதா்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

காலனிய வரலாற்றைத் துணைக்கழைத்தல்: இரண்டு சினிமாக்கள்

படம்
இந்தியத்தன்மை உருவாக்க நினைக்கும் சினிமாக்காரர்கள் குறிப்பான வெளிகளைத் தவிர்த்து, இந்தியப் பரப்பில் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடிய கதைகளைத் தேடுகின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்தியத்தன்மை, காலனியக்காலத்து நடைமுறைகளுக்கு எதிராக நிறுத்தும் பார்வைக்கோணம் அவர்களிடம் வெளிப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி, மேற்குலகச் சிந்தனை போன்றவற்றிற்கு எதிராக இந்தியத்தனம், இந்தியச் சிந்தனை என்பதை முன்வைக்கும்போது பின் காலனியக் கோபம் இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் பின் காலனியக் கோபம், இந்தியச் சாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் தவிர்க்க நினைப்பது சமகாலச்சிந்தனை ஆகாது. அண்மையில் வந்த கேப்டன் மில்லரும் ஏழெட்டு மாதங்களுக்கு முன் வந்த 1947 ஆகஸ்டு 16 என்ற படமும் இந்தக் கோணத்தில் பார்க்கவேண்டிய படங்கள்.

தங்கர் பச்சானின் சொல்முறையும் கருமேகங்கள் கலைகின்றன என்ற அண்மை சினிமாவும்

படம்
தங்கரின் எல்லா சினிமாக்களையும் பார்த்திருக்கிறேன். அம்மாவின் கைபேசியையும் களவாடிய பொழுதுகளையும் ஏன் பார்க்க நினைத்தோம் என்று நினைத்ததுண்டு. இவ்விரண்டு படங்களிலும் அவரது சொல்முறையை விட்டு விலகியதே காரணம் எனச் சமாதானம் செய்துகொண்டதுண்டு. அவருக்குக் கைவராத சொல்முறையொன்றை முயற்சி செய்த அவ்விரு படங்களும் அவருக்கு எந்தவிதத்திலும் பெயர் வாங்கித்தரவும் இல்லை. வசுல் அளவிலும் அவரைக் காப்பாற்றவுமில்லை.

கூழாங்கல் : மொத்தமும் குறியீடுகளாய்…

படம்
சில வெளிநாட்டுப் படவிழாக்களில் கலந்து கொண்டபோதும், விருதுகள் வாங்கியதாகத் தகவல் வந்தபோதும் பார்க்கவேண்டிய படம் என நினைத்துக் கொண்டது மனம். நண்பர் ஒருவர் அந்தப் படம் முழுவதும் மதுரைக்குப் பக்கமாக இருக்கும் கிராமப்புறப் பகுதியில் எடுக்கப்பட்டது என்ற தகவலையும் சொல்லியிருந்தார். அதனைத் தாண்டி, ஆஸ்கார் விருதுப் போட்டியில் பங்கேற்கக் கடந்த ஆண்டில்(2022) இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது என்றபோது ஆர்வமும் கூடியது. ஆனாலும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சோனி லைவ் வழியாக அந்த வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை உடனே நிறைவேற்றவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைத்திருந்து பார்த்து வேட்டேன்.

மத்தகம்: தொழில்முறைத் திறன்களின் வெளிப்பாடு

படம்
காண்பிய வரிசைத்தொடராக (டெலி சீரியல்) ஹாட்ஸ்டாரில் வந்துள்ள மத்தகம் முதல் பாதியை இரண்டு தவணைகளில் பார்த்து முடித்தேன். மூன்றுமணி நேரம் ஓடும் சினிமாவில் இடைவேளை முடிந்தவுடன் திரும்பவும் அரங்கத்தில் நமக்கான இருக்கையில் அமரவேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் நேற்றும் இன்றுமாகப் பார்க்கமுடிந்தது. ஐந்து பகுதிகள் பார்த்து முடித்தபின்னும் பாதிதான் முடிந்துள்ளது என்பதுபோல நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு பாதி சில காலம் கழித்து வரக்கூடும்.

