ஜோடிப் பொருத்தம்

எளிய வரவேற்பறை.
பேராசிரியர் சர்மாவும் திருமதி சர்மாவும் யாருடைய வரவுக்காகவோ காத்துள்ளனர். பேராசிரியர் செய்தித்தாள் வாசிப்பதிலும், திருமதி சர்மா பின்னல் வேலையிலும் கவனமாக உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்க, தேவதத்தன் அவர்களைக் கவனிக்காமல் கடந்து செல்கிறான். அவன் அவர்கள் முன் சென்று, கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறான்.

தேவதத்தன்
திரும்பவும் சொல்கிறேன். இந்த ஏற்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை.
(அவனது கோரிக்கையைப் பொருட்படுத்தாதவர்களாய் சர்மாவும் அவரது மனைவியும் பார்த்துக் கொள்கின்றனர்).
பேராசிரியர்
திரும்பவும் எண்ணத் தொடங்குகிறார்) பதினைந்து.. (தேவதத்தன் பதினைந்திலிருந்து ஒன்று வரை தலைகீழாக எண்ணுகிறான்) அவர் படித்துக் கொண்டிருக்கிறார். அவள் பின்னல் வேலையில் இருக்கிறாள். தேவதத்தன் இங்குமங்கும் உலாவுகின்றான். கார் ஒன்று நிறுத்தப்படும் சத்தம் கேட்கிறது. பேராசிரியர் கடிகாரத்தைப் பார்க்கிறார்)
பேராசிரியர்
கணம் நீதிபதி அவர்கள் வந்து விட்டார் என நினைக்கிறேன். தேவதத் போய்ப் பார்.. அவர் தானா..? ( போய்த் திரும்புகிறான்)
தேவதத்தன்
இல்லை. அவர் இன்னும் வரவில்லை. (சொல்லிய அதே மூச்சில்) இந்த ஏற்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை.
பேராசிரியர்
ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறதே..
திருமதி
எனக்கும் தான் உண்டு.
பேராசிரியர்
ஏன்..இந்த ஏற்பாட்டை மறுக்கிறாய். உன்னோட திருமணத்திற்கான ஏற்பாடு தானே.. அந்தப் பெண்ணைப் பார்க்கப் போகிறாய். பிடித்தால் சம்மதம் சொல்.. அதற்காகத் தான் கணம் நீதிபதி அவர்களைத் தன் மகளோடு வரச் சொல்லியிருக்கிறேன். அவளைப் பாரு.. அவளோடு பேசு. உனக்கு விருப்பம் என்றால் நாங்கள் யார் மறுத்துப் பேச.
திருமதி
ஆம்.. அதுதான் சரி.. நாங்கள் யார்? ( இன்னொரு கார் நிற்கும் சத்தம். பேராசிரியர் தேவதத்தனை பார்க்கிறார். அவன் வேகமாகச் சென்று திரும்புகிறான்)
பேராசிரியர்
(உறுதி தொனிக்க) தேவதத்..
(அவன் மறுபடியும் பதினைந்திலிருந்து ஒன்று வரை எண்ணுகிறான்)
(கடிகாரத்தைப் பார்க்கிறார்.) மணி ஐந்து. கணம் நீதிபதி அவர்கள் இப்பொழுது வந்துவிடுகிறார்கள். (ஒரு பெண் பின் தொடர, நீதிபதி உள்ளே வருகிறார்)
நீதிபதி
பாருங்கள். சரியாக ஐந்து மணிக்கு வந்து விட்டேன். நேரந்தவறாமையில் குறியாக இருப்பவன் நான். பங்க்சுவாலிட்டி இஸ் வெரி இம்பார்ட்டெண்ட் டூ மீ..
(பேராசிரியர் தம்பதிகள் அவர்களை எதிர்கொண்டு அழைக்கின்றனர். உட்காரும்படி கேட்டுக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் நின்றபடியே உள்ளனர்)
இல்லை.. இப்பொழுது உட்கார்ந்து பேச நேரம் கிடையாது. ஐந்து ஐந்துக்குத் தலைமை நீதிபதியைச் சந்தித்தாக வேண்டும். நேரந்தவறாமை எனது லட்சியம். என்னுடைய மகள் இங்கே இருப்பாள். அவளை அழைத்துச் செல்ல காரை அனுப்புகிறேன். நாளை இரவு தேவதத் எங்கள் வீட்டிற்கு விருந்துண்ண வர வேண்டும். நாளை இரவு எட்டு மணிக்கு.. மிகச் சரியாக எட்டு மணிக்கு..
