June 28, 2016

ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்

இப்படியொரு நாடகத்தை எழுதுவேன் என நினைக்கவில்லை.  எழுதக்காரணமாக இருந்தவர், அப்போது எனது மாணவராக இருந்த சிபு எஸ்.கொட்டாரம் ( இப்போது கள்ளிக்கோட்டை நாடகப்பள்ளியின் ஆசிரியர்). இயக்கத்தைச் சிறப்புப்பாடமாக எடுத்த அவரது தேர்வுக்கான தயாரிப்பாகச்  சாமுவேல் பெக்கட்டின் புகழ்பெற்ற நாடகமான கோதாவுக்காத்திருத்தல் -வெயிட்டிங் ஃபார் கோடார்ட்- நாடகத்தைத் தமிழாக்கித் தரமுடியுமா எனக்கேட்டார். வாசித்துப் பார்த்தபோது அவ்வளவு எளிதான வேலையாகத் தெரியவில்லை. அத்தோடு அந்த நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து ஒருவர் வைத்திருப்பதாகவும் தகவல் வந்தது.  வெளி நாடக இதழ் வந்துகொண்டிருந்த நேரம் அது. ரெங்கராஜனிடம் கேட்டபோது ஆமாம் சச்சிதானந்தனிடம் இருக்கிறது. அவரைத் தொடர்புகொள்ளமுடியாமல் போனபோது, பெக்கெட்டின் வேறு ஏதாவதொரு நாடகத்தை முயற்சிசெய்யலாம் என்று அவரது நாடகங்களைப் பற்றிய அறிமுகக்கட்டுரையைப் படித்தேன். அதன்பிறகு சிபுவும் நானும் விவாதித்து க்ராப்பின் கடைசி ஒலிநாடா - க்ராப்ஸ் லாஸ்ட் டேப் என்ற ஒற்றையாள் நாடகத்தை மொழியாக்கம் செய்யலாம் என்று முயற்சி செய்தேன். மொழியாக்க முயற்சியின்போதே, இன்னொரு விவாதம் நடந்தது. இரண்டு உலகப்போர்களின் பின்னணியில் விரியும் இந்த நாடகத்தை அப்படியே மேடையேற்றுவதைவிட, இந்தியப்பின்னணிக்கேற்பத் தழுவி மேடையேற்றலாம் என்று அந்த விவாதத்தில் முடிவாகியது. நாடகக்கட்டமைப்பின் வழி, பெக்கெட் உருவாக்கும் தொனியை உள்வாங்கிக்கொண்டு புதிதாக எழுதப்பெற்ற நாடகம். ஓரிரவு நாடகத்தை ஒரே இரவில் எழுதினார் அண்ணாதுரை.  நான் இந்த நாடகத்தை ஒரேயிரவில் எழுதி முடித்தேன். பாண்டிச்சேரியின் கடல் பார்க்க இருந்த வீட்டின் கிழக்குக் கதவைத் திறந்துவைத்து, இரவு 10 மணிக்கு எழுதத்தொடங்கி, காலை 5 மணிக்கு முடித்தேன். அன்று மதியமே சிபு எஸ். கொட்டாரம் ஒத்திகையைத் தொடங்கினார். 10 நாட்கள் ஒத்திகைக்குப் பின் 50 நிமிட நிகழ்வாக மேடையேறியது. ஒளியமைப்பின் சாத்தியங்கள்வழிக் கவனத்திற்குரிய நிகழ்வாக மாறியது. இந்திய அரசியலில் பெருமாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட நிலையில் சின்னச்சின்ன மாற்றங்களோடு திரும்பவும் எழுதியிருக்கிறேன். மேடையேற்றும் இயக்குநருக்காகக் காத்திருக்கிறது.

June 27, 2016

பல்லக்குத் தூக்கிகள்


காட்சி: 1.
   [நான்குபேர் தங்கள் காரியத்தில்      மும்முரமாக  ஈடுபட்டுள்ளனர்.      தடித்தடியான மரங்கள்                                       அங்குமிங்கும் கிடக்கின்றன.                                                  கிடத்தலில் எதுவும் ஒழுங்கில் இல்லை.    நான்கு நபர்களும்கூட   ஒழுங்கில் இல்லை. வேலை செய்தபடியே            பேசுகின்றனர்.   பொருட்கள் இல்லாமல்   இருப்பதாகப் பாவனையும்   செய்யலாம்.                                               
பின்னணியில் ரகுபதி ராகவ ராஜாராம் ஒலிக்கிறது.]