குட்நைட் - திட்டமிட்ட படப்பிடிப்பின் வெளிப்பாடு

படம்
முழுமையான ஆற்றுகைப் பனுவலைக் கொண்டு நாடக ஒத்திகைக்குப் போவதுபோல முழுமையான படப்பிடிப்பு பனுவலை - புரடக்சன் ஸ்கிரிப்ட்டோடு படப்பிடிப்பைத் தொடங்கினால் சினிமாவின் செலவு கோடிகளில் இருக்க வாய்ப்பில்லை. தனது திரைக்கதையின் மீது நம்பிக்கை கொண்ட இயக்குநர் அப்படித்தான் செயல்படுவார். அப்படிச் செயல்பட்டு உருவாக்கப்பட்ட சினிமாவாக குட்நைட் வந்திருக்கிறது.

பத்துத்தலெ :

படம்
இவையெல்லாம் குற்றச்செயல்கள், வெளிப்படும்போது தண்டனைகள் உண்டு எனத் தெரிந்தபின்னும் திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குப் பின்னால் எதிரெதிர்க் கூட்டணிகளின் மறைமுக ஒப்பந்தங்கள் இருக்கவே செய்யும்.மறைமுக ஒப்பந்தங்களைக் கதைப்பின்னலின் ரகசிய முடிச்சுகளாக மாற்றிக் குற்றக்குழு மோதல் ( Gang war )படங்கள் உருவாக்கப் படுகின்றன. ஒவ்வோராண்டும் எடுக்கப்படும் இருபத்திச் சொச்சம் குற்றக்குழு மோதல் படங்களில் ஒன்றாகவே அண்மையில் வந்த ‘பத்துத்தல’ யும் கணிக்கப்பட வேண்டிய படம்.

நண்பகல் நேரத்து மயக்கம்: காணாமல் போனவனும் காணாமல் போய்க்கொண்டிருப்பவனும்

படம்
கலைத்தன்மைச் சினிமா என்னும் தனித்துவம் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது சினிமாக்களை, குறிப்பான சூழல் என்ற அடிப்படையில் மற்றவர்களின் சினிமாவிலிருந்து வேறுபடுத்துகின்றார் எனத் தோன்றுகிறது. அதனாலேயே அவரது சினிமாக்களை நடப்பியல் வகை சினிமாவின் சட்டகங்களுக்குள் வைத்துப் பேசமுடிவதில்லை. தனித்தனியாகப் பார்த்தால், நிகழ்கால வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையே அவரது சினிமாக்கள் காட்சிப்படுத்தியுள்ளன என்று தோன்றும். ஆனால் அவையெல்லாம் எல்லாருடைய வாழ்க்கையிலும், ஒவ்வொரு வெளியிலும் நடக்கக்கூடியன என்று உறுதியாகக் கூறமுடியாது. நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக நடக்கும் வாய்ப்புகள் கொண்ட காட்சிகள் தான். அதே நேரம் ஒட்டுமொத்தமாக இது சாத்தியமா? என்ற வினாவைப் பெரிய வினாவாக எழுப்பிக் கொண்டே இருக்கும் படமாகப் பார்வையாளர்கள் முன்னால் விரித்து நகர்த்திக்கொண்டே இருக்கிறது.

படையெடுக்கும் சினிமாச் செயலிகள்

படம்
இவ்வகைப் படங்களுக்கெல்லாம் மேற்கத்தியப் படங்களே முன்மாதிரிகள். தனிமனித மூளையில் உருவாகும் சிக்கல்கள் எவ்வகையான குற்றச்செயல்களாக வெளிப்படுகின்றன என்பதை அவற்றோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளோடு விவாதிக்கும் படங்களை எடுப்பார்கள். அதற்காக அதன் ஆழத்திற்குள் சென்று விவாதிக்கும் காட்சிகளும் உரையாடல்களும் இடம்பெறும். ஆனால் இப்போது இணையவழித் திரையிடல்களில் வரும் இந்திய/ தமிழ்ப் படங்கள் அவற்றை மேல்கட்டுமான நிலையில் விவாதித்து நகர்கின்றன.

