June 25, 2017

தேடிப்படிக்கவேண்டிய நூல்கள்

இக்கால மொழியியல் என்ற தலைப்பில் 2011 இல் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலின் முந்திய வெளியீடு 1984. அவர் எனது ஆசிரியர் என்றாலும் இந்த நூலில் இருக்கும் செய்திகளை அவரிடம் நான் கற்கவில்லை. அமெரிக்கன் கல்லூரியில் நான் பட்டப்படிப்புப் படித்த காலத்தில் முதலிரண்டு ஆண்டுகளில் அவரைப் பார்த்தது இல்லை. அப்போது அமெரிக்காவில் இருந்தார்.

கி.ரா.வின் புதிய வரவு: பெருங்கதை


முன்பெல்லாம் நண்பர்களின் எழுத்துகள் கையெழுத்தில் வாசிக்கக்கிடைக்கும். நீலவண்ண எழுத்துகள், கறுப்பு வண்ண எழுத்துகள் அதிகம் என்றாலும் பச்சை, சிவப்பு, ஊதா வண்ணங்களிலெல்லாம் எழுதும் பேனாக்கள் வந்தபோது அவற்றில் எழுதிப் பார்க்கும் எழுத்தாளர்கள் உண்டு. எழுத்தாளர்களின் கையெழுத்திலேயே வாசிக்கக் கிடைக்கும் பிரதிகள் இப்போது குறைந்துவிட்டன. அப்படிக்கிடைத்தாலும் டைப் செய்யப்பட்டு கணினி வழியாகவே வந்துசேர்கின்றன. அப்படிப் படித்த எழுத்துகளையும் பிறகு அச்சில் வாசிக்கும் ஆசை விலகுவதில்லை.

June 17, 2017

இலக்கிய ஆய்வுகளும் பிறதுறை அறிவும்: சில குறிப்புகள்


தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங்களுக்குள் மாறிவிட்டன. புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர்குழுக்கள்பரிந்துரைக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன. கல்வித்துறை சாராத விமரிசனங்களும் ரசனை அனுபவத்திலிருந்து நுகர்வு திணிப்புபற்றிப் பேசுவனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. கல்விப்புல ஆய்வுகளும், சாராத ஆய்வுகளும் ஏற்படுத்திக்கொண்டுள்ள இம்மாற்றங்கள் வெறும் எண்ணளவு மாற்றங்கள் (Quantitative changes) மட்டும் அல்ல; பண்பு மாற்றங்களும் (Qualitative changes) கூட. தமிழில் நடந்துள்ள இந்த மாற்றம் இந்திய மொழிகள் பலவற்றிற்கும் பொருந்தக்கூடியது.

June 15, 2017

தேடிப்படித்த நூல்கள்-3

12
தமிழியற்புலத்தைத் தனது வளமான அறிவுத்திறனால் வளர்த்தெடுத்த அறிஞர்களுள் ஒருவர் க.கைலாசபதி. அவர் எழுதிய ஒவ்வொரு நூலுமே தேடித்தேடிப் படிக்கவேண்டிய நூல்கள் என்பதில் மாற்றில்லை. தமிழுக்குத் திறனாய்வுத்துறையை - கோட்பாட்டுத் திறனாய்வுகளை- அதன் உள்பிரிவுகளை அறிமுகம் செய்தவர்கள் பெரும்பாலும் அறிமுகநிலையிலேயே களைத்துப் போய்த் திசைமாறிவிடுவார்கள்.

June 14, 2017

தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்

முன்னுரை:தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது அதன் முதன்மை நோக்கம்  பாவியல் அல்லது கவிதையியல் என்பதற்கான வரையறைகளை உருவாக்குவது எனக் கருதத்தோன்றுகிறது. அக்கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது. கருத்தரங்கின் பொதுப்பொருள் தொல்காப்பிய மரபும் செவ்வியல் (சங்க இலக்கியங்களும்)என்பதனை மனங்கொண்டு, தொல்காப்பியர் கூறும் திணைப்பொருள் மரபை நவீன இலக்கியக் கோட்பாடான நிலவியல் பண்பாட்டியலோடு தொடர்புபடுத்தி அமைகிறது இக்கட்டுரை. தொல்காப்பியம் மூன்று பொருட்களைக் கவிதையின் உள்ளடக்கமாகக் கூறியுள்ளது இக்கட்டுரை கருப்பொருளின் இடம் பற்றிய நிலையை விவாதிக்கிறது. கட்டுரை உருவாக்கிக் கொண்ட கருத்தியல் நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கும் தரவுகளாகத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் அகநெடும்பாடல்கள் இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகளாக அமைகின்றன.