(அவர் வெளியேறுகிறார். திரும்பி) அதேதான் எட்டு மணி. பங்க்சுவாலிட்டி இஸ் வெரி இம்பார்ட்டெண்ட் டூ மீ.. ( போய்விடுகிறார்)
(அனைவரும் அந்தப் பெண்ணைப் பார்க்கின்றனர். அவள் ஒரு ஓரத்தில் மருட்சியுடன் நிற்கிறாள்)
பேராசிரியர்
பெண்ணே!.. இங்கே வந்து உட்கார்.
திருமதி
வா.. வந்து உட்கார்.. ( அவள் அதைக் கேட்டவள் போல் இல்லை. பறக்க பறக்க முழிக்கிறாள்)
அவள்
நீங்கள் ஏதாவது சொன்னீர்களா..?
பேராசிரியர்
(சத்தமாக) தயவு செய்து உட்கார்.
திருமதி
(சத்தமாகவே) உட்கார்.
(கேட்டவளாக, சோபாவை நோக்கிச் செல்கிறாள். ஆனால் உட்காரவில்லை. நடுவில் உள்ள டீப்பாவில் முட்டிக் கொள்கிறாள்)
பேராசிரியர்
தேவதத்.. நீயும் உட்கார் (அவளிடம்) இவன் தான் எங்கள் மகன் தேவதத்.. (அவளுக்கு எதுவும் கேட்கவில்லை)
திருமதி
(சத்தமாக) இது எங்கள் மகன் தேவதத்.
(இப்பொழுது காது கேட்டதால், தேவதத்துக்கு வணக்கம். சொல்வதற்குப் பதிலாக, பேராசிரியருக்கு வணக்கம் செலுத்துகிறாள்)
பேராசிரியர்
தேவதத்.. அந்தப் பக்கம் இருக்கிறான். ( சத்தமாக) உன் பெயர் என்ன..?
அவள்
த்தீபா..
பேராசிரியர்
த்தீபா.. வித்தியாசமான பெயர்.  (அவள் திடீரென்று எழுந்து எதையோ தேடுகிறாள். எல்லோரும் அவள் பார்வை செல்லும் இடங்களில் தேடுகின்றனர்)
அவள்
என்னுடைய கண்ணாடி – க்கிளாஸ்- நான் உள்ளே நுழையும்போது இங்கே விழுந்து விட்டது என்று நினைக்கிறேன். அதை எடுப்பதற்கு நீங்கள் உதவ வேண்டும். ( தம்பதிகளும் அவளது கண்ணாடியைத் தேடுகின்றனர்)
பேராசிரியர்
கண்ணாடி எதுவுமே காணவில்லையே..
திருமதி
கண்ணாடியெல்லாம் எதுவும் கிடையாது.
தேவதத்தன்
ஆமாம்.. அதுதான் உண்மை. ஏனெனில் அவள் வரும்போது கண்ணாடி எதுவும் அணிந்து வரவில்லை.
பேராசிரியர்
நீ சொல்வது சரிதான்.
திருமதி
ஆம். அதுதான் சரி..
பேராசிரியர்
கவலைப் படாதே. நீ உன்னுடைய கண்ணாடியை உங்கள் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கலாம். சரி.. நீ .. என்ன படிக்கிறாய்?
(அவளிடமிருந்து பதில் இல்லை. எனவே சத்தமாகக் கேட்கிறார்)
அவள்
(அதேவித சத்தத்துடன்) முதல் வருடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக.. ஆனால் என்னோட க்ளாஸுக்கு- கண்ணாடிக்கு – என்ன ஆச்சு? நான் வரும்போது நான் கண்ணாடி அணிந்திருக்கவில்லை என்று உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா..?
பேராசிரியர்
இல்லை.. உன்னிடம் இல்லை.. ( எல்லோரும் கொஞ்ச நேரம் அமைதியாக உள்ளனர்)
நீ எந்தக் கல்லூரியில் படிக்கிறாய்..?