அவதாரம் : எப்போதும் நினைவில் இருக்கும் சினிமா.

படம்
தமிழ் சினிமா பரப்பில் தேர்ந்த நடிப்புக்கலைஞர்கள் என்ற வரிசையில் அறியப்படும் பெயர்களுள் ஒன்று நாசர். அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் சினிமா அவதாரம்(1995). கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட அந்தப் படம் பல காரணங்களுக்காக இப்போதும் நினைவில் இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல; வெகுமக்கள் ரசனைக்கான படங்களை மட்டும் பார்த்துவிட்டுக் கடந்துவிடும் பலருக்கும் நாசர் என்ற நடிகரின் பெயரைச் சொன்னவுடன் அவர் இயக்கிய ‘அவதாரம்’ படமும் நினைவுக்கு வருவதைக் கவனித்திருக்கிறேன். தமிழ்ச் சினிமாக்களைப் பற்றி நண்பர்களோடு நடக்கும் கலந்துரையாடலில் உங்கள் நண்பர்களில் ஒருவர் அந்தப் படத்தை நினைவூட்டிப் பேசுவதைக் கேட்டிருக்கலாம். அறிவுத்தளத்திலும் பொதுத்தளத்திலும் நினைவூட்டிப் பேசப்படும் படங்கள் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றுப் போக்கில் ஒரு இடத்தைப் பிடித்துத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. அதே நேரம் அவதாரம் முதன்முதலில் வெளிவந்தபோது பெருந்திரளான மக்களால் அதிகம் பார்க்கப்படவில்லை என்ற உண்மையையும் இங்கே நினைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. வணிகரீதியான வெற்றி என்ற எல்லையைத் தொடும் அளவுக்குப

முழுமையைத் தவறவிடுகின்றன

படம்
  சில வெற்றிப்படங்களில் - தனித்தன்மை கொண்ட நாயகப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஸ் என்ற நடிகையை மையப்பாத்திரமாக்கி எடுக்கப்பட்டுள்ள டிரைவர் ஜமுனாவும் இணையவெளிப்படங்களின் பொதுத்தன்மையோடுதான் வந்துள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால் , முழுமையைத் தவறவிட்ட இன்னொரு படமாகவே இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் குற்றப் பின்னணி , ரகசியம் , திடீர் திருப்பம் , எதிர்பாராத முடிவு என்ற கட்டமைப்போடுதான் எடுக்கப்படுகின்றன. அந்தப் பொதுத்தன்மை இந்தப்படத்திலும் இருக்கிறது.

ரஜினிகாந்தின் பாபா: ஆன்மீக அரசியல்

படம்
பாபா படத்தை இரண்டு தடவை பார்த்தேன்.  முதல்நாள் தீவிரமான ரசிகர்களுடன் – அவா்களின் ஆரவாரத்துடன், ஆராதனைகளுடன், ஆவேசத்துடன் படம்பார்த்தபின் திரும்பவும் பத்தாவது பார்த்தேன்;     பின்னிரவுக் காட்சி, டிக்கெட் வாங்குவது அவ்வளவு சிரமமாக இல்லை. பத்து ரூபாய் கூடுதலாக விற்றார்கள். இருபது ரூபாய்க்குப் பதில் 30 ரூபாய். மணி 10.25க்கு அரங்கிற்குள் நுழைந்தபோது, பாதி அரங்கம் காலியாக இருந்தது.

காட்சிகள் நகர்கின்றன; கனவுகள் சிதைகின்றன

படம்
ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக் குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் சமூக ஊடகங்களின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது சினிமா உலகம் அல்ல; பத்திரிகை உலகம் என்றே சொல்வேன்.

