December 22, 2013

ஜோ.டி. குருஸ் : அங்கீகரிக்கப் பட வேண்டிய படைப்பாளி

எல்லாத் துறைகளிலும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஓர் அமைப்பின் விருது என்பது அது வழங்கும் பணமுடிப்பாக மட்டும் இருப்பதில்லை. அடையாளச் சின்னம் தாங்கிய பதாகையும் சேர்ந்தது. விருது என்பது ஊக்கமும் அங்கீகாரமும் இணைந்த ஒன்று. அடையாளப்படுத்தும் இன்னொரு பணியும் விருதுக்குப் பின்னால் இருக்கிறது.

December 18, 2013

காணாமல் போன ராமசுவாமி

நேற்று (17-12-2013)மாலை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் லயோலா அரங்கின் முன்பாக வியாபாராமாயணம் என்னும் நாடக நிகழ்வொன்றைப் பார்த்தேன். அக்கல்லூரியில் தகவல் தொடர்பியல் துறை ஏற்பாடு செய்திருந்தது. அதனோடு மேலும் சிவசுவும் , சித்திரமும் கைப்பழக்கம் கதிரும் இணைந்திருந்தார்கள். பாளையங்கோட்டையில் இவர்களைப் போன்ற தொடர்பாளர்களின் இணைப்புகளால் தான் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அதன் மூலம் நிறுவனங்களுக்குப் பெருமையும் ஏற்பாடு செய்பவர்களுக்குச் சில தகுதிகளும் உண்டாகின்றன. அதைப் பற்றி எப்போதாவது பேசலாம். இப்போது நாடகத்தைப் பற்றி .

December 14, 2013

நிஜம் அல்ல; புனைவு

 05:42  காலை வணக்கம்
05:47 காலை வணக்கம்
 05:49  இந்த எழுத்தின் வழி உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
05:49  நானும் அப்படியே..
 05:50  மலேசியாவில் பிறந்தவரா..? இந்தியாவிலிருந்து போனவரா?
05:53  இரண்டும் இல்லை. மலேசியாவில் இருக்கிறேன். 10 வருடங்களாக இங்கு வாழ்கிறேன். எனக்கு இந்தியாவைப் பிடிக்கும்; அதன் பண்பாடு விருப்பமானது. அதனால் இந்தியப் பெயரில் ஒரு முகநூல் கணக்கு தொடங்கியிருக்கிறேன்

November 05, 2013

ஆறு மாதத்தில் தமிழ் நெடுங்கணக்கைக் கற்றுக் கொண்டார்கள்


 வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்த அனுபவம் சுகமானது. இங்கிருந்து போன முதல்வருடம் புதிய மாணாக்கர்கள் இல்லை. இரண்டாம் ஆண்டில் 7 பேரும், மூன்றாம் ஆண்டில் 3 பேருமாகப் 10 பேர் தான். அவர்களுக்குப் பேச்சுத் தமிழ் கற்பிப்பதுதான் எனது வேலை. தமிழ் நெடுங்கணக்கு ஏற்கெனவே அவர்களுக்குத் தெரியும் . அதைக் கற்பிக்கும் வாய்ப்பு அந்த வருடம் வாய்க்கவில்லை.

October 24, 2013

கேள்விகளா? குற்றச்சாட்டுகளா?


எழுத்தாளர் இமையம் 22-10-2013 தேதியிட்ட தி இந்து நாளிதழுக்கு எழுதி அனுப்பிய கட்டுரையை அப்படியே தருகிறேன். அதில் நிகழ்காலத் தமிழ் எழுத்தாளர்களை நோக்கி எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை. அவைகளைக் கேள்விகள் என நினைப்பதை விடக் குற்றச்சாட்டுகள் என்றே கொள்ள வேண்டும். சொரணையுள்ள கதைக்காரர்கள் முன் வந்து விவாதிக்க வேண்டும். அப்படியெல்லாம் நமது புனைகதை எழுத்தாளர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்றாலும் ஆசை தான்.

