December 05, 2016

பிரபஞ்சனின் ஆகாசப்பூ: வடிவம் தொலைத்த கதை


ஆனந்தவிகடனில் (7/12/2016) அச்சாகியிருக்கும் ஆகாசப்பூ வழக்கமான பிரபஞ்சனின் கதைபோல இல்லை. பிரபஞ்சனின் கதைகளில் வரும் மாந்தர்களின் குணங்களைச் சொல்வதற்கு தேவைக்கதிகமான சொற்களைப் பயன்படுத்துவார்; அதிலும் பெண்களின் அறிவு, திறமை போன்றவற்றைச் சொல்லவிரும்பும்போதை வார்த்தைகள் செலவழிவதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

December 04, 2016

எல்லாம் தெரிந்த அம்மா


இப்போது மாத இதழ்களாக வந்துகொண்டிருக்கும் இலக்கியம் மற்றும் இடைநிலை இதழ்களைத் திரும்பவும் எடுத்துப் படிக்கவேண்டுமெனத் தூண்டுவன அந்த இதழ்களில் இடம்பெறும் கதைகள் மட்டுமே. முதல் புரட்டலில் ஈர்த்துவிடும் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துவிட்டுத் தான் கதைகளுக்கு வருவேன். அந்தக் கதைகளின் தொடக்கமோ, நகர்வோ, நிதானமாகப் படிக்கவேண்டியவை என்ற உணர்வைத்தூண்டிவிடும் நிலையில் கட்டாயம் படித்தே விடுவேன்

November 22, 2016

பணமதிப்பிழப்பு

மீன்காரரிடம் பற்று
======================
மாலை மீன்கடைகளில் வாங்குவதே விருப்பமானது.
செவ்வாய் மாலையும், வெள்ளிமாலையும் கிடைக்கும் மீன்கள் கிழக்குக்கடலில் - மணப்பாட்டிலிருந்தும் உவரியிலிருந்தும் -வருபவை. காலையில் கடலுக்குப்போய் வலைபோட்டுப்பிடித்து பிற்பகலில் திருச்செந்தூர் - நெல்லை பாசஞ்சர் ரயிலில் வந்திறங்கும் மீன்கள். வந்திறங்கும்போது உயிரோடுகூட இருக்கும். ஆழ்கடலுக்குப் போகாமல் பக்கத்தில் பிடிப்பதால் பெரியபெரிய மீன்களைவிட நடுத்தரமான மீன்களே வரும். மாலையில் வந்தவை விற்றுத்தீரவில்லையென்றால் அடுத்த நாள் காலையிலும் விற்பார்கள். கடைகளும் எண்ணிக்கையில் குறைவு. மீன்வகைகளும் அதிகம் இருக்காது. ஆனால் விலை குறைவாக இருக்கும்.

November 21, 2016

எழுதிக்கொள்ளவேண்டிய கதையின் முடிவு: துரோகங்களுக்கான பரிகாரம்


கதையை வாசிக்கத் தொடங்கிசிறிது நேரத்திலேயே அவரது புகழ்பெற்ற நாவலான 18- வது அட்சக்கோட்டை வாசிக்கும் நினைவுதோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கலவரம், கல்லூரி மூடல், மாணவர்கள் வீட்டில் முடங்கல் என அந்த நாவலின் நிகழ்வுகள் இந்தக் கதையிலும் இருந்தன. கதையின் காலமும் சிறுகதை யின் எல்லையைத் தாண்டி 50 வருட நிகழ்வுகளையும் நினைவுகளையும் தொட்டுத்தொட்டுத் தாவி்க் கொண்டிருந்ததால் சிறுகதையின் வடிவ எல்லையைத் தாண்டிக் குறுநாவலாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற  எண்ணமும் வலுவாகிக்கொண்டே இருந்தது. அதனால், அந்த நாவலில் எழுத நினைத்த ஒரு கிளைக்கதையை இப்போது எழுதியிருக்கிறார் என்ற நினைப்பிலேயே வாசித்தேன். அந்த நாவலை வாசித்தவர்கள், இந்தவார (23/11/16) ஆனந்த விகடனில் அச்சாகியிருக்கும் அசோகமித்திரனின் துரோகங்கள் கதையை இப்படி வாசிப்பதைத் தவிர்க்கமுடியாது.


