தொலைந்துபோன அறிவுவாதம்

நீண்டகாலமாக நேரடியாகச் சந்திக்காத நண்பர்கள் பலரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. நான் இருக்கும் பாளையங் கோட்டைக்கு வந்தவர்களோடு நின்று நிதானமாகப் பேசும் நிலை இல்லை. நான் இல்லை என்பதைவிடஅவர்கள் இல்லை என்பதே உண்மை. அவசர அவசிய வேலை ஒன்றிற்கான பதற்றம் எப்போதும் போல அவர்களிடம் இருந்தது.

இடதுசாரித் தீவிரவாதம், பெரியாரியக் கருத்தியல் போராட்டம், தமிழ் அடையாளக் கலை இலக்கிய வடிவங்களை உருவாக்குதல், கோட்பாடுகளின் பின்னணியில் இலக்கியங்களை வாசித்தல், விமரிசனம் செய்தல் தலித், பெண்ணியவாதங்களுக்கு முகங் கொடுத்தல் எனக் கடந்த காலத்தில் ஒவ்வொன்றாக உரசிப்பார்த்துக் கற்றுக்கொண்ட காலங்களில் சந்தித்த நண்பர்கள் அவர்கள். அந்தச் செயல்பாடுகளின் போதெல்லாம் எனக்குள் ஓடிய மனநிலை ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இவை ஒவ்வொன்றும் மக்களிடம் உடனடியாகப் பேசிவிடக்கூடியன அல்ல; சிறுகுழுவாக இருந்து விவாதித்துச்செயல்பட்டு உருவாக்கி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய ரகசியச் செயல்பாடுகள் என்பதான என்ற நம்பிக்கை அது. இப்போது அந்த நம்பிக்கை என்னிடம் இல்லை. அந்த ரகசிய நடவடிக்கைகளை/நம்பிக்கையைக் குறுங்குழுவாதக் கொண்டாட்டம் எனவும் மிகை உணர்ச்சி வடிகால் எனவும் இப்போது நினைக்கிறேன். எனது நினைப்பு திரிபுவாதம் அல்லது நடுத்தரவர்க்க மனோபாவம் என்பதாக இருந்துவிட்டுப் போகட்டும்.
பாளையங்கோட்டைக்கு வந்த அவர்களின் வரவு எனக்குத் தகவலாகக் கூடத்தெரியவில்லை; தெரிவிக்க வேண்டுமென ஒருத்தரும் நினைக்கவில்லை. ரகசியச் செயல்பாடுகளில் நம்பிக்கைகொண்டவர்களுக்கு மட்டுமே தெரியப் படுத்தியிருக்க வேண்டும்.எனக்குத்தான் அந்த நம்பிக்கை இப்போது இல்லையே. வருத்தம் கொள்ளத் தேவையில்லை. ரகசியமாகச் சிந்தித்து உருவாக்கும் கருத்தியல்களைப் பரப்புரை செய்யும் பணியை யாரிடம் ஒப்படைப்பது என்பதைக் கூட அவர்கள் முடிவுசெய்திருக்கலாம். நண்பர்களுக்குப் பரிந்துரையெல்லாம் செய்யமுடியாது. தமிழர்கள் புரிந்துகொள்ளும் உரைமொழியோடும் உடல்மொழியோடும் பரப்புரை செய்யத் தகுதியான தமிழர்; ஒற்றைத் தமிழர் யாரென்பது அவர்களுக்கே தெரியும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்