June 24, 2016

ஒன்றியங்களால் ஆனது இவ்வுலகு

பெரும்பான்மை - மக்களாட்சிக் காலத்தின் புனிதச் சொல். 
எல்லாப் புனிதச்சொற்களின் பின்னால் தன்னலம் ஒளிரும்; அபத்தம் ஒழிந்துகொள்ளும். இது எனது நம்பிக்கை. வரலாறு பலதடவை இதை நிரூபித்திருக்கிறது. இன்று திரும்பவும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ‘பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்’ அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். 48.1சதவீதம்பேர் பிரியவேண்டாம் என்றுசொல்ல, 51.9 சதவீதம்பேர் பிரிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பான்மையென்பதைப் புனிதச் சொல்லாக ஆக்கிய சதவீதம் 3.8 சதவீதம் தான். புனிதத்தின் முதல் பலி. அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகிவிட்டார்.

June 23, 2016

க்யூபெக் : தனி அடையாளம்பேணும் முன்மாதிரி


மாண்ட்ரியால் நகரத்திலேயே முழுமையும் பிரெஞ்சு எழுத்துகள் தான் எழுதப்பெற்றிருந்தன. 10 மாநிலங்கள் கொண்ட கனடா ஒன்றியத்தில் அண்டோரியா மாநிலத்திற்கு அடுத்துப் பெரிய மாநிலம் க்யூபெக் தான். இயற்கைவளமும் தொழிற்சாலைகளும் நிரம்பிய க்யூபெக் மாநிலத்தில் 80 சதவீதம் பிரெஞ்சு மொழிக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் பிரெஞ்சு அடையாளத்தைத் தக்கவைப்பதில் ஆர்வத்தைக் காட்டிய க்யூபெக் மாநிலத்தின் அண்மைக்கால வரலாறு தமிழக வரலாற்றோடும் ஈழப்போராட்டத்தோடும் உறவுடையதாக இருக்கிறது.

June 21, 2016

மாண்ட்ரியால் : ஐரோப்பிய நகரத்தின் நகல்

நிலவியல் என இப்போது சொல்லப்படும் பாடம் எனது பள்ளிப் படிப்பில்  பூகோளமாக இருந்தது.  கனடா என்றொரு நாட்டைப்பற்றிப் பூகோளப் பாடம் சொன்னதெல்லாம் பனிப்பொழிவுகள் நிரம்பிய வடதுருவ நாடு என்பதாக மட்டுமே நினைவில் தங்கியிருந்தது. நதிகள், மலைகள், நகரங்கள், மக்கள், தொழில் என அதன் உள்விவகாரங்களெல்லாம் அப்போது ஒன்றும் தெரியாது. அந்தத் தகவல்களைத் தாண்டி மூளைக்குள் பதிந்து அழியாமல் இருக்கும்  கனடிய நகரத்தின் பெயர் டொறொண்டோ; அதற்கடுத்து மாண்ட்ரியால். இரண்டுமே ஒரே வருடத்தில் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் பெயர்களாகவும் காதில் விழும் பெயர்களாகவும் ஆன வருடம் 1975- 76 ஆம் கல்வியாண்டு.

June 10, 2016

மூடுதல் அல்ல; திறப்பு

கனடாவின் அரசியல் தலைநகர் ஒட்டாவா. அங்கே பார்க்கவேண்டியன என்று பட்டியல் ஒன்றைத் தயாரித்தபோது பட்டியலில் நாடாளுமன்றம் முதலில் இருந்தது. பிறகு நதியோரத்துப் பூங்காவும் ராணுவத்தின்காட்சிக்கூடமும் விலங்குப் பண்ணையும் இருந்தன. அப்புறம் வழக்கம்போல கடைகள் நிரம்பிய நகர்மையம். விலங்குகளையும்,  ஆயுதங்களையும்  பார்ப்பதற்குப் பதிலாகப் பக்கத்திலிருக்கும் கிராமங்களைப் பார்க்கும் விதமாக நகரத்தைவிட்டு விலகி எனது கருத்தைச் சொன்னேன். அதன்படி ஒட்டாவா சுற்றல் திட்டம் உருவானது. முதல் இடம் நாடாளுமன்றம். அடுத்து பூங்கா, பிறகு ஆற்றோர நடைப் பயணம். அதன் பிறகு 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலையருவியும் அதன் வழியான கிராமங்களும் இதுதான் வரிசை.