June 07, 2017

தேடிப் படித்த நூல்கள் -2

 சென்னை,108. தியாகராயர் நகர் உஸ்மான் சாலையிலிருந்த பாரதி நிலையம் வெளியிட்ட கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் மூன்றாம் பதிப்பு வந்த ஆண்டு1986. அதில் இடம்பெற்றுள்ள 'என்னுரை'என்னும் பகுதியில்,' தொகுத்த தமிழ்க்கனி பதிப்பகத்தாருக்கும் வெளியிட்ட பாரதி பதிப்பகத்தாருக்கும் நன்றி' எனத் திரு மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். அப்படிக்குறிப்பிட்டுள்ள ஆண்டு 1971. இந்தத் தொகுப்பை வெளியிட்ட காலகட்டத்தில் பாரதி பதிப்பகம் அவரது பலவகையான நூல்களையும் வெளியிட்ட பதிப்பக இருந்ததைக் கடைசிப்பக்கக் குறிப்பு தெரிவிக்கின்றது.

May 28, 2017

தேடிப்படிக்கலாம்

தமிழ் இலக்கியத்தை ஆழமாகக் கற்றலை விரும்பும் ஒருவர் வாசிக்கவேண்டிய நூல்கள் சில உண்டு. அவற்றை எழுதிய/ தொகுத்தளித்த அறிஞர்களின் பணியைப் பாராட்டவேண்டும். அவர்களின் பணிமுறைமையையும் ஆய்வுநோக்கத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கவேண்டும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தலைசிறந்த நூல்கள் இருக்கும் என்றாலும் ஏதாவது ஒருநூலையாவது வாசித்துப் பயிற்சிசெய்வது ஆய்வாளருக்குப் பயன்படும். அத்தகைய நூல்களை எழுதிய ஆசிரியர்களின் அனைத்து நூல்களும் முழுமையான ஆழத்தோடும் அகலத்தோடும் இருக்குமென்று நினைக்கவேண்டியதில்லை. சிலரின் கவனிக்கத்தக்க - தேடிப்படிக்கவேண்டிய நூல்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

May 25, 2017

சிதைவுகளின் முழுமை

தேசிய இன அடையாளம், வட்டாரவாதம், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள்,நாடோடிகள், மூன்றாம் பாலினர், மதங்களின் உட்பிரிவு நம்பிக்கைகள், சடங்குகள், வெளிப்பாடுகள், சாதியின் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் போன்றனவற்றை அடையாள அரசியல் சொல்லாடல்கள் என்ற அளவில் விவாதிக்கலாம்; விவாதிக்க வேண்டும்; அவையெல்லாம் சரிசெய்யப்படவேண்டும். அதை வலியுறுத்தும் அரசியல் விவாதங்கள், இவையெல்லாம் ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மையான தடைக்கற்கள் என்பதையும் மறுப்பதில்லை.

May 16, 2017

தேசிய அரங்கை உருவாக்குதல்: சில பிரச்சினைகள்

பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியக் கலைகளிலிருந்து உருவாக்கி, இந்திய நாடகம்  ( Indian theatre) ஒன்றைக் கட்டமைத்து விட முடியுமா..?

நவீன நாடகங்கள்: மேடையேற்றப் பிரச்சினைகள்

உள்ளடக்கம் தான்ஆதாரமானது. பெரும் தடைகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்று விட்டனவும்,பெறப் போராடிக் கொண்டிருப்பனவும் மட்டுமே நவீன என்பதில் அடங்கும்; பழைமைக்கு நவீனத்தில் இடமே இல்லை என்ற வரையறையில் கூட நவீன உள்ளடக்கம் பற்றி மட்டுமே கூறியிருப்பதாக நினைக்கிறேன். அப்படியானால் ‘நவீன வடிவம், நவீன மேடையேற்ற ரூபம் என்பவை என்ன..?
            நீங்கள் நினைப்பது சரிதான். அந்த வரையறை உள்ளடக்கம் பற்றியதுதான். ஓரளவு மற்றவைகளுக்கும்   பொருந்தக்கூடியதே.

May 12, 2017

நாடகத்தின் வடிவம்

நாடகத்தின் வடிவம் பற்றிப் பேசப்போனால் அதன் அடிப்படையான குணாம்சம் என்ன என்ற கேள்வி எழும். நாடகத்தின் அடிப்படையான குணாம்சம் முரண்( conflict) தானே.
  •             முரண்தான் அடிப்படையான குணாம்சம். வெவ்வேறு தளங்களில் - வெளிப்படையாகவோ, வெளித்தெரியாமலோ- முரண் அமைகின்றபொழுது நாடகம் வடிவம் கொள்கிறது.