November 15, 2016

தொலைக்காட்சித் தொடர்களில் திணறும் நவீனம்


ஊடகங்கள் உருவாக்கும் வெகுமக்கள் கருத்தியல் மற்றும் ரசனை குறித்த அக்கறைகொண்டவன் என்ற வகையில் திரைப்படங்களைப் பார்க்கும் அதே அக்கறையுடன் தொலைக்காட்சித் தொடர்களையும் கவனிப்பேன். ஆனால் எனது வேலை காரணமாக எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எல்லாத் தொடர்களையும் பார்க்கமுடிவதில்லை. முழுநேரமும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்திருக்கும் தமிழ்க்குடும்பத்தலைவிகளாலும் எல்லாத் தொடர்களையும் பார்த்துவிடவும் முடியாது. தேர்வுசெய்துதான் பார்க்கமுடியும். வாரநாட்களில் வேலைத்தளத்திலிருந்து வந்தவுடன் பார்க்கக்கூடிய தொலைக்காட்சித் தொடர்களாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சித் தொடர்கள் இருந்தன. குறிப்பாக அதில் வந்த மெட்டி ஒலி, நாதஸ்வரம் போன்றவற்றின் அநேகக்காட்சிகளை நான் பார்த்திருப்பேன்.

November 10, 2016

கறுப்புத்தெய்வங்களும் வெள்ளைத்தேவதைகளும்'தேர்தல் காலத்தில் அதைச் செய்வோம்; இதைச் செய்வோம்' என்று சொன்னீர்களே? அதையெல்லாம் செய்யாமல் இதைச் செய்தது ஏன்? என்ற விவாதங்களுக்கு எந்த விடையும் கிடைக்கப்போவதில்லை. அந்த விவாதங்களுக்குள் செல்லவிரும்பவில்லை; செல்வது வெட்டிவேலை.

November 05, 2016

கவிதை முழுமையடையும் தருணம் விலகலாகும் வேளையும்


அனாரின் ஆழ்தொலைவின் பேய்மை
========================================
இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமரிசனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிரிந்துகொள்ளாமல் தவிர்த்துக்/ தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.

October 31, 2016

விலகும் மையங்கள்: லட்சுமி சரவணக்குமாரின் படையலும், விநாயமுருகனின் ஞமலி போல் வாழேலும்.

இரண்டு கதைகளிலும் பின்னணிதான் கவனிக்கவைக்கின்றன.  என்றாலும் இரண்டு கதைகளிலும் பின்னணிகள் ஒன்றல்ல. ஒன்று இடப்பின்னணியால் கவனம் பெறுகின்றது.  இன்னொன்றோ காலப்பின்னணியால் கவனம் பெறுகின்றது.

October 30, 2016

வாசிப்பின் மீதான குறிப்புகள்

வாசிப்பைக் காற்றில் கரைத்துவிடுவதற்குப் பதிலாக முகநூலில் பதிவுசெய்யலாம். முகநூலில் ஒருமாதத்திற்குப் பின் தேடுவது சிரமம். அதனால் இங்கேயும் போட்டுவைக்கிறேன்

இந்த ஆசைக்கு வயது 18.

இது நீண்ட நாள் ஆசை. 
1998 இல் விழுப்புரத்தில் ஏற்பட்ட அந்த நள்ளிரவு அனுபவத்திற்குப் பின்னால்தான் இந்த ஆசை உண்டானது. அந்தத் திருவிழாவை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற ஆசை வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த நள்ளிரவு அனுபவத்தைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. அதுவொரு கொடுங்கனவு. கொடுங்கனவு வேண்டாம்; விழாவை மட்டும் நினைவுகொள்ளலாம்.

October 07, 2016

நிலவியலில் நிறுத்திய எழுத்து


என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்; எல்லாவற்றையும் நானே திட்டமிடுகிறேன் எனக் கூறுவதற்குப் பின்னால் இருப்பது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைதான் முழுமையாகச் செயல்படுகிறதென்று சொல்லமுடியாது. தன்பிள்ளை, தன்குடும்பம், தன்போக்கு என இருப்பவர்களுக்கு வேண்டுமானால், ஓரளவுக்கு இது சாத்தியமாகலாம். அதுகூட ஓரளவுக்குத்தான். பொதுமனிதர்களை நோக்கி இயங்கும் ஒருவரால், அவரது செயல்பாடுகளை முழுமையாக அவரே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. எழுத்து, இலக்கியம் என்பது அடிப்படையில் பொதுமனிதர்களை நோக்கிய இயக்கம். ஆகவே எழுத்தாளர்களின் செயல்பாடுகளைச் சூழல் இயக்குகிறது.