October 09, 2013

வகுப்பறையில் மாணவர்கள் - ஆசிரியர்கள்

2013 அக்டோபர் 6 இல் ஒளிபரப்பான நீயா நானாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றிருந்தேன். கல்வித்துறை சார்ந்த விவாதமேடை அதிலும் வகுப்பறைகள் எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதம்.
எனக்குப் பலவிதமான வகுப்பறைகளைப் பார்த்த அனுபவம் உண்டு. மாணவனாகவும் ஆசிரியனாகவும் கல்லூரி முதல் சில பல்கலைக்கழகங்கள் வரை வகுப்பறையில் பாடம் கற்றிருக்கிறேன்; கற்பித்திருக்கிறேன். அதையெல்லாம் இங்கே சொல்ல வாய்ப்பில்லை. விவாதத்தைக் கேட்டுப் பாருங்கள்:  http://www.youtube.com/watch?v=T0NdSRvDcyo

மொழி இலக்கியப் பாடத் திட்டங்கள் உருவாக்கலுக்கான பயிலரங்கு

எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இலக்கியக் கல்விக்கான பாடத்திட்ட உருவாக்கம் என்னும் பொருளில் இருநாள் பயிலரங்கு ஒன்றை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். 
பாடத்திட்டக் குழுக்கள் சார்ந்த பங்கேற்பாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், மதிப்பீட்டாளர்கள், வல்லுநர்கள், கருத்துரையாளர்கள் என ஐவகைப் பிரிவினர் இடம் பெறுவிதமாகத் திட்டமிடப்பட உள்ளது

October 05, 2013

பாண்டிச்சேரித் தொடர்பு:நிகரி விருது ஏற்புரை

எனது நீண்ட நாள் நண்பர் ரவிக்குமார் நடத்திக் கொண்டிருக்கும் மணற்கேணி ஆய்விதழின் சார்பில் உருவாக்கி அளிக்கும் நிகரி = சமம் விருதை முதல் ஆண்டிலேயே நான் பெறுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் "நமது நண்பர்; அதனால் விருது அளிக்கிறார்" எனப் பலரும் எண்ணக்கூடும் என்ற நினைப்பும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்போடு இந்த விருதுக்கு நான் எப்படிப் பொருத்தமானவன் என நினைத்துப் பார்க்கிறேன்.

September 30, 2013

நிகரி விருது - அறிவிப்பும் பரிசளிப்பும்


நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

September 23, 2013

ஆண்மை அடங்கட்டும்


தினசரிக் காட்சி என்று சொல்ல முடியாது. எனது பணி இடத்துக்குச் செல்லும் வாகனத்தைத் தவற விடாமல் பிடித்து விடும் நோக்கத்தோடு சரியான நேரத்துக்கு வரும் ஒவ்வொரு நாளும் காணும் காட்சி என்று சொல்லலாம்.

September 11, 2013

காலத்தின் எழுத்தாளன்

இமையத்தின் பெத்தவன் கதை அண்மையில் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது . தெலுங்கு- தமிழ்ச் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பில்  பெத்தவன் கதை முப்பது பக்கங்களில் (464-493) மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளது. மொழி பெயர்த்துள்ளவர் புருஷோத்தம தாஸ். 20 கதைகள் அடங்கிய அந்தத் தொகுப்பில் பெத்தவன் கதை இடம் பெற்றுள்ளதும், திருப்பதி பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திற்கு ஏற்றுக் கொண்டுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.  தமிழ் நாட்டில் இதுபோல ஒரு பல்கலைக்கழகத்தில் உடனடியாகப் பாடமாக ஆகும் சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.

September 01, 2013

குகைமரவாசிகள் : திரும்பவும் முருகபூபதியின் அந்நிய எதிர்ப்பு நாடகம்

முருகபூபதியின் எல்லா நாடகங்களையும் பார்க்கும் வாய்ப்பு எப்படியோ கிடைத்து விடுகிறது. கவனிக்கபட வேண்டிய மாணவன் என்ற நிலையில் அவனது ஆசிரியராக நானே உருவாக்கிக் கொள்கிறேன் என்று கூடச் சொல்லலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதன் மீதான விமரிசனங்களைப் பொறுப்புடனும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

August 08, 2013

எது ஆறு? எது சேறு? இப்பவாவது சொல்லுங்கள் பிரதமர் அவர்களே!


விடுதலை அடைந்த இந்தியா தனக்கான அரசியல் அமைப்பை எழுதிப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்ட ஆண்டு 1950. எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் பொதுவுடைமைக் கட்டமைப்பின் மீது நம்பிக்கையும் கனவுகளும் இருந்த நேரம். அந்த நம்பிக்கைகளும் கனவுகளும் தான் அப்போது விடுதலை அடைந்த நாடுகள் பலவற்றின் அரசியல் அமைப்பில் சோசலிசத்தை நோக்கிய பயணத்திற்கான குறிப்புகளைச் சேர்க்கச் செய்தன. 

