December 21, 2014

சமஸ்: அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்காலைத் தினசரிகளில் நான் காலையில் வாசிப்பன செய்திகள். நீண்ட செய்திகள் - பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால் அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். அலுவலகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன். மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப் போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு.

December 20, 2014

பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்

1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகுவோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப்படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது. ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.

December 19, 2014

காலில் ஒட்டாத கரிசல் மண்வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு என்றொரு தொடரைக் குமுதம் இதழில் கி.ராஜநாராயணன் ஆரம்பித்தபோது நான் இந்தியாவில் இல்லை. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் போலந்து நாட்டுக்காரர் களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்த நண்பர் ஒருவர் ‘உனது பெயரும் அவ்வப்போது இடம்பெறுகிறது’ எனத் தொலைபேசியில் சொன்னார். சொன்ன பிறகும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த பிறகு தான் கிடைத்தது. 

December 08, 2014

வெண்பனி போனது; வசந்தமே வருக; வருக வசந்தமே!!
தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நதிக்கு எனது வாழ்த்துகள்
கண்டத்தின்  வரைபடத்தைப் பார்.
 குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனவே அவை என்ன? 
என்னவெல்லாம் நிரந்தரமானவை ; எவை நிலைத்திருக்கப் போகின்றன
நதிகளையும் மலைகளையும்  தவிர வேறெவற்றைச் சொல்ல முடியும்
மனித ஞாபகங்களையும் விட மூத்தவை அவற்றின் நினைவுகள்
ரொம்பவும் உண்மையானவை; மறைந்து ஓடும் ஆழ்மனச் சுழல்கள்
பேசிப்பேசித் தீர்த்துக் கொள்ளும் அல்லது மௌனச் சுழலாய் நகர்ந்து போகும்

November 23, 2014

தமிழ் என்பது நபர்கள் அல்ல
வெற்றித்தமிழர் பேரவை - அண்மையில் (நவம்பர்,11) உத்தர்கண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் என்பவருக்குச் சென்னையில் பாராட்டுவிழா ஒன்றை நடத்திய அமைப்பு அல்லது அறக்கட்டளை. இவ்வமைப்பு கவி வைரமுத்துவின் தமிழ்ப் பணியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒன்று.
இலக்கிய அமைப்புகள் பலவிதமானவை;அவற்றின் செயல்களுக்குப் பல நோக்கங்கள் இருக்கின்றன. நிதானமாக யோசித்துப் பார்த்தால், தீர்மானிக்கப்பெற்ற இலக்கிய முன் முடிவுகளுக்காகவே அவை செயல்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 

November 12, 2014

ஜெயமோகனின் வெண்முரசு வெளியீட்டு விழா: பின் நவீனத்துவ கொண்டாட்டங்களின் வகைமாதிரி


வெண்முரசு வெளியீட்டுவிழாவைச் சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்தப் போகிறது. இந்நிகழ்வின்மூலம் திரு மு. கருணாநிதி, இரா. வைரமுத்து ஆகியோர் வரிசையில் இணைக்கப்படுகிறார் ஜெயமோகன். தங்களின் எழுத்துகளைச் சந்தைப்படுத்தும் உத்தியில் இதுவரை அவ்விருவரும் பின்பற்றிய அதே உத்திதான் இதுவென்றாலும் நிலைப்பாட்டில் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.

October 06, 2014

மெட்ராஸ் - தலித் அரசியல் மீதான விமரிசனம்

திருநெல்வேலி  ‘பாம்பே’யில் மெட்ராஸ்.

ஆயுத பூசையன்று இரண்டாம் ஆட்டம் பார்த்தேன். படம் பார்த்தவர்கள் பலரும்  ‘பார்க்க வேண்டிய படம்’ என்றே சொல்லியதை இந்த வாரம் முழுக்க என் செவிகள் கேட்டிருந்தன. ஒரு அரங்கில் ஓடுவதற்கே இப்போது வரும் படங்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் திருநெல்வேலி போன்ற இடைநகரங்களிலேயே இரண்டு அரங்குகளில் நிறைந்த காட்சிகளாக ஒருவாரத்தைத் தாண்டி விட்டது மெட்ராஸ்.