September 26, 2016

காந்தி எனும் பெயர் வைத்துக்கொண்ட நபர்

ஒரு கதை
=======
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும். இத்தனைக்கும் நான், இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன். எனக்குத் தெரிந்த காந்தியார், தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர்அவரது உண்மையான பெயரை, எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும்  அன்றோடு மறந்துவிட்டது. அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான்.

September 09, 2016

பாரதீய ஜனதா அரசின் புதிய கல்விக்கொள்கை: சில குறிப்புகள்- சில சந்தேகங்கள்- சில எதிர்பார்ப்புகள்


ஆட்சி மாற்றங்கள் கொள்கை மாற்றங்களை முன்வைப்பது தவிர்க்க முடியாதது. மாறிய ஆட்சியை விரும்பாதவர்கள், அதன் முன்வைப்புகள் அனைத்தையும் நிராகரிப்பதும்விரும்பியவர்கள், அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதும் நடக்கும். அப்படி நடப்பது பெரும்போக்கு அல்லது பொதுப்புத்தி. பெரும்போக்கிலிருந்து விலகி நின்று சிந்திக்கவேண்டுமென நினைப்பவர்கள், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தில் இணைத்துச் சிந்தித்துப்பேசுவது இயல்பு. அப்படியான பேச்சுகளே ஒரு பொருளின் மீதான விமரிசனச் சொல்லாடல்களாக அமையும். திரு. நரேந்திர தாமோதர்தாஸ் மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளுக்குப் பின் இந்தியாவின் கல்வித் துறையில் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றிய முன்வரைவு ஒன்றைபுதிய கல்விக்கொள்கையாக - கல்விமுறைக்கான உள்ளீடுகளாக - முன்வைத்துள்ளது.

September 07, 2016

பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

முன்னுரை:
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி  பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களை இணைத்து உருவாக்கும் பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு விளக்கப்படுகிறது. அதன் வழியாக தமிழின் கவிதையியல் கோட்பாடான திணைக்கோட்பாடும் பண்பாட்டு நிலவியல் என்னும் சிந்தனைமுறையும் எந்தெந்த விதங்களில் ஒத்துப்போகின்றன என்பதை இணைத்துக்காட்டுகிறது; விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது.  தொடர்ந்து இக்கோட்பாட்டைப் பயன்படுத்தித் தமிழில் ஆய்வு எந்தெந்தப் பரப்பிற்குள் நுழையமுடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

September 05, 2016

நம்பிக்கைகளைத் தகர்த்து நம்பிக்கை தரும் சினிமா

வெகுமக்கள் ரசனைக்கான ஒரு சினிமாவில் இருக்கவேண்டியன
  • ·        பலவிதத்தொனியில் பேச வாய்ப்பளிக்கும் உச்சநிலை (Climax)
  • ·         பாடல்களும் ஆட்டங்களும் (Songs and dances)
  • ·         சண்டைக்காட்சிகள் (Fights)
  • ·         நகைச்சுவைக் கோர்வைகள் (Comedy Sequences)
  • ·         அறிமுகமான நடிக முகங்கள் (Popular Artists)

August 26, 2016

தாய்மையென்னும் புனிதம்

'ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதைகொண்டிருக்கவேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். 'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை' என்பதுபோன்ற திகில் தன்மையைக் கொண்ட தொடக்கம். சிக்கலான மனிதர்களை முன்னிறுத்தும் கதை என்பதான குறிப்புகள்கூட இல்லை. காலச்சுவடு 200 ஆம் இதழில் வந்துள்ள  உமா மகேஸ்வரியின் குளவி என்ற தலைப்பிட்ட அந்தக் கதையை வாசிப்பதை நிறுத்திவிடலாம் என்று தோன்றியது. ஆனால் இடையிடையே ஓவியங்களோடு மூன்று பக்கத்தில் முடியும் கதைதான்  என்ற நிலையில் தொடர்ந்து வாசிக்கலாம் என்று தோன்றியது.  

August 21, 2016

கதைகளில் அலைந்துகொண்டிருக்கும் ஜி.நாகராஜனின் அந்திமக்காலம்


கபாடபுரம் இணைய இதழில் சி.மோகன் எழுதிய விலகிய கால்கள் என்ற கதையைப் படித்ததும் அக்கதையின் மையமாக இருக்கும் ராஜன், எழுத்தாளர் ஜி.நாகராஜன்என்பது தெரிந்தது. சிறுபத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ள பலருக்கும் ஜி.நாகராஜன் பற்றிய செய்திகள் மேகமூட்டம்போலத் தெரிந்த ஒன்றுதான். 50 வயதைத் தாண்டிய 20 வயதிலேயே இலக்கிய வாசிப்பில் ஈடுபாடு காட்டிய மதுரைக்காரர்கள் அவரைச் சந்தித்திருக்கவும் கூடும். நான் அவரோடு நேரடியாக பேசியவனில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன். இந்தக் கதையில் விவரிக்கப்படும் நிலையிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன். விலகிநின்றிருக்கிறேன்.

