March 12, 2015

மார்ச் 27. உலக அரங்காற்று தினம்சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை  உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது. 1961 இல் சர்வதேச அரங்காற்று நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா, பின்லாந்தில் செயல்பட்ட அந்நிறுவனத்தின் சார்பில் அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு தினத்தைக்  கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961 இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் அந்த நாள் மார்ச் 27 என உறுதி செய்யப்பெற்றது. கிவிமாவின் முன்மொழிதலை ஏற்றுக் கொண்ட ஸ்காண்டிநேவிய மையம் ஒவ்வோராண்டும் பெருமையோடு நடத்திக் கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தோடு உலகத்தின் பல்வேறு மூளை முடுக்குகளில் செயல்படும் நாடகக்காரர்களும் இணைந்து கொண்டு அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை. 


புதிய நாடகங்களை நிகழ்த்துதல், கருத்தரங்குகள்,  மாநாடுகளை நடத்துதல் என அரங்கியலாளர்கள் திட்டமிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான  அரங்கியல் செய்தியை அளிப்பதற்கு ஒரு அரங்கியலாளனைத்  தேர்வு செய்வது தான் அந்த நாளின்  முக்கியத்துவம். தேர்வு செய்யும் பொறுப்பைத் தன்வசம் வைத்திருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனம் யாரைத் தேர்வு செய்கிறது என ஒவ்வொரு அரங்கியலாளனும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். தேர்வு செய்யப்பட்டவர் உலக சமாதானப் பண்பாட்டிற்கு அரங்கியல் ஆற்றவேண்டிய செய்தியை வழங்குவார்.

இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அரங்க விரும்பிகளும் நாடக நிகழ்வுகளின் தொடக்கமாக நினைக்கின்றனர். அதன் முனைப்பு காட்டுபவர்கள் பாரிஸ் நகரத்தினர். இப்போது ஏறத்தாழ 100 கிளைகளைக் கொண்டிருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனங்கள் அந்நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.முதல் ஆண்டிற்கான(1962) செய்தியை எழுதியவர் பிரெஞ்சு நாட்டின் ழான் காக்தோ. அந்த நிகழ்வு நடந்தது ஹெல்சிங்கியில். அவரைத் தொடர்ந்து அரங்காற்று தினச் செய்தியை வழங்கியோர் பட்டியல் வருமாறு: 1962 - ழான் காக்டௌ
1963 - ஆர்தர் மில்லர்
1964 லாரன்ஸ் ஒலிவர் -ழான் லூயிஸ் பர்ரோல்  
1965 - யாரோ / யார் வேண்டுமானாலும்
1966 _ ரெனெ மாஹெ ( யுனெஸ்கோவின் இயக்குநர்)
1967 - ஹெலன் வெய்கல்  
1968 - மிகுயெல் ஏஞ்சல் ஆஸ்ட்ரியஸ்
1969 - பீட்டர் புரூக்  
1970 - டி. சாஸ்டகோவிச்
1971- பாப்லோ நெருடா  
1972 - மவுரிஷ் பிஜார்ட்
1973- லூசினோ விஸ்கோண்டி
1974 - ரிச்சர்ட் பர்டன்
1975 - எலைன் ஸ்டீவர்ட்
1976- யூஜின் அயனெஸ்கோ  
1977 - ரடு பெலிகன்
1978 - தேசியச் செய்தி
1979 -  தேசியச் செய்தி
1980 -  ஜனுச் வார்மின்ஸ்கி  
1981 - தேசியச் செய்தி
1982- லார்ஸ் அப்மல்ம்போர்க்  
1983- அமடோவ் மக்தர் ம்பொவ் (யுனெஸ்கோ இயக்குநர்)  
1984 - மிகைல் ட்சரெவ்  
1985 - அந்த்ரெ லூயிஸ் பெரினெட்டி  
1986 - வொலெ ஷொயுங்க  
1987- அண்டொனியொ களா.  Antonio GALA
1988- பீட்டர் புருக்  
1989 - மார்டின் எஸ்லின்  
1990 - கிரில் லவ்ரோவ்
1991 - பெடரிக்கோ மேயர்  (யுனெஸ்கோ இயக்குநர்)  
1992 - ஜார்ஜ் லவெல்லி - ஆர்த்ரோ உஸ்லர் பெய்ட்ரி
1993 -எட்வர்ட் ஆல்பி  
1994- வல்லெவ் ஹவெல்
1995 - ஹம்பெர்டோ ஒர்ஸ்னி  
1996 - ஷாடல்லா வான்னொஸ்
1997- ஜ்யெங் ஓக் கிம்  
1998 - சர்வதேச அவைக்காற்று நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டின் செய்தி  
1999 -விக்டிஸ் ஃபின்பகடடோட்டிர்
2000 - மைக்கேல் ட்ரெம்ப்ளே  
2001 - லகோவோஸ் கம்பனெல்லிஸ்
2002 - க்ரிஷ் கர்னாட்  
2003 - டன்க்ரெட் டோர்ஷ்ட்  
2004- ஃபாதியா எல் அஸ்ஸெல்
2005- அரிய்னெ ம்னொச்கினெ
2006 - விக்டர் ஹ்யுகோ ரஸ்கொன் பண்டா
2007 - சுல்தான் பின் மொகம்மது அல் ஹாஸிமி  
2008 - ராபர் லெபச்
2009 - அகஸ்டோ போவெல்
2010 - ஜுடி டென்ச்
2011 - ஜெசிகா எ. காஹ்வா
2012 ஜான் மால்கோவிச்  
2013 டெரியோ போ
2014 -ப்ரெட் பெய்லி.


ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் அரங்கியல் ஆளுமையால் எழுதப்படும் நாடகதினச் செய்தி 20க்க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னால் வாசிக்கப்படும். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என அனைத்து ஊடகங்கள் மூலம் பரப்படும் அரங்கியல் செய்தியை அனைத்துக் கண்டத்து மக்களும் கேட்டுப் பரிமாறிக் கொள்ளும்போது அன்பையும் அமைதியையும் பரிமாற்றம் செய்யும் உணர்வு நிலையை உருவாக்குவார்கள். இந்த ஆண்டுச்  செய்தியை யார்  வழங்கப்போகிறார்கள்.?


No comments :