December 31, 2018

கனா: சிதறும் இலக்குகள்

2.0 சினிமாவை நெல்லையில் ஒரு தடவை பார்த்தேன். அது ஒற்றை அரங்கு. பார்வையாளர்களாக வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தரவயதினர். குழந்தைகள் குறைவு. இரண்டாவது தடவை சென்னையில். அது பல அரங்குகள் கொண்ட சினிமா வளாகம். அங்கே குழந்தை, குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக அந்தப் படத்திற்கு வரிசை கட்டுகிறார்கள். வேறு படங்களுக்குப் போகும்போதும் கவனிக்கிறேன்.

December 28, 2018

கையாளுதலின் வீழ்ச்சி

ஒரு பொருளை அல்லது அமைப்பைக் கையாளுவதைத் திறன் என்ற சொல்லாலும் குறிக்கலாம்; கலை என்ற சொல்லாலும் குறிப்பிடலாம்.

கையாளப்படுவதின் வழியாகக் கருத்துகளும் உணர்வுகளும் உருவாக்கப்படும்போது கலையாக அறியப்படும். கலையாகக் கருதப்படுவதற்குக் காரணமான கையாளுதலுக்கு வெற்றி அல்லது தோல்வி முதன்மையாக எதிர்பார்க்கப் படுவதில்லை. ஆனால் அரசியலிலோ, பொருளியல் துறையிலோ கையாளுதலின் வெளிப்பாட்டைத் திறன் என்றே சொல்வார்கள்.

December 27, 2018

நேரந்தவறாமையின் அடையாளம்


· 
Image may contain: 1 person, smiling
நினைவுகள்: பேரா.க.ப.அறவாணன்
============== =================== 
மரணங்களை நிறுத்துவது மனிதர்கள் கையில் இல்லை. முதுமைக்குப் பின்னான மரணங்களுக்கு வருந்தவேண்டியதும் இல்லை. மரணத்திற்குப் பின்னானதொரு வாழ்க்கை இருப்பதாக நம்புபவர்கள் பிரார்த்தனை செய்து அவ்வாழ்க்கைகுள் அனுப்பி வைக்க முயல்கின்றனர். தெரிந்தவர்களின் மரணங்களை- அக வாழ்க்கையிலும் புறநிலைப் பணிகளிலும் தொடர்புடையவர்களின் மரணச்செய்திகளை அடுத்து அவர்களை நினைத்துக் கொள்வது அனைவரும் செய்வது. இரங்கி நிற்கும் மனம் நினைவுகளில் வழியாக அவர்களது சந்திப்புகளையும் பேசிய பேச்சுகளையும் நினைத்துப் பின்னோக்கிப் பயணம் செய்கிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறை நிலையிலோ ஏதாவது கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் அந்த நாளைப் பயன்படுத்திக்கொள்கிறது

வெண்மணி நினைவுநாள்- சில குறிப்புகள்

அறுபத்தியெட்டில கீழவெண்மணியில் நடந்த அக்கிரமம்; 
நாம கண்ணுங்காதும் வாயும்பொத்தி இருந்த அக்கிரமம். 
இந்தமாதிரி கொடுமைகள் இங்கு எங்குமே நடக்கிறது

இந்தியாவில் எங்குமே நடக்கிறது.

December 23, 2018

பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி

உடனடி நினைவு

=================    
எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார். வாரத்திற்கு இரண்டு நாள் வருவார். வருபவர் மாணவிகளோடும் மாணவர்களோடும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருப்பார். மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைத்த பெரும்பாலான நாடகங்களை வாசித்தவர். ஆண்டன் செகாவின் செர்ரிப்பழத்தோட்டம் நாடகத்தைப் பாடம் நடத்தியபோது நானும் ஓரத்தில் மாணவனாக அமர்ந்து கேட்டிருக்கிறேன். மாணவர்களைத் தள்ளி நிறுத்தாத உரையாடல் அவருடையது.