August 19, 2016

இருப்பைக் கலையாக்குதல்: கருணா வின்செண்டின் காமிரா.

கலைகளைப்பற்றிய பேச்சுகளில் ஓவியத்தையும் சிற்பத்தையும் நுண்கலை என்ற வகைப்பாட்டில் வைத்துப் பேசுவதையே கேட்டிருக்கிறேன்.

August 16, 2016

வெடிக்கும் துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் இனவாதம்

எனது அமெரிக்கப் பயணம் ஜூலை 21 இல் நிறைவடைந்தது. ஒருவாரத்திற்கு முன் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பாஸ்டனில் பார்க்கவேண்டிய இடங்கள் எனக் குறித்து வைத்திருந்த பட்டியலில் எம்.ஐ.டி(MIT) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற மாசுசெசட்ஸ் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் விடுபட்டுப் போயிருந்தது. ஜூலை,19 இல் அதன் வளாகத்தில் இறங்கியபோது தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. அங்குமட்டுமல்ல, கடைசிச் சுற்றாகப் பாஸ்டன் நகரை ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றிவந்தபோது, எல்லா இடங்களிலும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தன. காரணம் அந்தப் படுகொலை நிகழ்வு.

August 15, 2016

மரணமும் மதுவும்

மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது. எனது உறவினர்கள் மரணங்களின் பகுதியாகவே குடிப்பழக்கமும் குடியடிமைத்தனமும் இருந்துள்ளன. ஆனாலும் ஒரு கவியின் மரணத்தை முன்வைத்துக் குடியெதிர்ப்புப் பரப்புரை செய்வதை நான் விரும்பவில்லை.

August 10, 2016

சாகசக்காரர்கள் எப்போதும் விமரிசனங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்


கோமகன்
********************************************************************

இன்றைய சமகாலத் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் திறனாய்வு, நாடகங்கள், கட்டுரைகள், வரலாறு, சஞ்சிகைகளின் ஆசிரியர் என்று பன்முக அடையாளங்களுக்குச்  சொந்தக்காரர் பேராசிரியர் அ .ராமசாமி. ஆரவாரங்கள் இன்றிச் செயலால் பலத்த அதிர்வலைகளை இவர் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதுவரையில் இவரின் படைப்புகளாக  நாடகங்கள் விவாதங்கள், ஒத்திகை, வட்டங்களும் சிலுவைகளும், சங்கரதாஸ் சுவாமிகள், பிரஹலாதா, முன்மேடை, தொடரும் ஒத்திகைகள், அரங்கியல் மற்றும் நாடகவியல் என 8 நூல்கள் அச்சில் வந்துள்ளன. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் வெகுமக்கள் பண்பாடு மற்றும் பிம்பக்கூறுகள் பற்றிய விமரிசனக்கட்டுரைகள் கொண்ட தொகுதிகளாக - பிம்பங்கள் அடையாளங்கள், வேறு வேறு உலகங்கள், திசைகளும் வெளிகளும், மறதிகளும் நினைவுகளும் என நான்கு நூல்கள் வந்துள்ளன. திரைப்படங்களைப் பார்ப்பதற்கான  பார்வைகளை முன்வைக்கக்கூடிய வகையில் அலையும் விழித்திரை, தமிழ் சினிமா: ஒளிநிழல் உலகம், ரஜினிகாந்த்: மாறும் காட்சிகள், தமிழ் சினிமா:  அகவெளியும் புறவெளியும்,தமிழ் சினிமாள்\: காண்பதுவும் காட்டப்படுவதுவும் முதலான தொகுப்புகள் வந்துள்ளன. இலக்கியத்திறனாய்வுகளாக மையம் கலைந்த விளிம்புகள், திறனாய்வு: சில தேடல்கள்,  நாயக்கர் காலம்: இலக்கியமும் வரலாறும்  முதலான நூல்கள் வந்துள்ளன. நாவலென்னும் பெருங்களம்,  கதைவெளி மனிதர்கள் என முறையே நாவல்,சிறுகதை பற்றிய திறனாய்வுக் கட்டுரை நூல்கள் இப்போது வரப்போகின்றன.  2000 -க்குப் பின்பான பெருந்தொகுப்புகளில் இவரது கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன. தமிழில் நவீன இலக்கிய விவாதங்களை முன்னெடுக்கும் உயிர்மை, அம்ருதா, தீராநதி, காலச்சுவடு, புதிய கோடாங்கி, தலித், மணற்கேணி  போன்ற அச்சு இதழ்களிலும் எதுவரை, மலைகள், சொல்வனம்  போன்ற இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதும் இவர் தனது கட்டுரைகளை “அ.ராமசாமி எழுத்துகள்” (http://ramasamywritings.blogspot.in/)என்னும் வலைப்பூவில் தொகுத்து அளித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு பல்வேறு கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனை மூலம் வாசகர்களுக்காக நான் கண்ட நேர்காணல் இது ..............
*

