July 24, 2016

வெய்மூத்திலிந்து - அந்தக் குடியிருப்பிலிருந்து- விடைபெறலாம்

பாஸ்டன் நகரின் தெற்கு வெய்மூத், அகன்ற வீதி, 573 இல் கழித்த பயண நாட்கள் நிறைவுபெற இருக்கின்றன. பெருஞ்சாலையிலிருந்து விலகி இடதுபுறம் திரும்பிச் செல்லும் சாலை 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது அடர்வனப்பகுதி தொடங்குகிறது. உள்ளே நுழைந்த தடங்கள் இல்லாமல் தடுக்கும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரவு நேரத்தில் பறவைகளின் ஓசையோடு மிளாவின் ஓசையையும் கேட்கலாம். நுழையும்போது இடதுபுறம் ஒரு டென்னிஸ் மைதானம். அதனைத் தாண்டினால் உட்கார்ந்து பேசிக்கொள்ளச் சாய்வு மேசைகள். வலதுபுறம் வண்ணப்பூச்செடிகளோடு கூடிய சிமெண்ட் பாதைகளுக்குள் தோட்டமொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் சிறுவண்டி ஓட்டிட ஒரு தளம். அதனருகில் ஒரு நீச்சல் குளம். ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களுக்கும் ஒரு கார் நிறுத்துமிடம். அவர்களைப் பார்க்கவருபவர்களுக்காக 20 கார்கள் நிறுத்துமிடங்கள். பின்புறம் சுற்று நடக்க ஒருசாலை. அச்சாலையில் வாகனங்கள் வரத்தடை உள்ளது. கார்களை அவரவர் விருப்பப்படி நிறுத்த முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களில் தான் நிறுத்தவேண்டும்.

July 21, 2016

திருமதி எக்ஸ்


பாஷ்யத்தின் அந்த அறையில் ஒருவர் உட்கார்ந்துள்ளார். அவரைக் கனவான் ஒன்று என அழைக்கலாம். செய்தித்தாள் படித்தபடி யாருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார். அவர் வயதானவர். இன்னொரு வயதான நபர் கனவான் இரண்டு வருகிறார். முதலாமவர் எழுந்து மரியாதையோடு வரவேற்கிறார். இருவரும் அமைதியாக இருக்கின்றனர். பேச்சை யார் ஆரம்பிப்பது என்ற தயக்கம் முதலாமவரே அமைதியைக் குலைக்க விரும்பியவராய்

July 19, 2016

பாவனைப் போர்கள்

தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுவிழாவை முன்வைத்து ஒரு சொல்லாடல் -1
-------------------------------------------------------------------------------------------------------
29/06/2016 இல், பத்ரி சேஷாத்ரி தனது முகநூலில் ஒரு பதிவு எழுதியிருந்தார். கூகிளில் தேடிய புள்ளிவிவரங்களோடு தரப்பட்டிருக்கும் அந்தப் பதிவிலிருக்கும் அடிப்படைத் தொனி கிண்டல். அவர் பதிவின்மேல் வந்துகொண்டிருந்த பின்குறிப்புகளின் தொனிகளை வாசித்துக் கொண்டிருந்தபோது,  அதற்கு நான்குமணி நேரத்திற்குப் பிறகு  பக்ஷிராஜன் அனந்த கிருஷ்ணன் ஒரு பதிவு போட்டார். பத்ரியின் பதிவைப்பார்த்தபின் அவர் எழுதினாரா? அவருக்கே அப்படியொரு பதிவை எழுதவேண்டுமென்று தோன்றியதா? என்று தெரியவில்லை. அவரது பதிவில்  வெளிப்பட்டதும் கிண்டல் தொனிதான். கிண்டலோடு கொஞ்சம் கோபமும் வெளிப்படுவதாகப்பட்டது.

July 18, 2016

நாடகமாக வாசித்தல்; அனுபவங்களிலிருந்து உண்டான பாடம்

எழுத்துப்பிரதிகள், ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு அனுபவம் தரக்கூடியன. ‘ அனுபவம்’ என்ற பதத்திற்கு ‘அர்த்தத்தளம்’ என்று அண்மைக்காலங்களில் பொருள் சொல்லப்படுகிறது. ஒருவருடைய அர்த்தத்தளத்திற்கு, அவரது புறச்சூழல்கள் காரணமாக இருக்கின்றன. சமூகப் பொருளாதாரப்புறச்சூழல்களும், அக்கால கட்டத்தில் கட்டியெழுப்பி உலவவிடப்படும் கருத்தியல் புனைவுகளும் படைப்பாளியையும் பாதிக்கின்றன. வாசிப்பவர்களையும் பாதிக்கின்றன.