October 05, 2014

ழான் க்ளோத் இவான் யர்மோலாவுக்கு அஞ்சலி ஊடக நண்பர்களே! 
ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும் இந்தத் தகவலைச் சொல்லாமல் மறைப்பது சரியாக இருக்காது.
நமது அருமை நண்பன் ழான் க்ளோத் இவான் யர்மோலா (1918 - 2014)  தனது தொண்ணூற்று நான்கு முடிந்து தொண்ணூற்றைந்து நடந்து கொண்டிருக்கும்போது இறந்து விட்டான் என்பதை உறுதியான தகவலின் வழியாக உறுதி செய்கிறேன்.

September 30, 2014

எண்பதும் நாற்பதும்போலந்து, வார்சா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் கற்பிக்கப்போன பேராசிரியர்கள் பலருக்கும் கிடைக்காது ஒரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. 2011 அக்டோபர் 10 இல் வார்சா பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இரண்டு நாட்கள் கழித்துத் துறையில் நடக்க இருக்கும் 3 நாள் கருத்தரங்க அழைப்பினைக் கொடுத்துவிட்டு நீங்கள் இருக்கப்போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் இன்னும்  இரண்டு பெரும் நிகழ்வுகளில் பங்கேற்கப்போகிறீர்கள் என்றார். என்ன நிகழ்வுகள் என்று நான் கேட்கவும் இல்லை; அவர் சொல்லவுமில்லை.

September 29, 2014

கண்டிக்கவே முடியாத நிலையில் தண்டனை


இதனை எதிர்பார்த்துத் தமிழகம் இருந்திருக்கவில்லை.குற்ற நிரூபணம், அதற்கான தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, இத்துடன்  அபராதத் தொகையாக ரூ 100 கோடி என்பதை நினைவுக்குள்கொண்டுவரவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் மனநிலையை அ இ அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் நிச்சயம் தவறான நினைப்பு என்றே சொல்வேன். தமிழ்ப்பொதுமனமே அப்படித்தான் நினைக்கிறது. இப்படிச் சொன்னால் அந்தப் பொதுமனம் எங்கே இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.

September 07, 2014

தனித்தன்மையான கல்வி; தனித்துவமான வாழ்க்கை: எதிர்நீச்சலடிக்கும் எதிர்பார்ப்பு.வார்சாவில் நான் முழுமையான மொழியாசிரியனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கசப்போடு தான் முதலில் ஏற்றுக் கொண்டேன். கசப்புக்கான முதல் காரணம் முழுமையான மொழியாசிரியனாக என்னை எப்போதும் கருதிக் கொண்டதில்லை. அத்துடன் மொழிக்கல்வியில் ஒரேவிதமான கற்கை முறையை எல்லா இடத்திலும் பின்பற்ற முடியாது. ஒருவரின் தாய்மொழியைக் கற்பிக்கும் அதே முறையை எல்லா நிலையிலும் பின்பற்றக் கூடாது என்பது மொழியாசிரியர்களுக்குத் தெரியும்.

September 04, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : நவீனத்துவ சினிமாவின் தமிழ் முகம்இரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. படம் பார்க்கலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டு அரங்கிற்குக் கிளம்பியபோது மனதில் இருந்த படங்கள் இவையல்ல. நினைத்துப் போன படங்களைப் பார்க்க முடியாமல் திசைமாறிப் பார்த்த இரண்டு படங்களுமே பிடித்த சினிமாக்களின் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டது தற்செயலின் அடுத்த கட்டம்.  திரைக்கு வந்த முதல் நாளில் இரண்டையும் பார்க்க நேர்ந்துவிட்டதையும்கூடத்  தற்செயல் விளைவின் பகுதியாகவே சேர்த்துக் கொள்ளலாம்.(முதல் படம் கார்த்திக் சுப்பராஜின் ஜிகிர்தண்டா ; சென்னை நகரத்தின் பல் அரங்கு வளாகம் ஒன்றில். இரண்டாவது  ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம்; திருநெல்வேலியில் அரைநூற்றாண்டு கடந்த அரங்கம் ஒன்றில்) 

August 17, 2014

பழைய படம்; புதிய அனுபவம்: பூர்ணமை நாளில் ஒரு மரணம்11-07-2014 வெள்ளிக்கிழமை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர் ஒருவரின் வேலைகளை மதிப்பீடு செய்யும் பணி. அன்றே முடித்து அன்றே திரும்பியிருக்கலாம். பாண்டிச்சேரியில் சுற்றித் திரிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நாட்கள் என்று சொல்வதைவிட ஆண்டுகள் சில ஆகிவிட்டன எனது சினிமாப் பார்க்கும் வெறிக்குத் தீனி போட்ட நகரம் அது. அந்த நகரத்தின் மூலை முடுக்குகளில் இருந்த அரங்குகளில் எல்லாம் இரண்டாம் ஆட்டங்கள் பார்த்திருக்கிறேன்.