August 05, 2016

பொறுப்பேற்புகள் கூட வேண்டும்

தனித்திருத்தல், துறவு பற்றிய சிந்தனைகள் எல்லாக்காலகட்டங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால், அவை எப்போதும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் பகுதியாக இருந்ததில்லை. அதற்கு மாறாகச் சேர்த்திருத்தல், பற்று என்பனவே பெருந்தொகை மனிதர்களின் வாழ்வியலாக இருக்கின்றது. நிகழ்கால நெருக்கடிகள் ஒவ்வொரு மனிதரையும், பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடிக்குள் திணித்திருக்கிறது. அந்தத் திணிப்புகள் உருவாக்கும் சிக்கலைத் தீர்க்கவே எல்லாவகை அமைப்புகளும் உருவாகியிருக்கின்றன. நிகழ்காலம் என்பது அந்தந்தக் காலகட்டத்துக்கும் உரியது.

August 02, 2016

அஃதொரு பண்பாட்டுப் பெருவிழா: பெட்னா நினைவுகள்

ஒற்றை நோக்கம் கொண்ட பயணங்களை மட்டுமே திட்டமிடுவதில்லை. தமிழ்நாட்டுக்குள் திட்டமிடும் பயணங்களையே ஒன்றிற்கு மேம்பட்ட நோக்கங்களோடுதான் திட்டமிடுவேன். வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இல்லாமல் திட்டமிடக்கூடாது என்றிருந்தேன். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டுக்கோடை காலத்தைக் கழிப்பதென்ற திட்டத்துடன் முதலில் இணைந்தது ஒரு கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம். அதனைக் கல்வி நோக்கத்தில் அடக்கலாம் என்றால்,  இரண்டாவதாக இணைந்துகொண்ட நியூஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நடத்தும் தமிழ் விழாவைப் பண்பாட்டுப் பங்கேற்பு என வகைப்படுத்தவேண்டும்.

July 24, 2016

வெய்மூத்திலிந்து - அந்தக் குடியிருப்பிலிருந்து- விடைபெறலாம்

பாஸ்டன் நகரின் தெற்கு வெய்மூத், அகன்ற வீதி, 573 இல் கழித்த பயண நாட்கள் நிறைவுபெற இருக்கின்றன. பெருஞ்சாலையிலிருந்து விலகி இடதுபுறம் திரும்பிச் செல்லும் சாலை 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது அடர்வனப்பகுதி தொடங்குகிறது. உள்ளே நுழைந்த தடங்கள் இல்லாமல் தடுக்கும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரவு நேரத்தில் பறவைகளின் ஓசையோடு மிளாவின் ஓசையையும் கேட்கலாம். நுழையும்போது இடதுபுறம் ஒரு டென்னிஸ் மைதானம். அதனைத் தாண்டினால் உட்கார்ந்து பேசிக்கொள்ளச் சாய்வு மேசைகள். வலதுபுறம் வண்ணப்பூச்செடிகளோடு கூடிய சிமெண்ட் பாதைகளுக்குள் தோட்டமொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் சிறுவண்டி ஓட்டிட ஒரு தளம். அதனருகில் ஒரு நீச்சல் குளம். ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களுக்கும் ஒரு கார் நிறுத்துமிடம். அவர்களைப் பார்க்கவருபவர்களுக்காக 20 கார்கள் நிறுத்துமிடங்கள். பின்புறம் சுற்று நடக்க ஒருசாலை. அச்சாலையில் வாகனங்கள் வரத்தடை உள்ளது. கார்களை அவரவர் விருப்பப்படி நிறுத்த முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களில் தான் நிறுத்தவேண்டும்.

