இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் சினிமா: காட்டப்படுவதும் சொல்லப்படுவதும்

ஷங்கரின் “பாய்ஸ்“ திரைப்படம் திரைக்கு வந்த வேகத்தில் வேகமாகத் திரும்பிவிட்டது அவருடைய முந்தைய படங்களைப் போல வணிக வெற்றியைப் பெறவில்லை. அப்படித் தோற்றுப் போனதில் பின்னணியில் அப்படம் குறித்து எழுந்த எதிர்ப்புகளுக்கு எந்த அளவு பங்கு இருந்தது என்பது பற்றி யாரும் உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன என்பது உண்மை.

வீடற்றவர்களின் கதைகள்

படம்
மனிதர்களின் அகவுலகம் என்பது எப்போதும் புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட உலகமாகவே இருக்கிறது . ஒருவரின் நேரடி அனுபவம் என்பதுகூட ஒருவிதத்தில் புனைவுதான் . நேரடி அனுபவம்போல எழுதப்பெற்ற புனைவுகள் நம்பத்தகுந்த புனைவுகளாக இருக்கின்றன என்று சொல்லலாமேயொழிய , அவையெல்லாம் உண்மை என்ற சொல் தரும் பொருளைத் தந்துவிடுவதில்லை . எல்லாவகை எழுத்துகளுமே , நம்மைத் தவிர்த்து இன்னொருவரைப் பார்க்கும்போதும் , அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும் , நம்மிடத்தில் நிறுத்திப்பார்த்து அவராக நம்மை நினைத்துக்கொள்வதில் விரிகிறது புனைவு .

நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்

படம்
கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.

தற்காலிகத்தைக் கொண்டாடுதல்

படம்
இதுதான் கவிதையின் வடிவம்; நாடகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும்; சிறுகதையின் தொடக்கமும் முடிவும் இப்படித்தான் இருக்கவேண்டுமென வலியுறுத்தும் நபர்களைப் பின்னுக்குத்தள்ளி எழுத்தும் பனுவல்களும் கடந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களில் மட்டுமல்ல; எல்லாவகையான செயல்பாடுகளிலும் இயங்குநிலையிலும் வடிவச்சீர்மையை வலியுறுத்தும் போக்கு முடிந்துவிட்டது. நெகிழ்ச்சியும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதாகவும், மாறாமலேயே தோன்றுவதாகவும் இருக்கும் வடிவங்களே கொண்டாடப்படும் வடிவங்களாக நம்முன்னே அலைகின்றன.