May 10, 2017

படைப்பாக்க அரங்கியல்

படைப்பாக்க இசை, நடனம் பற்றிய தெளிவு தேவையாக உள்ளது sir -
அர்ச்சு அர்ஜுன் Archsu Arjun, மட்டக்களப்பு நிகழ்த்துக்கலை மாணவர்
--------------------------------------------------------------------------------------

May 04, 2017

வெள்ளெருக்குப் பூத்த நிலம்


இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத்தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு? மரணங்களைத் திட்டமிடவோ, தள்ளிப்போடவோ முயன்ற முயற்சிகளுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான்.

April 23, 2017

தமிழ்ச்சிந்தனை மரபைத்தேடும் பயணத்தில்

பிரிட்டானிய இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் பலவும் பின்காலனிய இந்தியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளன. இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டையும் சந்தித்துவருகின்றன.

April 16, 2017

பொதுவும் சிறப்புமாக நகரும் பிம்பங்கள் : சில தமிழ் ஆவணப்படங்களை முன்வைத்து.


தமிழ் வெளியைப் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படங்களைச் சென்னையில் மூன்று இடங்களில், ஒருவாரத்திற்குத்  (மார்ச் 13-19)திரையிட்டார் அமுதன்அமுதனின் அழைப்பை ஏற்றுக் கடைசி நாள் பெரியார் திடலிற்குத் தான் போக முடிந்தது.
கடைசிநாளில் கடைசியாகத் திரையிடப்படும் படம் கக்கூஸ் என்று அறிவுப்பும் இருந்தது. படம் ஓடக்கூடிய நேரம் 105 நிமிடங்கள். நான் பயணிக்கவேண்டிய நெல்லைவிரைவுரயில் கிளம்பும் நேரம். 20.10. அந்தப் படத்தைப் பார்க்கமுடியாமல் கிளம்ப வேண்டிய சூழல். சொர்ணவேலின்தங்கம்’, டாடா குழுமத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பெண்கவிகளைப் பற்றிய  ‘அவள் எழுதுகிறாள்சோமிதரனின்முள்ளிவாய்க்கால் சாஹா’, வெங்கடேஷ் சக்ரவர்த்தியின்  ‘பிளவுண்ட நகரம்: சென்னைஆகியன முடியும்போது நேரம் 19.30.

April 09, 2017

ஆய்வுத்தலைப்பைத் தேடியொரு பயணம்- சில குறிப்புகள்.

முன்னுரை: பல்கலைக்கழகப் பட்டங்களுக்கான  கற்கையாக ஆவதற்கு முன்பே இயல், இசை, நாடகம் என மூன்றாக அறியப்பட்டது. ஐரோப்பியக் கற்கைமுறை அறிமுகமாகிப் பல்கலைக்கழகக் கற்கைமுறைகள் வளர்ந்தநிலையில்  முத்தமிழ் என்ற தமிழ்ப்பரப்பு கலைப்புலத்தையும் அறிவியல் புலத்தையும் தனதாக்கத் தொடங்கி ஐந்தமிழ் என அறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாக மாறியது. பல்கலைக்கழகக் கற்கைகளில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு தாண்டி ஆய்வுப்பட்டங்களுக்கும் தமிழ் உரியதானது. வகுப்பறைப்படிப்பாக இல்லாமல் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கும் ஆய்வுப் பொருண்மைகளும்  ஆய்வுத் தலைப்புகளும் தேவைப்பட்டன.

April 06, 2017

பொதுப்போக்கிலிருந்து விலகுதல்

முனைவர் பட்டத்தை ஒருவர் எப்படி நினைக்கிறார் என்பதிலிருந்தே அவர் செய்யப்போகும் ஆய்வும் அமையும். ஆய்வுப்பட்டத்தை இன்று பலரும் வேலைவாய்ப்புக்கான அடிப்படைத்தகுதியாகக் கருதுகின்றனர். அந்த அங்கீகாரம் கையிலிருந்தால், அதை வைத்து எப்படியாவது ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ வேலை வாங்கிவிடலாம் என்பது அவர்களது கணிப்பு. அந்தக் கணிப்பு பிழையானதன்று. அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் போலச்செய்தல் முறையில் ஆய்வேடுகளைத் தருகிறார்கள். மதிப்பீட்டாளர்கள் குறைந்த அளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கும் மனநிலையில் ஆய்வேட்டை மதிப்பிட்டு முனைவர் பட்டம் வழங்கப் பரிந்துரை செய்கின்றனர்.