July 21, 2016

திருமதி எக்ஸ்


பாஷ்யத்தின் அந்த அறையில் ஒருவர் உட்கார்ந்துள்ளார். அவரைக் கனவான் ஒன்று என அழைக்கலாம். செய்தித்தாள் படித்தபடி யாருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார். அவர் வயதானவர். இன்னொரு வயதான நபர் கனவான் இரண்டு வருகிறார். முதலாமவர் எழுந்து மரியாதையோடு வரவேற்கிறார். இருவரும் அமைதியாக இருக்கின்றனர். பேச்சை யார் ஆரம்பிப்பது என்ற தயக்கம் முதலாமவரே அமைதியைக் குலைக்க விரும்பியவராய்

July 19, 2016

பாவனைப் போர்கள்

தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுவிழாவை முன்வைத்து ஒரு சொல்லாடல் -1
-------------------------------------------------------------------------------------------------------
29/06/2016 இல், பத்ரி சேஷாத்ரி தனது முகநூலில் ஒரு பதிவு எழுதியிருந்தார். கூகிளில் தேடிய புள்ளிவிவரங்களோடு தரப்பட்டிருக்கும் அந்தப் பதிவிலிருக்கும் அடிப்படைத் தொனி கிண்டல். அவர் பதிவின்மேல் வந்துகொண்டிருந்த பின்குறிப்புகளின் தொனிகளை வாசித்துக் கொண்டிருந்தபோது,  அதற்கு நான்குமணி நேரத்திற்குப் பிறகு  பக்ஷிராஜன் அனந்த கிருஷ்ணன் ஒரு பதிவு போட்டார். பத்ரியின் பதிவைப்பார்த்தபின் அவர் எழுதினாரா? அவருக்கே அப்படியொரு பதிவை எழுதவேண்டுமென்று தோன்றியதா? என்று தெரியவில்லை. அவரது பதிவில்  வெளிப்பட்டதும் கிண்டல் தொனிதான். கிண்டலோடு கொஞ்சம் கோபமும் வெளிப்படுவதாகப்பட்டது.

July 18, 2016

நாடகமாக வாசித்தல்; அனுபவங்களிலிருந்து உண்டான பாடம்

எழுத்துப்பிரதிகள், ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு அனுபவம் தரக்கூடியன. ‘ அனுபவம்’ என்ற பதத்திற்கு ‘அர்த்தத்தளம்’ என்று அண்மைக்காலங்களில் பொருள் சொல்லப்படுகிறது. ஒருவருடைய அர்த்தத்தளத்திற்கு, அவரது புறச்சூழல்கள் காரணமாக இருக்கின்றன. சமூகப் பொருளாதாரப்புறச்சூழல்களும், அக்கால கட்டத்தில் கட்டியெழுப்பி உலவவிடப்படும் கருத்தியல் புனைவுகளும் படைப்பாளியையும் பாதிக்கின்றன. வாசிப்பவர்களையும் பாதிக்கின்றன.

July 16, 2016

தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர்
தண்ணீர்
==========================================
காட்சி : 1
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று நபர்கள் மேடையில் உள்ளனர்.
கையில் மரத்தால் ஆன சுத்தியல்.
அதைக் கொண்டு முன்னால் உள்ள கட்டையில் தட்டுவதே அவர்களின் மொழி

July 15, 2016

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

தமிழுக்கு இருக்கை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு நிதிதிரட்டும் பணியில் இரண்டு இந்திய- அமெரிக்க மருத்துவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவலின்பேரில் இந்தப் பல்கலைக்கழகம் தமிழர்களின் வாயிலும் மூளையிலும் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 400 ஆவது ஆண்டுவிழாவைக்கொண்டாட இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. 1636 இல் தொடங்கப்பட்ட மசுசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியின் பெயர் கேம்பிரிட்ஜ். இப்பல்கலைக்கழகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழையது.

July 12, 2016

ஜேம்ஸும் திருமதி ஜேம்ஸும்

இடம் : முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு  ஹால்.
பின் இடது புறம்  சமை யலறையின் ஒரு பகுதி தெரிகிறது.
பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது.
பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி, கணினி போன்றன தெரிகின்றன.
ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால் மூவர் அமரக் கூடிய ஒரு சோபா ; அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள். வேலைப்பாடுகள் கொண்ட டீபாய்.
நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது.
அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம்.
இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம்.