July 28, 2014

திருமணம் என்னும் நிக்காஹ்: தமிழ்ச் சினிமாவின் பொதுப் போக்கிலிருந்து ஒரு விலகல்


காதல் பற்றிப் பேசாத ஒரு தமிழ்ச்சினிமா ஆண்டில் ஒன்றிரண்டு கூட வருவதில்லை.  ‘இவர்களின் காதல் எப்படிப்பட்டது தெரியுமா?’ என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு கதையை விரிக்கிறார்கள் நமது தமிழ்ப்பட இயக்குநர்கள். அப்படி விரிக்கும் தொண்ணூறு சதவீதக் கதைகள் நமது சங்கக் கவிதைகளின் விரித்தி உரைகள் தான்.

July 22, 2014

பத்துக்கதைகள்- புனைவின் பத்து முகங்கள்


கல்லூரிக் காலத்தில் மாதம் தவறாமல் வாசித்துக் கொண்டிருந்த இலக்கியப் பத்திரிகை கணையாழி.  “இலக்கியச் சிந்தனையின் மாதச் சிறுகதையாக கணையாழியில் வந்த கதை தேர்வு பெற்றுள்ளது” 

ன்ற குறிப்பை அதில் அடிக்கடி பார்ப்பேன். எனக்குள் பலவிதமான தூண்டுதல்களைச் செய்த குறிப்பு அது என்பதை எப்போதும் மறப்பதில்லை. இந்தக் கட்டுரைக்கும்கூட அந்தக் குறிப்புதான் தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

மன்னிப்பதிலிருந்து அல்ல; மன்னிப்புக் கேட்பதிலிருந்து தொடங்கலாம்.


பேரினவாதக் கருத்தியலும் மேட்டிமைவாத- உயர்சாதிக் குறுங்குழுவாதமும்- மோதிக் கொண்ட ஒரு பூமியாக இலங்கையை விரித்துக் காட்டிப் பேசத்தொடங்கும் பிரசன்ன விதனகேயின் சினிமா ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு இந்தமுறை சென்னை சென்ற போது கிடைத்தது. படத்தின் ஆங்கிலத் தலைப்பு With You Without You. ஆங்கிலத் தலைப்பை அப்படியே நின்னோடா? நீயின்றியா?  என மொழி பெயர்க்காமல்  பிறகு எனத் தலைப்பிட்டு இருந்தார் அதன் இயக்குநர். அவரது தாய்மொழியான சிங்களத்தில் வைத்துள்ள தலைப்புக்கு என்ன பொருள் எனத் தெரியவில்லை.

June 10, 2014

தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்

          
சுஜாதாவை நினைவுகூரும் விதமாக உயிர்மை பதிப்பகம் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தும் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2014 இல் அதன் ஆறாவது ஆண்டு நிகழ்வில் சிறுகதைக்கான விருதைப் பெற்றுள்ளது என் ஸ்ரீராமின் மீதமிருக்கும் வாழ்வு என்ற சிறுகதைத் தொகுப்பு. கதைகள் எழுதப் பெற்ற முறையிலும் சரி, அளவிலும் சரி ஒரு சிறுகதைத் தொகுப்பின் வரையறைகளைத் தவிர்த்துள்ள தொகுப்பு இது.

June 08, 2014

திரள் மக்கள் பண்பாடு: வெகுமக்கள் சினிமா


திரைப்படங்களைத் திறனாய்வு செய்தலின் பிரச்சினைகள்    
தமிழக அரசுக்கு அதிகமாக வரி கட்டுகிற துறை திரைப்படத் துறையே.எனவே,அரசு அதற்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் எனப் பெருங்குரலில் கோருகின்றனர். திரைப்படத் தயாரிப்புக்கு ஆகும் செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தக் கலையை யாராலும் காப்பாற்றமுடியாது. இது இன்னொரு கூட்டத்தின் குரல். திருட்டு விசிடி-க்களின் அச்சுறுத்தல்களினால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட உலகம். இது மற்றொரு கூட்டத்தின் குரல்
இந்தக் குரல்களோடு சேர்ந்து சினிமாவைப்பார்க்கலாமா? ரசிக்கலாமா..?
தீபாவளிக்கு வந்த ஐந்து படங்களில் ...........  மட்டுமே நிற்கப் போகிறது. மற்றதெல்லாம் பணால்.. இது ஒருவகை விமரிசனக்குரல்.