July 16, 2016

தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர்
தண்ணீர்
==========================================
காட்சி : 1
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று நபர்கள் மேடையில் உள்ளனர்.
கையில் மரத்தால் ஆன சுத்தியல்.
அதைக் கொண்டு முன்னால் உள்ள கட்டையில் தட்டுவதே அவர்களின் மொழி

July 15, 2016

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

தமிழுக்கு இருக்கை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு நிதிதிரட்டும் பணியில் இரண்டு இந்திய- அமெரிக்க மருத்துவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவலின்பேரில் இந்தப் பல்கலைக்கழகம் தமிழர்களின் வாயிலும் மூளையிலும் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 400 ஆவது ஆண்டுவிழாவைக்கொண்டாட இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. 1636 இல் தொடங்கப்பட்ட மசுசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியின் பெயர் கேம்பிரிட்ஜ். இப்பல்கலைக்கழகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழையது.

July 12, 2016

ஜேம்ஸும் திருமதி ஜேம்ஸும்

இடம் : முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு  ஹால்.
பின் இடது புறம்  சமை யலறையின் ஒரு பகுதி தெரிகிறது.
பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது.
பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி, கணினி போன்றன தெரிகின்றன.
ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால் மூவர் அமரக் கூடிய ஒரு சோபா ; அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள். வேலைப்பாடுகள் கொண்ட டீபாய்.
நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது.
அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம்.
இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம்.

July 09, 2016

சிற்பியின் நரகம்

புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் சிறுகதை, நாடகத்திற்குத் தேவையான முரணைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் பிரதி. கதைமாந்தர்களுக்கிடையேயுள்ள முரணை, இக்காலகட்ட இந்திய நிலைமையோடு பொருத்திப்பார்த்து வாசித்து நாடகமாக எழுதப்பட்டுள்ளது. நாட்டில் வளர்ந்துவரும் மதவாதம்தான் சிறுகதையை நாடகமாக எழுதத்தூண்டியது. சரியான மேடையேற்றங்கள், அதன் பொருத்தத்தை உணரச்செய்யும். பாண்டிச்சேரி கூட்டுக்குரல் அமைப்பு மதுரையிலும் பாண்டிச்சேரியிலுமாக இரண்டுமுறை மேடையேற்றியுள்ளது. 

July 03, 2016

இரவலர் உண்மையும் காண்... இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண்...

நூலகங்களுக்கு நூல்கள் எடுக்கும் நூலக ஆணைக்குழு கவிதைகள் வாங்குவதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எனவே நாங்கள் கவிதைப் புத்தகங்களை வெளியிடுவதில்லை என்று பதிப்பகங்கள் சொல்கின்றன. என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் சில நூறு கவிதைத் தொகுப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் கவிதை மூலமாகவே பெரும்பணம் சம்பாதிக்கிறார்கள். அவர் எழுதும் திரைப்படப்பாடல்களுக்காக மட்டுமே பணம் கிடைக்கின்றன என்று சொல்லமுடியாது. அவரது தொடக்ககாலத் தொகுப்பு முதல் இப்போது எழுதும் கவிதைகளும் பெரும் தொகையைப் பெற்றுத் தருகின்றன. சமகாலப்புனைகதைகளின் தன்மைகள் இல்லையென்றபோதிலும் அவரது புனைகதைகளும் பெரும் வியாபாரத்திற்குரிய பிரதிகளாக இருக்கின்றன. ஒரு தனிமனிதனுக்குத் தேவையான ஆடம்பர வாழ்க்கையனைத்தையும் வைரமுத்துவுக்கு வழங்கியது எழுத்துதான். இதை யாரும் மறுக்கமுடியாது. அவரது பின்னோடிகளாக நிற்கும் பா.விஜய், சிநேகன் போன்றவர்களின் சொற்களைக் கவிதைகள் என்றே தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள்; வாங்குகிறார்கள்.