April 02, 2017

இடையீட்டுப் பிரதிகளின் சாத்தியங்கள் : காண்டவ வனத்தை முன்வைத்து


மார்ச் 18, சனிக்கிழமை, கூத்துப்பட்டறையின் தயாரிப்பரங்கில் ப்ரசன்னா ராமஸ்வாமி நெறியாள்கையில் மேடையேறிய காண்டவ வனம் என்னும்  நாடகப்பிரதியை  .முத்துசாமி நாடகங்கள் என்ற தொகுப்பில் வாசித்திருக்கிறேன். முழுமையாக இல்லாமல் சில காட்சிகளாக மேடையேறியதையும் பார்த்திருக்கிறேன். அம்மேடையேற்றம் நாடகம் எழுதப்பெற்ற 1991 ஆம் ஆண்டிலா? அதற்கடுத்த ஆண்டிலா? என்பது நினைவில் இல்லை.

March 30, 2017

எழுத்துக்காரர்களின் புலம்பல்கள்

             இலக்கியப்பட்டறைகளில் கலந்துகொள்ளத் தெரிவுசெய்யப்படும் பட்டியலில்                                இடம்பிடிக்க எப்படி எழுதவேண்டும் நண்பர்களே?

இப்படியொரு கேள்விக்குறியோடு காலபைரவன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவொன்றைப் போட்டிருந்தார். அப்பதிவைப் பலருக்கும் தொடுப்பு செய்திருந்தார். தொடுப்பில் என்னுடைய பெயரும் இருந்ததால் உடனடியாக என் பார்வைக்கு வந்தது. நான் உடனடியாக,
            இலக்கியப்பட்டறைகளா? பிற மாநிலங்களில்/ நாடுகளில் நடக்கும்                                         இலக்கியவிழாக்களா?
என்று கேட்டேன். என் கேள்விக்கு
            பட்டறைகள் பிறமாநில பிறநாடுகளில் நடப்பவைதான் ஐயா
என்றார்.
            பதிப்பகப் பின்னணிதான் முதன்மைக்காரணம். இதனை விரிவாக      எழுதவேண்டும். ஓரிரண்டு நாளில் எழுதுகிறேன்

March 21, 2017

நினைவுகளில் அலைதல்

ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ, இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும், மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும்   அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது  கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவாக்குகின்றன  சூழல் என்பது கவிதை உருவான சூழலாகவும் வாசிப்பவரின் சூழலாகவும் இருக்கிறது.

March 18, 2017

சென்னைக்கு வரலாம் நாடகம் பார்க்கலாம்

கலை, இலக்கியத் தளங்களின் நிகழ்காலப் போக்கு எவ்வாறிருக்கிறது என்பதையறியக் கூட்டங்களில் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்ற நிலை 1990 களுக்குப் பின் இல்லை. அதுவும் முகநூலின் வருகை ஒவ்வொருவரையும் ஆகக் கூடிய தனியர்களாக வாழும்படி ஆக்கிவிட்டது. உலகத்தின் எந்தமூலையிலும் வாழ்ந்துகொண்டு, தமிழ்நாட்டில் இருப்பதுபோல உணரமுடியும் என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டது.

February 10, 2017

பனிக்கால வாடையல்ல; அக்கினிக்கால வெக்கை

முன்னுரையாக ஒரு தன்னிலை விளக்கம்
கூட்டத்தில் ஒருவனாக இருப்பேன். கூட்டத்தோடு கூட்டமாக இருக்கவே விரும்புவேன். இணையமுடியாத கூட்டங்களைக் கூட வேடிக்கை பார்க்க ஆசைப்படுபவன். உள்ளூர்த் திருவிழாக்கள் மட்டுமல்ல; உலகத் திருவிழாக்களையும் பார்த்திருக்கிறேன்மதுரையின் சித்திரைத் திருவிழாவில் பல ஆண்டுகள் பங்கேற்றுத் திரிந்தவன். திருவிழாக்களில் மட்டுமல்ல; தேர்தல்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பரிப்புகள், அடக்குமுறைகள், புறக்கணிப்புகள், பலியிடல்கள், கொண்டாட்டங்கள் எனப்பலவிதமான கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன்; பங்கேற்றிருக்கிறேன்.

