கதவு திறக்கட்டும்




” உறவுப்பாலம் -இலங்கைச் சிறுகதைகள்”” இப்படியொரு தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் மொத்தம் 25 சிறுகதைகள் (சிங்களமொழியிலிருந்து 8; தமிழிலிருந்து 7; ஆங்கிலத்திலிருந்து 10) தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுத்தவர் ராஜீவ் விஜேசின்ஹ. இவருக்கு இத்தொகுப்பை உருவாக்குவதற்குச் சிங்கள மொழிக் கதைகளுக்காக விஜிதா பெர்னாண்டோவும் தமிழ்க் கதைகளுக்காக விமரிசகர் கே.எஸ்.சிவக்குமரனும் உதவியிருக்கிறார்கள்.தமிழின் பிரதிநிதிகளாக டி.எஸ்.வரதராஜன், கே.சட்டநாதன், என்.எஸ், எம்.ராமையா, செ.யோகநாதன், தாமரைச்செல்வி, ஐயாதுரை சாந்தன், ரஞ்சகுமார் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன.

உலக இலக்கியங்கள் வரிசையில் 2014 இல் இத்தொகுப்பை வெளியிடப்பட்டிருக்கிறது நேஷனல் புக்டிரஸ்ட். பக்கத்து நாடொன்றின் இலக்கியப்போக்கை அறிய விரும்பும் வாசகர்களும் இலக்கிய மாணவர்களும் படிக்க வேண்டிய தொகுப்பு. வாய்ப்பு கிடைத்தால் எங்காவது பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள அறிமுக உரையும் , கதாசிரியர்கள்/மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்புகளும் கவனிக்கத்தக்கனவாகவும் பின்பற்றத்தக்கனவாகவும் உள்ளன. குறிப்பாகத் தொகுப்பாளரின் அறிமுக உரை மிகுந்த பொறுப்புணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. அரசு நிறுவனங்களுக்காகத் தொகுப்புச் செய்வோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அவை. இந்தப் பொறுப்பைச் சாகித்திய அகாடெமிக்காகத் தொகுப்புச் செய்த தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தவறவிட்டிருக்கிறார்கள்.
இன்னொரு மொழிக்குள் போய்விட்டுத் திரும்பவும் தமிழுக்கு வரும்போது வட்டாரத்தமிழைப் பொதுத்தமிழில் மொழிபெயர்த்திருப்பதைப் படித்திருக்கிறேன். இதில் அதெல்லாம் நடக்கவில்லை. தமிழ்க் கதைகள் அப்படியே இணைக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்திற்குப் போய்விட்டுத் தமிழுக்கு வந்துள்ளன என்றாலும் சிங்களக்கதைகளை வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு லாவகமாக உள்ளது. 
மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சணாமூர்த்தி ஏற்கெனவே மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்.
இந்தியாவின் தேசியப்பண்பாடு, நமது அரசியலமைப்பு, புத்தாக்க வாழ்வியல் கல்வி, புரட்சி 1857.ஆகியனவும் அவரது மொழிபெயர்ப்பில் வந்தவை. இருவரும் இரண்டு தடவைதான் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
திருநெல்வேலி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்