அவள்
ஆமாம்.. பர்ஸ்ட் இயர் பார் தி லாஸ்ட் டூ இயர்ஸ் ( திடீரென்று) ஆங்..
பேராசிரியர்
நீ வரும்போது கண்ணாடி அணிந்திருக்கவில்லை.
திருமதி
உன்னிடம் க்ளாஸ் இல்லை.
அவள்
இல்லை.. அது இல்லை.. இது ஆரம்பித்து விட்டது.
பேராசிரியர்
என்ன ஆரம்பித்து விட்டது.
அவள்
எனது இடதுகாலில் வலி.. ( அவள் முணக ஆரம்பித்து) நான் என்னோட வீட்டிற்கு போகலாமா..? இப்பொழுதே..
பேராசிரியர்
(எரிச்சலுடன்) சரி .. நல்லது.. நீ உன் வீட்டுக்குப் போகலாம்.
அவள்
நான் என்னுடைய கண்ணாடியை இங்கே தொலைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா..?
பேராசிரியர்
இல்லை. இல்லை..
திருமதி
ஆமாம்.. ஆமாம்..
அவள்
நான் போகிறேன்… அப்புறம்..
(வெளியேறுகிறாள். .மரச் சாமான்களிடையில் தட்டுத் தடுமாறியபடி)
பேராசிரியர்
நீதிபதி, அவரது மகள் ரொம்பவும் புத்திசாலின்னு சொன்னாரே.
திருமதி
அற்புதமாகப் பாடுவாள் என்றும் ..
பேராசிரியர்
கண் தெரியாதவர் என்றும் இப்போதுதான் தெரிகிறது..
திருமதி
டமாரச் செவிடு வேற..
தேவதத்தன்
ஆனால் ஊமை இல்லை.
திருமதி
பேராப் பாரு.. த்தீபா.. கேணத்தனமான பேரு..
பேராசிரியர்
இந்தப் பெண்.. இந்த ஏற்பாட்டில் எனக்குச் சம்மதம் இல்லை..
திருமதி
நான் மட்டும் சம்மதிக்கிறேன்.. நாளை இரவு கணம் நீதிபதி அவர்கள் வீட்டுக்கு விருந்துண்ணச் செல்வேன்.
பேராசிரியர்
இந்த ஏற்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை
திருமதி
எனக்கு மட்டும் உண்டா என்ன?
தேவதத்தன்
ஆனால் எனக்கு உண்டு. (தேவதத், அங்கிருந்து வெளியேறுகிறான். வெளியேற்றம் கலகலப்புடன் இருக்கிறது)


(நீதிபதியின் வீட்டுச் சாப்பாட்டு அறை. அந்தப் பெண் தனியாக மேசையருகில் அமர்ந்து கடிகாரத்தைப் பார்த்தபடி உள்ளாள். மணி எட்டு அடித்தவுடன் அவள் நிமிர்கிறாள். நீதிபதி உள்ளே நுழைகிறார்.)
நீதிபதி
தேவதத் எங்கே..? ப்ரதிபா.. ? மணி எட்டு ஆகிவிட்டதே.. நேரம் தவறுகின்றவனை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.  ( ஒருவேலையாள் வந்து சிறிய தாள் ஒன்றை அவரிடம் தந்துவிட்டு, ப்ரதீபாவிடம் நகர்கிறான்.)
ப்ரதீபா
(படிக்கிறாள்) இத்தகைய விருந்துக்கு ஏற்பாடு செய்ததற்காக தேவதத் நன்றி செலுத்தியுள்ளார். (தேவதத் நுழைகிறான். கையில் ஒரு தடி.. குடித்திருக்கிறான்.)
தேவதத்தன்
அந்த நன்றியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(அவன் சிரிப்புடன் குனிந்து நீதிபதியை வணங்குகிறான். அவனை வரவேற்க எழுந்து நிற்கிறாள். ஆனால் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.)