July 20, 2013

உண்மைக்குப் பக்கத்தில் ஒரு சினிமா: ஆந்த்ரே வெய்தாவின் வாக்களிக்கப் பெற்ற பூமி

பழைய படம் தான். 1975 இல் வந்த அந்த போலிஷ் படத்தின் தலைப்பு ஜெமியா ஒபிஜியானா. ஆங்கிலத்தில் ப்ரொமிஸ்டு லேண்ட் (Promised Land) என மொழி பெயர்க்கப் பெற்றதைத் தமிழில் வாக்களிக்கப் பெற்ற பூமி என பெயர்த்துச் சொல்லலாம். தொழிற்புரட்சி மற்றும் நகர்மயமாதலின் பின்னணியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தை எனது மாணவிகளோடும் மாணவர்களோடும் சேர்ந்து பார்த்தேன். எனக்கு நம்பிக்கையுள்ள கலை இலக்கியக் கோணத்தில் இந்தப் படம் முக்கியமான படம் என்று நான் சொன்னேன். உடனே அவர்களில் ஒருத்தியும் ”ஆமாம்; இது எங்களுக்கும் முக்கியமான படம்” என்று பலரையும் உள்ளடக்கிச் சொன்னாள்.

June 29, 2013

கல்வியின் மொழி

ஒரு மனிதன் எந்த மொழியின் வழியாகக் கல்வி கற்க வேண்டும்?

இந்தக் கேள்விக்குத் தாய்மொழியின் வழியாகக் கல்வி கற்பதே சிறந்த கல்வி எனப் பலரும் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். மொழிகளின் இயல்புகள், மாற்றங்கள், வளர்ந்த வரலாறு, தேய்ந்து காணாமல் போனதன் காரணங்கள் எனப் பலவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளைச் சொல்லும் மொழியியல் (Linguistics) துறையைச் சார்ந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் தாய்மொழியின் வழியாகக் கற்றலே இயல்பானது; எளிமையானது; சரியானது எனச் சொல்கின்றனர்.

June 01, 2013

வரலாற்றிலிருந்து நிகழ்காலத்தை நோக்கி: பாலாவின் பரதேசி

பாலாவின் பரதேசி படத்தைத் திரையரங்கின் பெருந்திரையில் அசையும் பிம்பக் கோர்வையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. கணிணியின் குறுந்திரையில் பார்க்கத்தக்க இணைப்புக்காகக் குறைந்தது 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.  காத்திருந்து பார்த்தவுடன் கட்டுரையொன்றை எழுதி தமிழ்நாட்டுப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியது, அதே நேரத்தில் பரதேசி போன்ற திரைப்படத்தைக் கணிணியில் பார்த்து விட்டு விமரிசனம் செய்வது, அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பு, அக்கறை, திரைமொழி சார்ந்த நுட்பங்கள் போன்றவற்றிற்கு நியாயம் செய்வதாக அமையுமா?

May 30, 2013

தமிழர்கள் இப்படி மட்டும் தான் இருக்கிறார்களா ஜெயமோகன்?

இப்படி இருக்கிறார்கள் என்று தலைப்பு வைத்து ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=36719 எழுதிய அந்தக் கட்டுரை ”இப்படிப் பட்ட ஒரு கூட்டம்  தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது” என்று எழுதிக் காட்டியதோடு முடித்திருந்தால் தனது வலைப்பூவில் அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் ஒன்று என நினைத்து வாசிக்கப்பட்டு விடப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை வழங்காமல் இப்படிப்பட்ட கூட்டம் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்ல முயன்றதன்

May 16, 2013

மொழிக் கல்வியும் மொழிவழிக் கல்வியும்


தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகளை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற அறிவிப்பை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்று குழப்பமாக இருக்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் தாய்மொழிவழிக் கல்வியை மட்டும் வலியுறுத்தும் தைரியம் எனக்கு இல்லை. அப்படி வலியுறுத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய பட்டங்கள் பலவாக இருக்கும் என்பதும் எனக்கு தெரியும். நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பிற்போக்குவாதி; மொழி வெறியன்; கிணற்றுத்தவளை என்பதான தூற்றல் வார்த்தைகளால் அர்ச்சனைகள் கிடைக்கலாம்.