June 08, 2016

ஆயிரம் தீவுகளுக்குள் ஒரு நீர்ப்பயணம்


யோர்க் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டோடு துறைசார்ந்த ஒரு நிகழ்வு முடிந்தது. இனிச் சுற்றுலா தான். பாஸ்டனிலிருந்து கிளம்பும்போதே கனடாச் சுற்றுலாத் திட்டம் தயாராக இருந்தது. அதை வட்டச்சுற்று எனச் சொல்ல முடியாது. நீண்டசெவ்வகமென்று சொல்லலாம். வணிகத் தலைநகரமான டொறொண்டோவுக்குப் பிறகு அரசியல் தலைநகரமான ஒட்டாவா. அதன் பிறகு பிரெஞ்சு அடையாளங்களோடு இருக்கும் மாண்ட்ரியாலும் க்யூபெக்கும். இடையில் வரும் ஏதாவது இடங்களைப் பார்ப்பதுதான் திட்டம்.

டொறொண்டோவில் மூன்று நாட்கள்


மே. 6 முதல் 8 வரை மூன்று நாட்கள் டொறொண்டோவில் தங்குவது என்பது திட்டம். மூன்று நாளில் இரண்டு நாட்கள் எனது இருப்பு கருத்தரங்கு நடக்கும் யோர்க் பல்கலைக்கழகம். குடும்பத்தார் டொறொண்டோவைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இந்தத் திட்டமிடலெல்லாம் மகன் பொறுப்பு. அவர்களுக்கு முழுமையான சுற்றுலா; எனக்கோ பாதிதான் சுற்றுலா. மீதிப்பாதி இலக்கியச் சந்திப்புகள் சார்ந்த கல்விச்சுற்றுலா. இது என்னுடைய திட்டம். ஒருதிட்டத்திற்குள் இன்னொரு திட்டம் அடக்கம். மகனது திட்டம் பெருந்திட்டம். அதற்குள் அடங்கியது எனது குறுந்திட்டம்.  இரண்டு திட்டங்களின்படியும் மூன்றுநாளில் இரண்டுநாள் பகல் கருத்தரங்கில் கழிந்துவிடும்.

June 07, 2016

“தெள்ளத்தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்”

சாட்சியமாய்த் தங்குதல் புலப்படாத வன்கொடுமைகள், பேசமுடியாக் குற்றங்கள்-  மே, 6, 7 தேதிகளில் நடந்த அக்கருத்தரங்கின் தலைப்பு. கருத்தரங்கு நடந்த இடம் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில்.இந்தக் கருத்தரங்கம், தமிழியல் ஆய்வுகள் என்னும் பொருண்மையில் டொறொண்டோவில் நடக்கும் 11 வது கருத்தரங்கம். 2006 தொடங்கி நடக்கும் தமிழியல் ஆய்வுகள் என்னும் இருமொழிக்கருத்தரங்கின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கவிஞர் சேரன்.

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்

வேறுவழியில்லை; சாளரங்களைத்
திறந்தே ஆகவேண்டும். 
நான் கடல், நான் ஆறு, நான் நதி, நான் ஓடை, 
நான் அருவியெனத் தட்டும்போது
இழுத்துமூடி இருப்பது எப்படி?
மழை. இது மழையைத் தவிர வேறென்ன?

June 04, 2016

அது ஒரு தத்துவப்போராட்டம்

உலகமயத்திற்குப் பின் தமிழக இளைஞர்களும் யுவதிகளும் இல்லாத பெருநகரங்கள் இல்லை என்னுமளவிற்குச் சின்னச்சின்ன நாடுகளிலும் வாழ்கிறார்கள் தமிழர்கள். அதிலும் மனிதவளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், கனடாவிலும் ஒவ்வொரு பெருநகரத்திலும் குடும்பத்தோடு வாழும் இந்தியர்களைத் தேடி அலையவேண்டியதில்லை. வாரக்கடைசியைக் கழிப்பதற்கான இடங்களில் அரைமைல் தூரம் நடந்தால் ஒரு இந்தியக் குடும்பத்தைப் பார்க்கலாம். ஒரு மணிநேரம் செலவிட்டால் ஒரு தமிழ்ப் பேச்சைக் கேட்கலாம்.