January 22, 2017

வரலாற்றைத் திரும்பிப்பார்க்கவேண்டும்

நாளை அலங்காநல்லூரின் வாடிவாசல் திறக்கப்படும் வாய்ப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. உருவாக்கப்படும் புதிய அவசரச்சட்டப்படியே வாடிவாசல் திறக்கப்பட இருக்கிறது. வாடிவாசலின் வழியே முதல் காளையைத் தமிழக முதல்வர் திறந்துவிட்டுக் கையசைக்கக் கூடும். அந்தக் கையசைப்புக்குப்பின் அவர் ஆற்றும் உரையில் மத்திய அரசிற்கும், அதன் தலைமையமைச்சருக்கும் நன்றி சொல்லக்கூடும். அதன்பிறகும் திரண்டிருக்கும் கூட்டம் என்ன முடிவெடுக்கும் என்பதை இன்று சொல்ல முடியாது. ஏனென்றால், அத்திறப்பு நிரந்தரமானதா.. தற்காலிகமானதா... என்பதை யாரும் உடனடியாகச் சொல்லிவிட முடியாது. சொல்லமுடியும் என்றாலும் யாரும் சொல்லப்போவதில்லை. சொல்லாமல் தள்ளிப்போடுவதில் இருக்கிறது பின் அரசியல் அல்லது நுண் அரசியல்.

January 20, 2017

சல்லிக்கட்டு: சில குறிப்புகள்

ஒழிக ! வாழ்க!! குரல்களின் ஒலியளவு
========================================
ஒவ்வொருமொழியிலும் சொற்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.அவை பெயர்(Noun ) வினை(Verb). இவ்விரண்டையும் கூடுதல் அர்த்தப்படுத்தப்படுவனவே இடைச்சொற்களும் உரிச்சொற்களும். தமிழில் மட்டுமே இடை, உரி என்பன தனிப்பட்ட வகையாக இருக்கின்றன. இவைகளைப் பெரும்பாலான மொழிகள் முன்னொட்டுகளாகவும் சில மொழிமொழிகளில் பின்னொட்டுகளாகச் சொல்லப்படுகின்றன.
வாழ்க!, ஒழிக! இவை வினைமுற்றுகள்.
வேண்டும்! வேண்டாம் ! இவையும் வினைமுற்றுகளே
 முன்னிரண்டும் வியங்கோள் வினைமுற்றுகள்
பின்னிரண்டும் ஏவல் வினைமுற்றுகள்

January 16, 2017

பொங்கல் : எனது நினைவுகள்

மதுரை மாவட்டக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். சல்லிக்கட்டு தனியான விளையாட்டு அல்ல. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என 3 நாட்கள் கொண்டாடப்படும் விழாவொன்றின் பகுதி அது. மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்ட வீடுகளில் - கிராமங்களில் சாதிகள் வேறுபாடுகளை நினைக்காமல் கொண்டாடிய விழா பொங்கல் திருவிழா. வெள்ளையடித்தல், வீடு மெழுகுதல், புது அடுப்புப்போடுதல் தொடங்கி ஆடுமாடுகளும் கன்று காலிகளும் உழவுகருவிகளும் வண்டிகளும் கழுவிச் சுத்தமாக்கப்படும்போது பழையன கழிக்கப்படும். அந்தநாள் போகி.

January 10, 2017

சல்லிக்கட்டு - பொங்கல் - புத்தாண்டு.


பண்பாட்டுத் தளத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் நாட்டின் ஆட்சியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்து அரைநூற்றாண்டு ஆண்டு ஆகப்போகிறது. ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப் பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.

January 04, 2017

புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

ஆடுபாம்பே
அந்த நாகப்பாம்பு அடிக்கடி என் தோட்டத்திற்கு வருகிறது
பிச்சிப்பூவின் வாசனைக்கு வருகிறது என்கிறான்
தோட்டக்காரன்

பாம்பாட்டியை அழைத்து மகுடி வாசித்து
பெட்டிக்குள் அடைத்துவிடத் திட்டமிட்டேன்.
அவனுக்குப் புரியவில்லை இப்போதெல்லாம்
பாம்புகள் மகுடி இசைக்கு மயங்குவதில்லை என்பது
நேற்று அதே பாம்பு என் கழுத்தில் மாலையாகி
என்னை அலங்கரித்தது
அந்த மயக்கம் தெளிவதற்குள் என் அரைஞாண் கயிற்றில்
சுற்றிக்கொண்டு ஆட்டம் போட்டது.
விடிவதற்குள் பாம்பை அடக்கிவிட வேண்டும்.
வெறிகொண்டு எழுகின்றேன்.
கண்விழித்துப் பார்க்கும்போது பாம்பு காணவில்லை
என் உடலில் இருந்து சிதறிய
நீலநிற ஒளியில் அந்த அறை எங்கும்
ஆகாயத்தின் துண்டுகள் சிதறிக் கிடந்தன.

இது புதிய மாதவியின் ஒரு கவிதை. எழுத்து வெளியிட்ட மௌனத்தின் பிளிறல் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.