கலை, இலக்கியத் தளங்களின் நிகழ்காலப் போக்கு எவ்வாறிருக்கிறது என்பதையறியக் கூட்டங்களில் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்ற நிலை 1990 களுக்குப் பின் இல்லை. அதுவும் முகநூலின் வருகை ஒவ்வொருவரையும் ஆகக் கூடிய தனியர்களாக வாழும்படி ஆக்கிவிட்டது. உலகத்தின் எந்தமூலையிலும் வாழ்ந்துகொண்டு, தமிழ்நாட்டில் இருப்பதுபோல உணரமுடியும் என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டது.
என்றாலும் நண்பர்களைப் பார்த்துப் பேசுவது என்பது கூட்டங்களில் வாய்க்கும் பலன். இந்தப் பலனுக்காகவே சென்னைக்கு வரும் ஒவ்வொருமுறையும் எதாவதொரு நிகழ்வில் கலந்துகொள்வது வாடிக்கை. கடந்த நான்குமாதமாகச் சென்னைக்கு வந்து திரும்பினென் என்றாலும், எங்குமே போகவில்லை. அதற்கான சொந்தக்காரணங்கள் இருந்தன.

இன்று இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவேண்டும். இரண்டும் விரும்பிக் கலந்துகொள்ளும் நிகழ்வுகளாக இருக்கின்றன. இரண்டும் கவிதையும் நாடகமும் இணையும் நிகழ்வுகள். மதுரை நிஜநாடக இயக்கம் மூன்று நாள் நாடகவிழாக்களை நடத்திவிட்டு ஒருநாள் நாடகவிழாவை நடத்தும் திட்டத்தில் இறங்கியது. அதற்கெனத் தேர்வுசெய்த நாள் டிசம்பர் 31. பகலிலும் முன்னிரவிலும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, அடுத்துவரும் புத்தாண்டை வரவேற்கப்போய்விடலாம் என்ற எண்ணத்தில் திட்டமிடப்பட்டது. முதல் நிகழ்வு நடத்திய ஆண்டு 1988 என்று நினைக்கிறேன். ஓவியம், கவிதை, நாடகம், நேர் சந்திப்பு என ஒருநாள் முழுவதும் மதுரை குப்தா அரங்கில் நடந்த அந்த ஒருநாள் விழாவின் தூண்டுதலே பின்னர் தமிழகமெங்கும் நடந்த கலை இலக்கிய இரவுகளுக்குத் தூண்டுதல்.

30 ஆண்டுகளாகப் ப்ரசன்னா ராமஸ்வாமி எனது நண்பர். நாடகம் தான்
இருவரும் சந்தித்த புள்ளி. கூத்துப்பட்டறையின் பகுதியாகவே அவரது அறிமுகம் எனக்கு. கூத்துப்பட்டறைக்காக மட்டுமல்லாமல் தனது மனம் விரும்பித் தனியாகவும் நாடகங்களைச் செய்யும் அவரது மேடையேற்றங்கள் அழகியலையும் அரசியலைச் சரிவிகிதமாகக் கலக்கும் நோக்கம் கொண்டவை. சமகால அரசியல் சொல்லாடல்களை நாடகம் தூண்ட வேண்டுமென நம்பும் ப்ரசன்னா நவீனத்துவத்தின் சாராம்சங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார். அவ்வெளிப்பாடுகளில் இந்தியத்தனத்தைவிட, உலகுதழுவிய பார்வை இருக்கிறது என்பது எனது கணிப்பு. மேடையேற்றத்தெரிவுசெய்யும் பிரதிகளை மறுவிளக்கம் செய்வதில் கவனம் செலுத்துபவராகவே இருந்துவருகிறார். அதற்காக எழுதப்பெற்ற பல பிரதிகளுக்கு இடைப்பிரதிகளையும் உருவாக்கியிருக்கிறார். இசை, கவிதை, ஓவியம், நடிகனின் உடல் என முழுமை அரங்கைத் தருவதில் சளைக்காமல் வேலைசெய்யும் ப்ரசன்னாவின் நெறியாள்கையில் ந.முத்துசாமியின் காண்டவ வனம் மறுவிளக்கத்தோடு அரங்கேற உள்ளது. அதனையும் இன்று பார்க்கவேண்டும். இந்தவாரம் சென்னை வந்ததின் பேறுகள். .

No comments :
Post a Comment