May 13, 2013

பாலாவின் பரதேசியைப் பற்றியும் சுற்றியும்

 படம் வருவதற்கு முன்பாகப் பலவிதமான எதிர்பார்ப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிட்டு படத்தை வெளியிடுவது இப்போது ஓர் வியாபார உத்தியாக இருக்கிறது. பாலாவின் பரதேசியும் அப்படியான உத்திக்குப் பிறகுதான் திரையரங்குகளுக்கு வந்தது. போலந்தின் தலைநகர் வார்சாவில் அந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இணையங்களில் கிடைக்கும் இணைப்புகள் வழியாகத்தான் பார்க்க முடிந்தது. நான் பார்த்து முடிப்பதற்குள் பலவிதமான விமரிசனங்கள் அந்தப் படத்தை நோக்கி எழுதப்பட்டன. நேர்மறையான விமரிசனங்களை விடவும் எதிர்மறை விமரிசனங்களே அதிகம் வந்தன.
கதை உருவாக்கம், திரைக்கதை ஆக்கம், வசனம் எழுதுபவரின் பின்னணி, படப்பிடிப்பு நிகழ்வுகள், பாடல் வெளியீட்டு நிகழ்வு எனப் படத்துக்கு வெளியே இருக்கும் பலவற்றைப் பற்றிய முன் அபிப்பிராயங்களோடு எழுப்பப்பட்ட விமரிசனங்களைத் தாண்டி அந்தப் படத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டும் என்பதால் விரிவான விமரிசனம் ஒன்றை லண்டனிலிருந்து வரும் “எதுவரை- உரையாடலுக்கான வெளி ” என்னும் இணைய இதழில் எழுதியுள்ளேன். படத்தைப் பற்றியும் படத்தைச் சுற்றி எழுப்பப்பெற்ற விமரிசனங்கள் பற்றியும் அந்தக் கட்டுரை பேசுகிறது. இந்த இணைப்பில் போய் வாசித்துப் பாருங்கள்http           http://eathuvarai.net/?p=3437

May 02, 2013

வார்சாவில் ஒரு நேர்காணல்

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா . என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள நேர்காணலைப் பின்வரும் இணைப்புகளில் வாசிக்கலாம்.  

http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/
http://gazeta-sedno.pl/3881/whats-up-uw-a-passage-to-india-part-2/

April 12, 2013

வார்சாவில் ஒரு நேர்காணல்

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா . என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. முதல் பகுதி இது .

http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/

அடுத்த பகுதி அப்புறம் வரும் .

April 05, 2013

பாலச்சந்திரனின் படத்தொகுப்புக்குப் பின் : மிதக்கும் குமிழிகள்


காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை  அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன்.

March 30, 2013

வைரமுத்துவின் தோழிமார் கதை- ஒரு விமரிசனம்


 அவரே இந்த வரிகளைக் கவிதை எனச் சொல்லவில்லை.
வட்டார வழக்கில் ஒரு நாட்டுப் பாட்டு என்றுதான் தொடங்குகிறார். வைரமுத்து வாசிக்கும் வரிகளை படக் காட்சித் தொகுப்போடு முதலில் பாருங்கள். நாட்டுப் பாட்டை அதற்கான பாடகர்களைக் கொண்டு பாடச் செய்யாமல், தனது கவிதையை வாசிக்கும் தொனியில் அவரே வாசிக்க, அதற்கு உரையெழுதுவதுபோல ஒருவர் படக்காட்சிகளை அடுக்கித் தந்திருக்கிறார். படக்காட்சிகளும் வரிகளின் வாசிப்பும் முடிந்தபோது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அதனைச் சந்தேகம் எனச் சொல்வதைவிட எல்லாவற்றையும் ’விமரிசனப்பார்வை’யோடு வாசித்துப் பழகியதால் தோன்றிய கேள்வி என்று சொல்வதுதான் சரி. தோழிமார் கதை எனத் தலைப்பு வைத்ததற்குப் பதிலாக ஒரு புங்கமரத்தின் கதை எனத் தலைப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது.

March 04, 2013

தேடுதல்…


இசையை நகர்வுப்படங்களாக மாற்றுவதையே
முக்கிய நோக்கமாகக் கொண்ட இந்நாடகம்,
சூழல் சார்ந்த உயர்வை உண்டாக்கவே விரும்புகிறது.
இதில் இடம்பெறும் நடிப்புச் செயல்களோ வார்த்தைகளோ இசையை
மீறியதாக இல்லாமல் ஒத்திசைந்தனவாக அமைய வேண்டும்.
இதற்காகத் தடித்த கம்பி வாத்தியங்களின் –சரோட்அல்லது
தில்ரூபாவின் ராகங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அந்த ராகங்களும் பல்தள வெளிப்பாட்டு முறையிலான
ஸ்டீரியோ மூலம் வெளிவர வேண்டும்.
மற்ற நாடகங்களில் பின்னணியுணர்வை உண்டாக்க
இசை பயன்படுவது போல இதில் இல்லை