சீதாராமம் என்னும் நாடு தழுவிய சினிமாவும் விருமன் என்னும் ஊர் தாண்டாத சினிமாவும்

படம்
சீதாரா(ம) ம், விருமன் -இரண்டும் அடுத்தடுத்துப் பார்க்கக் கிடைத்த சினிமாக்கள். முன்பு போல் திரையரங்குகளுக்குப் போய்ப் படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்ட சூழலில் இரு படங்களையும் இணையதளங்கள் வழியாகவே பார்க்க முடிந்தது.

சாணிக்காயிதம்: பழிவாங்குதலின் குரூரம்

படம்
  பழிவாங்கும் உணர்ச்சி ஒவ்வொரு தனிமனிதர்களுக்குள்ளும் உறைந்து கிடக்கிறது. தனக்கு ஏற்படுத்தப்பெற்ற அவமானம், பொருள் இழப்பு, உடல் கேடு, மனநலப்பாதிப்பு போன்றன உறைந்து கிடக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை மேலெழுப்பிக் கொண்டுவந்து அவற்றுக்காரணமானவர்கள் மீது திரும்பிவிடும் வேலையைச் செய்துவிடும் என்பது உளவியல். மேலெழும்போது அவ்வுணர்ச்சிகள், தனக்குத் தரப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் எனத் திட்டமிடும். அத்திட்டமிடும்போது சுற்றியிருக்கும் சூழலையும் சமூக நிறுவனங்களையும் பற்றிக் கவலைகொள்ளாது முன்னேறிக்கொண்டே இருக்கும்.

டாணாக்காரன் – வணிகச் சட்டகத்திற்குள் பொறுப்பான சினிமா

படம்
பொதுவாக நான் எழுதும் சினிமா விமரிசனத்தில் இந்தப் படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள் எனப் பரிந்துரை செய்வதில்லை. ஆனால் அதை இப்போது மாற்றிக்கொண்டு டாணாக்காரன் சினிமாவை அனைத்துத் தரப்பினரும் பார்க்க வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறேன். குறிப்பாகக் காவல் துறையில் பணியில் இருப்பவர்களும், காவல் துறைப் பணிகளில் சேர விரும்புகிறவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படம் வெளிப்படுத்தும் விவாத முறை, சமூகப் பார்வை, கலையியலை விட்டு விலகாத நேர்மை ஆகியன உணரப்பட்ட நிலையில் பின்னோக்கிய நிகழ்வொன்றைச் சொல்லி எனது பரிந்துரையைத் திரும்பவும் சொல்லத் தோன்றுகிறது. அந்நிகழ்வைப் பின்னர் குறிப்பிடலாம். இப்போது படத்தைப்பற்றிப் பேசலாம்.

தமயந்தியின் காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல்

படம்
தமயந்தியின் முதல் படம் தடயம். வணிக சினிமாவின் சூத்திரங்களைப் புறமொதுக்கி விட்டு, ஆண் – பெண் உறவின் எதிர்பார்ப்புகளையும் நுட்பமான தவிப்புகளையும் முன் வைத்த படம். தனது சினிமாவின் விவாதப்பொருளில் மாற்றுத் தளத்தைத் தேர்ந்தெடுத்தது போலவே தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் அந்தப் படத்தில் தனக்கென ஒரு மாற்றுத் தடத்தில் பயணம் செய்திருந்தார்.

கடைசி விவசாயி - கலையியல் முழுமையும் கருத்தியல் குழப்பங்களும்

படம்
  சினிமா, காட்சி வழியாகப் பார்வையாளர்களோடு தொடர்புகொள்ளும் கலைவடிவம் என்பதை முழுமையாக நம்பி எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனது சினிமா ‘பார்க்கும்’ பழக்கம் தொடங்கிய காலத்திற்குப் பின் எடுக்கப்பட்ட சினிமாக்களிலிருந்து ஒரு பட்டியலைத் தரலாம்: