இடுகைகள்

கல்வியுலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசுக்கல்லூரிகளில் தமிழ்க்கல்வி

படம்
தமிழ்நாட்டரசு இனி, அரசுக் கல்லூரிகளைத் தொடங்காது என்றொரு முடிவை 1990- களில் எடுத்தார் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா. அந்த முடிவைக் கொஞ்சம் மாற்றி, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் எல்லைக்குள் உறுப்புக் கல்லூரிகளைத் தொடங்கி நடத்தலாம் என்ற அறிவிப்பைச் செய்தார் பின்னர் வந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதன்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் கிராமப்புறங்களில் உறுப்புக் கல்லூரிகளைத் தொடங்கின. 

கல்விச்சந்தை - 2023

படம்
எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழுதுபோக்கு, வேளாண்மை என எல்லாமே சந்தையின் தேவைக்கானதாக மாறிவிட்டன. கல்வியும் இப்போது கல்விச்சந்தை என்ற சொல்லோடு சேர்ந்தே குறிப்பிடப்படுகின்றது.

தேர்வுமுறைகள் மாற்றப்பட வேண்டும்.

படம்
தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு அறிமுகப் படுத்தப்பெற்ற பின்னணியில் தமிழகப் பள்ளிக்கல்வி வாரியம் பள்ளிப்பாடங்களைச் சீரமைப்புச் செய்வது தொடர்பாகவும், தரமுயர்த்துவது தொடர்பாகவும் ஆரம்ப நிலையில் பல்வேறு விவாதங்களை நடத்தியது. மையப் பள்ளிகள் வாரியப் பாடங்கள், சிறப்பான கல்வியை வழங்கும் கேரளப்பள்ளிக் கல்வி வாரியம் மட்டுமல்லாமல், வெளிநாடுகள் சிலவற்றின் பாடத்திட்டங்களையும் பெற்று ஒப்பிட்டுப் பேசினார்கள் கல்வியாளர்கள். ஆரம்ப நிலைப்பேச்சுகள் தாண்டி, பாடங்கள் எழுத வழிகாட்டப்பட்டன. நானும் ஒரு குழுவில் தமிழ்ப் பாடங்கள் எழுதும் குழுவில் இருந்தேன்..

குழுக்கள் - கருத்துகள் - செயல்பாடுகள்

படம்
நிறுவனங்களின் செயல்பாடுகளில் பலதரப்புக் கருத்துகளும் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குழுக்களை அமைத்தல் நடைமுறைச் செயல்பாடாக இருக்கிறது. அரசர்களின் அதிகாரம் செயல்பாட்டில் இருந்த காலத்தில் அரசர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல அமைச்சர்கள் குழுக்கள் இருந்தன என்பதை வரலாற்றுக்குறிப்புகள் தருகின்றன. எண்பேராயம், ஐம்பெருங்குழு போன்ற பெயர்களைத் தமிழ்க் கல்வெட்டுகள் சொல்கின்றன. வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி - நியமனம், குலுக்கல் முறைத் தேர்வுகள் வழியாக உருவான அக்குழுக்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்கமுடியும். முடிவு எடுக்கும் - செயல்படுத்தும் அதிகாரம் அரசர்களின் கையில்தான் இருந்தது.

பயிலரங்கு: பதிவுகளும் படங்களும்

படம்
தங்கள் பணிகளும் கருத்துகளும் தொடர்ந்து பேசப்பட வேண்டும் என நினைக்கும் பேராசிரியர்கள் தாங்கள் பணியாற்றிய பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் தங்கள் பெயரில் அறக்கட்டளைகளை நிறுவித் தருகிறார்கள். அப்படி நிறுவப்படும் அறக்கட்டளைகள் தொடர்செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். சில இடங்களில் பொறுப்பான தலைமைகளும் ஆர்வமிக்க ஆசிரியர்களும் இருக்கும் நிலையில் தொடர்செயல்பாடுகள் உறுதிப்படும். பல பல்கலைக்கழகங்களில் அது சாத்தியப்படாமல் போயுள்ளன.

கோவையோடு ஞானியும்

படம்
கோவை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். சந்தித்தவர்களில் - மேடையில் அவரின் பெயரைக் குறைந்தது பத்துப்பேராவது உச்சரித்திருப்பார்கள். கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருக்கும் இந்த இரண்டு மாதத்தில் நான் சந்திக்கும் பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என்பதும் சொல்லப்படுகிறது. ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்துள்ளார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிகிறது.

அரசுத்துறைகள் கவனிக்க வேண்டிய ஒன்று

படம்
இப்போது நான் பணியிலிருக்கும் கோவை குமரகுரு கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.இந்த ஆண்டின் கல்லூரிக்கான இலக்குகள், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடங்கள், பாடங்களைத் தாண்டிய வாய்ப்புகள், நடத்தவேண்டிய விழாக்கள், கொண்டாட்டங்கள் குறித்த திட்டமிடல்களைக் கல்லூரி முதல்வரோடு கலந்தாலோசித்து துறையின் தலைவர்கள் செய்தார்கள்.

வெளிப்பட வேண்டும்; வெளிப்படுத்த வேண்டும்: போலந்து கல்வி முறை பற்றி ஓர் அறிமுகம்.

படம்
கல்விச் சாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடங்கி ஒவ்வொரு கட்டத்தையும் இந்தியப் பெற்றோர்கள் தவிப்போடு தான் கடக்கிறார்கள். தவிப்பிலேயே பெரிய தவிப்பு பள்ளிப்படிப்புக்கு முந்திய பாலர் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்களில் இடம்பிடிப்பதாக இருக்கிறது. பாலர் பள்ளியைத் தொடர்ந்து தங்கள் மனம் விரும்பும் ஒரு பள்ளியில் இடம் கிடைக்கும் என்றால் இந்திய நடுத்தரவர்க்கமும் மேல் நடுத்தர வர்க்கமும் அசையும் அசையாச் சொத்தையெல்லாம் விற்றுக் கட்டிவிடத் தயாராக இருக்கிறார்கள். முந்தின நாள் இரவிலேயே பள்ளிவாசலில் படுத்து வரிசையில் நின்று விண்ணப்பப் படிவம் பெற்றுப் பணத்தைக் கட்டிவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கவனிக்கும் பொறுப்பைத் தக்காரிடம் ஒப்படைத்துவிட்டதாக நம்பும் மனோவியாதியைப் போக்கும் மருந்து இந்தியாவில் கிடைப்பது அரிது. அதைவிடக் கூடுதலான மனத்திருப்தியைத் திருப்தியான கல்லூரி ஒன்றில் தன் பிள்ளையைச் சேர்த்துவிட்ட பெற்றோர்களிடம் காண முடிகிறது.

காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி

படம்
  காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்துள்ளது   குமரகுரு கல்வி நிறுவனங்களில் கலை அறிவியல் கல்லூரி.     

விக்கிபீடியாவும் நானும் பிறகு தமிழ் விக்கியும்

படம்
இணையப்பக்கங்களில் எனது எழுத்துகளைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கி இப்போது 15 ஆண்டுகள் ஆகின்றன. 2007 முதல் நான் நடத்திவரும் அ.ராமசாமி எழுத்துகள் https://ramasamywritings.blogspot.com/ என்ற வலைப்பூவில் என்னைப்பற்றி என்ற பகுப்பின் கீழ் https://ramasamywritings.blogspot.com/p/blog-page_23.html என்னைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளேன். ஆனாலும் கூகிளின் தேடுபொறியில் அ.ராமசாமி எனக் தமிழில் தட்டச்சு செய்தால் முதலில் வந்து நிற்பன தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்களே.

2021 - இது தோல்வியின் கதை

படம்
டிசம்பர் 6 ஆம் தேதி பிற்பகல் 4.35 -க்கு அழைத்த தொலைபேசி 11-12-2021 பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராஜ்பவனில் ஆளுநரைச் சந்திக்க வேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான கலந்துரையாடல் இது எனச் சொல்லிவிட்டு வைத்துவிட்டது. அழைத்தவர் ஆளுநரின் தனிச் செயலக அதிகாரி என்று சொன்னார். கூடுதல் தகவல்களைக் கேட்க நினைத்துத் தொடர்ந்த நிலையில் வைத்துவிட்டார்.

தூரத்துப் பச்சைகளும் கானல் நீரும்

படம்
தூரத்துப்பச்சை என்ற உருவகத்தை கானல் நீர் என்ற உருவகத்தொடரின் நேர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம்; எதிர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம். அப்படியான புரிதல் வெளியில் இருப்பதில்லை. புரிந்து கொள்ள நினைப்பவரின் உள்ளே இருக்கிறது.  எல்லோரும் விரும்பி முழுமனத்தோடு தூரத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போகிறார்கள் என்பதில்லை. ஒரு பள்ளிக்கூடத்தின்/ கல்வி நிலையத்தின் அடிப்படை வசதிகள் பக்கத்தில் இருந்தால் தூரத்துப்பள்ளியைத் தெரிவுசெய்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பக்கத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால் தூரம் தூரமாய்ப் பயணம் செய்யும் மாணவிகளை நான் எனது பணிக் காலத்தில் சந்தித்திருக்கிறேன்.  குறிப்பாகத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெண்பிள்ளைகளின் அலைச்சல் கதைகளைக் கேட்டுச் சகித்துக்கொள்ள முடியாமல் கொஞ்சம் ஆறுதல் மட்டுமே சொல்வேன். 

பயணங்களும் பயணிகளும்

படம்
இரண்டு மணிநேரப் பயணம் தான். இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர் கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

அருந்ததிராயின் தோழர்களோடு கொஞ்சதூரம்

படம்
மூன்று ஆண்டுகள் கற்பிக்கப்பட்ட நூலொன்றைப் பல்கலைக்கழகம் தனது  பாடத் திட்டத்திலிருந்து  நீக்கியிருக்கிறது.   நீக்கச் செய்ததின் பின்னணியில் ஒரு மாணவர் அமைப்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களும் அதனை உறுதிசெய்கிறார்கள். அந்த அமைப்பு இப்போதைய அரசினை நடத்தும் கட்சியின் துணை அமைப்பு. இந்தத் தொடர்புச் சங்கிலிகள் மூலம் பாடத்திட்டக்குழுக்களுக்குப் பேரச்சத்தின் நிழல் காட்டப்பட்டுள்ளது. நீக்கம் மட்டுமே முதன்மை நோக்கம் அல்ல. இதுபோன்ற புத்தகங்களைப் பற்றிய சிந்தனையே வரக்கூடாது என்பதும் நோக்கமாக இருக்கக் கூடும் 

தரம் உயர்த்துதலும் திறன்மிகு கல்விநிறுவனமாதலும்

படம்
தரம் உயர்த்துதல் நான் பணியாற்றிய திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

தேர்வுகள்- தேர்வுகள்- எழுதும் தேர்வுகள்

நாம் நமது மாணவர்களின் அறிவை மதிப்பெண்களின் வழியாக அளவிடுகிறோம். மதிப்பெண்களை வழங்குவதற்கு நாம் பின்பற்றும் முதன்மையான முறை தேர்வுகள். அறிவின் அளவைத் தீர்மானிப்பதில் தேர்வுகளின் இடம் தவிர்க்கமுடியாதவைதான். ஆனால் தேர்வுகள் - எழுத்துத்தேர்வுகளும் மதிப்பெண்களும் மட்டுமே அறிவை அளக்கும் கருவிகள் அல்ல. நமது நாட்டில் பின்பற்றும் தேர்வுகளும் மதிப்பெண்களும் இளம்வயதினரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் தடுத்து நிறுத்த - பின்னால் தள்ளிவிட நினைக்கும் ஒருமுறையாக இருக்கிறது.  மதிப்பெண்களின் எதிர்மறைத் தன்மை கருதியே உலகநாடுகள் பலவும் மதிப்பெண்களுக்குப் பதிலாக, மதிப்பலகுகளால்  -Credits- மாணாக்கர்களின் நிலையைக் குறிக்கின்றன. நேற்று இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதேசியக் கல்விக்கொள்கை -2020 அடுத்தடுத்துத் தேர்வுகளைப் பரிந்துரைத்துள்ளது.

குறிப்பான வகை மாதிரி (Case study)ஆய்வுகளின் சிக்கல்கள்

  ராஜன்குறை உள்ளிட்டவர்கள் மேற்கொண்டதாக ஜெயமோகன் மேற்கோள் காட்டும் அந்த ஆய்வு குறிப்பான வகை மாதிரி ஆய்வு. இவ்வகை ஆய்வுகள் எப்போதும் ஒற்றைப்பரப்பை அல்லது குழுவை அல்லது நிகழ்வை ஆய்வுப் பொருண்மையாக எடுத்துக்கொண்டு அனைத்துத் தரவுகளையும் திரட்டி அந்த எல்லைக்குள்ளேயே நின்று முடிவுகளைத் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளக் கூடியன. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்து இந்தியாவிலும்/ தமிழகத்திலும் ஏதாவதொரு கிராமத்தில் தங்கி ஆய்வுசெய்த அனைவரும் இவ்வகை ஆய்வுகளையே செய்து வழிகாட்டினர். அப்படிச் செய்யப்பட்ட ஆய்வுகள் இங்கே கொண்டாடப்பட்டன என்பதைக் கல்வியுலகம் அறியும்.

கற்றல், கற்பித்தல், திட்டமிடுதல்

ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் எழுத்து, செயல்பாடு, திட்டமிடல், முன்னெடுப்பு எனப் பல நிலைகளில் கல்விப்புலத்திற்குள் செயல்பட்டவன் என்ற நிலையில் நான் பணியாற்றிய பல்கலைக்கழகங்களைத் தாண்டிப் பிற பல்கலைக்கழகங்களிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தமிழியல் சார்ந்து மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்விப்புலத் திட்டமிடல்களில் கருத்துரைப்பவனாகவும் இருந்துள்ளேன். அதன் காரணமாகப் பல நேரங்களில் கல்வியுலகச் சிக்கல்களைப் பற்றிய கருத்துரைகளை எழுதியுள்ளேன். அப்படியெழுதிய சில குறிப்புகளின் தொகுப்பு கல்வியில் கொள்கையின்மை நவம்பர் 30, 2011 நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி; வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இ

கொரோனாவுக்குப்பின் கல்வி: இணையவழிக் கற்பித்தல்

படம்
ஒப்புதலும் ஒவ்வாமையும் ----------------------------------------------------------------- பணி ஓய்வுபெற்று ஓராண்டு முடிந்து விட்டது. பணியில் இருந்திருந்தால் இணையவழிக்  கற்பித்தலில் ஈடுபட மனம் ஒவ்வாமையில் தவித்துப் போயிருப்பேன். கணினியைப் பயன்படுத்தும் பழக்கமும் அறிதலும் இல்லாததால் ஏற்படக்கூடிய தவிப்பு அல்ல. வகுப்பறைக் கற்பித்தலில் இருக்கும் மன ஒப்புதல், ஈடுபாடு காரணமாக ஏற்படும் தவிப்பு அது.

தேர்வுகள் -வேலைகள்- தரம்

தினக்கூலிகளுக்குப் பதில் மணிக்கூலிகள்  கல்லூரிக் கல்வியில் இணையவழி வருகைப் பதிவைப் பல்கலைக்கழக மானியக்குழு இப்போது வலியுறுத்துகிறது. அதனை ஏற்றுப் பல்கலைக்கழக கல்விக்குழுக்கள் விதிகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு உள்மதிப்பீட்டுத் தேர்வின் போதும் அதற்கு முன்னர் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கணக்கிடப்பட வேண்டும் எனக் கடுமையாகச் சொன்னபோது ஒரு கல்லூரியின் முதல்வர் அதனை மறுத்துப் பேசினார். மாணாக்கர்களின் வருகைப்பதிவில் இவ்வளவு கறாராக இருக்க வேண்டியது அவசியமா? எனக் கேள்வி எழுப்பியதோடு, இப்படியான கறாரான வருகைப்பதிவு கல்லூரியில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும் என்றார். இந்த ஆண்டுமுதல் வருகைப்பதிவை கறாராகப் பின்பற்றினால் இப்போது இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் மாணாக்கர்களில் பலரும் இடையில் படிப்பைத் தொடராமல் நின்றுபோகும் (drop out ) வாய்ப்பும் உண்டு என்று வருத்தப்பட்டார்.