ராகம்: தர்பாரி கனடா
தாளம்: திரி தாளம்
கருவிகள்: சரோட், தபேலா

March 01, 2013

வார்சாவில் இந்தியக் கொண்டாட்டங்கள்
இந்தியக் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை இந்திய போலந்து நட்புறவுக் கழகம் (IPFA) நடத்தப் போவதாக முகநூல் குழுமம் சொல்லியது. போலந்தில் நான் உறுப்பினராக இருக்கும் ஒருசில முகநூல் குழுமங்களில் ஒன்று. “ வார்சாவில் வாழும் இந்தியர்கள்” என்னும் அந்தக் குழுமத்தில் வார்சாவுக்கு வருவதற்கு முன்பே உறுப்பினராக ஆகி விட்டுத்தான் வந்தேன். இந்தியாவிலிருந்து போலந்துக்குக் கிளம்பும் நாள் குறிக்கப் பட்டவுடன் போலந்து, வார்சா எனப் பெயரிட்டு கூகுள், முகநூல் எனத் தேடிய போது கிடைத்த பல விவரங்களில் இந்தக் குழுவும் ஒன்று.

February 26, 2013

செவ்வியல் : ஒரு விவாதம்


முகநூலில் எப்போதாவது தொடர் விவாதம் நடப்பதுண்டு. அண்மையில் நான் போட்ட ஒரு முகநூல் பதிவைத் தொடர்ந்து பலரும் பங்கேற்று விவாதித்தனர். அந்த விவாதத்தை  செவ்வியல்: ஒரு விவாதம் எனத் தொகுத்துச் சொல்லலாம் எனத்தோன்றுகிறது. முகநூல் பக்கம் வராதவர்களுக்காக இங்கே தருகிறேன்.

February 23, 2013

கமல்ஹாசனின் விஸ்வரூபம்- விமரிசனம் அல்ல; விவாதம்


லண்டனிலிருந்து வெளிவரும் இணைய இதழ் எதுவரை?. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருவதில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்படுத்திய தாக்கம் குறித்து வினாக்களை அனுப்பி பதில்களைப் பெற்று வெளியிட்டது. அந்த வினாக்களும் விடைகளும் இங்கே தரப்படுகிறது. என்னைப்போலவே திரைப்படங்கள் குறித்துக் கருத்துக்கள் கூறும் ஜமாலன், கலைஅரசன், ராஜன்குறை ஆகியோரும் இந்த வினாக்களுக்கு விடைகள் சொல்லி இருந்தார்கள். மொத்த விவாதத்தையும் படிக்க அங்கே செல்லலாம். அதற்கான இணைப்பு:  http://eathuvarai.net/?p=2776                 இங்கே எனது விடைகள் மட்டும்

February 12, 2013

செல்லப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்காத சிவசங்கரி1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை.

January 12, 2013

தோழர் ஜி.என்ஒரு குறிப்பு:
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முயன்றதன் மூலம் தமிழ் எழுத்தாளர்களில் தனக்கான இடத்தை உருவாக்கியவர். நான் மாணவனாக இருந்த காலத்தில் மதுரைத் தெருக்களிலும் சில நண்பர்களோடும் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்போது அவரது எந்த எழுத்தையும் வாசித்ததில்லை. அவரது எழுத்துக்களைப் படித்து முடித்தபோது அவரது வாழ்க்கையைப் பார்க்க அவர் இல்லை. அவரது அலைவு வாழ்க்கைப் பின்னர் வந்த எழுத்தாளர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் தொடர்ந்து கொண்டிருந்த ஒன்று.அதனைச் சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் புனைவுகளாக்கிப் பதிந்தும் வைத்துள்ளனர். அவையெல்லாமே நியாயமான பதிவுகளாகவே படுகின்றன என்றாலும், திலீப்குமாரின் இந்தக் கதை கச்சிதமான ஓரங்க நாடகமாக எனக்குத் தோன்றியது. கதையை நாடகமாக ஆக்கியபோது கதைசொல்லியை திலீப்குமாராகவே வாசித்தேன். அதனால் அவரது பெயரையே பாத்திரத்தின் பெயராக ஆக்கியிருக்கிறென். கதையின் தலைப்பு: ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்.(மூங்கில் குருத்து,க்ரியா,1985). இனிக் கதையை நாடகமாக வாசிக்கலாம்.