June 05, 2014

சாபமாகிவிடும் வரம்

நாடகப் பிரதியின் பகுதிகளை அல்லது கூறுகளைப் பற்றிப் பேசும் விமரிசகர்கள்,
  1. பின்னல்,
  2. பாத்திரங்கள்,
  3. சிந்தனை,
  4. மொழிநடை,
  5. இசைக் கூறு,
  6. காட்சி ரூபம்,
என்பனவற்றை ஒரு தொகுதியாகவும்,
  1. உரையாடல்,
  2. காட்சி,
  3. அங்கம்
என்ற மூன்றையும் இன்னொரு தொகுதியாகவும் கூறியுள்ளனர்

June 03, 2014

கிராமங்களூடாகச் சில பயணங்கள்

போலந்தில் நானிருந்த  இரண்டாண்டுக் காலத்தில் ஐரோப்பிய நகரங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்ததை விடக் கிராமங்களைப் பார்க்கவே அதிகம் விரும்பினேன்; நினைத்தேன். நகரங்கள் பலவற்றிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் அக்கறை கொண்டதைவிடக் கிராமங்கள் சிலவற்றைப் பார்க்க வேண்டும்; அங்கே சில நாட்கள் தங்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. போலந்தின் குறுக்கும் நெடுக்குமாக நான் மேற்கொண்ட கார்ப்பயணங்கள் அந்த ஆசையை மேலும் மேலும் அதிகமாக்கின

மனிதநேயமும் நடப்பியல் வாதமும் :

மனிதநேயம் (Humanism) என்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக் குறித்த ஒரு தத்துவப் பார்வை. அதன் அடிப்படைக்கூறு, மனிதர்களுக்குள் செயல்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிற்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்லுவது. இதன் தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு.

May 30, 2014

நடப்பியல் இயக்கமும் தமிழ்ப் புனைகதைகளும்

இலக்கிய இயக்கங்களில் அதிகம் கொண்டாடப்படாத இயக்கம் நடப்பியல் (Realisam) இயக்கம். ஆனால் நீண்ட கால வாழ்வையும் நிகழ்காலத் தேவையையும் கொண்ட இயக்கமாக இருப்பது. நடப்பியலின் சிறப்பு. அதன் விளைநிலம் புனைகதை. புனைகதையின் வரவோடு நடப்பியல் வந்ததா? நடப்பியலின் தோற்றத்தோடு புனைகதைகள் உருவாக்கப் பட்டனவா? என்ற ஐயத்தைத் தீர்க்க முடியாத அளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைந்தனவாக இருக்கின்றன. 

May 19, 2014

கற்பித்தல் என்னும் அலைக்கழிப்பு


 
மொழி எழுத்தில் வாழ்கிறதா? பேச்சில் வாழ்கிறதா? எனக் கேட்டால் மொழியியலாளர்கள் பேச்சு மொழிதான் ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பேச்சு மொழி இல்லாமல் எழுத்து மொழியாக மட்டும் ஒரு மொழி நீண்டகாலம் உயிருடன் இருக்க முடியாது என்கிறார்கள். ஆனால் நமது அரசுகளும் அதற்கு ஆலோசனை சொல்லும் அறிஞர்களும் பேச்சு மொழியைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்து மொழியில் சிதைவு ஏற்படக் கூடாது எனக் கவனத்தோடு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள். 

May 10, 2014

பெரிய கள்ளும் சிறிய கள்ளும்

வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகச் சேர்ந்த முதல் வாரத்தில் மாணவிகள் அளித்த விருந்தைச் சிறுவிருந்து எனக் குறித்து வைத்த நான், டேனுடா ஸ்டாசிக்கின் வீட்டில் நடந்த விருந்தைப் பெருவிருந்து என நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளேன். காலத்தைக் காரணமாக்கிப் பெயர் சூட்டாத தமிழர்கள் இப்படித் தான் சொல்வோம். ஆனால் ஐரோப்பியர்களின் பெயரிடல் காலத்தைக் கவனத்தில் கொள்வது. அதனால் பெருவிருந்தை நீண்ட விருந்து (Long Feast) எனச் சொல்வார்கள். ஔவையின் ”சிறிய கள்ளையும் பெரிய கள்ளையும்” ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்க முடியாமல் தவிப்பது ஏனென்று புரிந்து கொள்ளலாம். எழுதியிருந்தால், போலந்தில் இருந்த காலத்தில் பல்வேறு வகையான விருந்துகளில் பங்கேற்றேன் என்றாலும் இவ்விரண்டும் அடையாள விருந்துகளாக நினைவில் நிற்கின்றன.  

May 07, 2014

கதைகளாக மாறும் கவிதைக் கணங்கள்:ரவிக்குமாரின் கடல்கிணறு தொகுப்புக்கான முன்னுரை

நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், கற்பிதங்கள் என்ற சொற்களுக்கிடையிலான வேறுபாடுகளை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தால் வேறுபாடுகள் எதுவும் இல்லையோ என்று தோன்றும். எனக்குத் தோன்றியுள்ளது. வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றால் தமிழ் மொழியில் ஏன் இந்த மூன்று சொற்களும் உருவாக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்து கொண்டே இருக்கிறது.

May 03, 2014

தடைகளும் விடைகளும்

இந்தச் செய்தியைத் தினமணி நாளிதழின்  திருநெல்வேலி பதிப்பில் (20,மார்ச், 2014) நான் வாசித்தேன்; நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கொற்கை நாவலில், பரதவ குல சமூகத்தினரை பற்றி இழிவான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அந்த நாவலுக்குத் தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதனையொத்த இன்னொரு செய்தியை ஒரு மாதத்திற்கு முன்பு நாளிதழ் ஒன்றில் வாசித்தேன்: நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.

March 15, 2014

பெண்ணியம்: இமையம் கிளப்பிய சர்ச்சை

இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டுப் போயிருந்தால் இவ்வளவு சர்ச்சைகளும் பேச்சுகளும் உண்டாகியிருக்காது என்றே நினைக்கிறேன். முதலில் கட்டுரை அப்புறம் சர்ச்சைகளும் விளக்கங்களும்

பெண்ணியம்: கருத்தரங்க நிகழ்வு

“ பெண்ணியம்: எழுத்துகள் வாசிப்புகள் சொல்லாடல்கள் என்றஇரண்டு நாள் பயிலரங்கின்   படத்தொகுப்பு. 

ஒரு கருத்தரங்கமும் பின் விளைவுகளும்

கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு. கடந்த இரண்டு மாதமாக நான்கு பல்கலைக்கழகங்கள், ஆறு கல்லூரிகளுக்குச் சொற்பொழிவாற்றவும் கட்டுரை வாசிக்கவும் சென்றிருக்கிறேன். இன்னும் சில கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதற்கிடையில் எங்கள் பல்கலைக்கழகத்திலும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் காட்ட வேண்டியதும் அவசியம். இந்தக் கல்வி ஆண்டில் நான் ஒருங்கிணைக்கும் இது கடைசி நிகழ்வு. பெண்ணியம்: எழுத்துகள் வாசிப்புகள் சொல்லாடல்கள் என்னும் தலைப்பில் பயிலரங்கு ஒன்று மார்ச் 4, 5 தேதிகளில் நடக்க உள்ளது. வழக்கமாகப் பெண்ணியம் பேசும் ஆளுமைகளைத் தவிர்த்துவிட்டு நிதானமாகப் பார்வையை வெளிப்படுத்தும் புதிய ஆளுமைகளை அழைத்திருக்கிறேன். சிலருக்கு பல்கலைக்கழகத்தில் பங்கேற்கும் முதல் நிகழ்வு எனச் சொன்னார்கள். புதிய நீர்ப் பெருக்கு வழித்தடங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்

January 26, 2014

நள்ளிரவு ரயில் பயணங்கள்கோவையிலிருந்து திருப்பத்தூருக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டும் என நினைத்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயில் இரவு 09.50 -க்குத் தான். போத்தனூர் ரயில் நிலையக் கொசுக்களோடு நடத்திய யுத்தத்தில் சிந்திய ரத்தத்தை விடச் சோகமானதாக ஆகி விட்டது அந்தப் பயணம்.

January 05, 2014

ஜெயமோகனின் வெண்முரசு வாசிக்கத் தொடங்கியுள்ளேன்:

 ஆன்மா தொலையாத அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நள்ளிரவு வரை கதை சொல்லிகள் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். விசேசமான,விதம் விதமான கதை சொல்லிகள் எல்லாம் உண்டு. ஒரு சுவாரசியமான கதை சொல்லி இருந்தார். அவர் பெயரும் ராமசாமி தான்.