கணம் நீதிபதி அவர்களே.. வணக்கம்.. எப்படி? இருக்கிறீர்கள்.. நலமாக இருக்கிறீர்களா/
(அவன் அவளை நோக்கிக் கைகளை நீட்டுகிறான். அவள் தயாராக இல்லை. அவன் தனது மேல் கோட்டைச் சுழற்றி மேசையில் குறுக்காகப் போட்டு விட்டு வசதியாக உட்காருகிறான்)
பேராசிரியர்
ஏன் நீங்கள் நிற்கிறீர்கள்? உட்காருங்கள். வசதியாக அமருங்கள். என்னுடைய அழைப்பை ஏற்று வந்ததற்கு உங்களுக்கு நன்றி. மிகுந்த அன்புடன் உங்களை வரவேற்கிறேன். ஏன் உட்காராமல் நிற்கிறீர்கள்.
(அவர்கள் உட்காரவில்லை. தேவதத் அவனது தடியை எடுத்து விட்டு இடம் தருகிறான். அவர்கள் உட்கார்கிறார்கள்)
தேவதத்தன்
(சிரிக்கிறான்) இதுதான் நல்லது. நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்… வேண்டியதைக் கேளுங்கள்.. விஸ்கியா..? ஜின்னா,,? ஸாம்பைன். மாம்செல்லி ஸாம்பைன்.? வேண்டாமா..? அப்புறம் என்னதான் வேண்டும்? ஒரு டம்ளர் தண்ணீர்..? கொதிக்க வைத்த தண்ணீர்.? பையா மூன்று டம்ளர் தண்ணீர் கொண்டு வா. கனம் நீதிபதி அவர்கள் மதுவிலக்கில் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார்.
(திரும்பவும் சிரிக்கிறான்)
நீதிபதி
நான் உன்னைப் பற்றிச் சொல்லி விடுவேன்
தேவதத்தன்
எனக்குத் தெரியும்… அமைதியாகக் குடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்.. பையா.. (வேலையாள் வருகிறார்) முகம் கழுவும் இடத்தைக் காண்பி.. தயவுசெய்து.. (வேலையாள் செல்ல.. அவன் தொடர்கிறான்)
நீதிபதி
நேரம் பற்றிய அறிவே இவனுக்கு இல்லையே..? ஒருவேளை பைத்தியமா..? இவன்..
ப்ரதீபா
அவன் ஒரு குடிகாரன்.
நீதிபதி
வலிப்பு வியாதிக்காரன். ஒரு மனிதனை ஒரு தடவை பார்த்தால் போதும் ஒரு முடிவுக்கு வந்து விடுவேன். குற்றவாளைகளை முதல் தடவையிலேயே பார்த்து தீர்ப்பு எழுதுபவன் நான். இந்த மனிதனை எனக்குத் தெரியும். இவன் தூக்கில் தொங்க வேண்டிய ஆள்.
ப்ரதீபா
ரொம்ப ஆபத்தான ஆள்
நீதிபதி
நான் சாப்பிடும் நேரம் முடிந்து விட்டது. எனக்கு நேரம் மிக முக்கியம். பையா என்னுடைய  உணவை படுக்கை அறைக்குக் கொண்டு வா..
ப்ரதீபா
எனக்கும்தான். அந்த ஆள் வந்தவுடன் சொல்லிவிடு. அவர்கள் படுக்கப் போய்விட்டார்கள் என்று
தேவதத்தன்
(தேவதத் வந்து அவனது கோட்டையும் கைத்தடியையும் தேடுகிறான்)  உட்காருங்கள்.. கழிப்பறையிலிருந்து வரும்போதே பாதை தப்பி விட்டது.
(எல்லோரும் உட்காருகிறார்கள். தேவதத் அவர்களிடம் தண்ணீர் டம்ளரைத் தருகிறான்.’ச்சியர்ஸ்’ என்று சொல்லி உயர்த்தி விட்டுக் குடிக்கின்றனர். தேவதத் குடிக்காத போது கைத்தடியை உயர்த்தி குடிக்கும்படி பயமுறுத்துகிறான். தேவதத் தனது கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான் )
தேவதத்தன்
நல்லது.. ரொம்ப நல்லது. நீங்கள் இப்பொழுது போகலாம்.. நான் படுக்கைக்குப் போகும் நேரம் வந்து விட்டது. சரியாக எட்டு முடிந்து பதிமூணு நிமிஷம் ஆகி விட்டது. நேரந்தவறாமையில் கண்டிப்பாக இருப்பவன் நான். பங்ச்வாலிட்டி இஸ் வெரி இம்பார்ட்டெண்ட் டு மீ..
(அவன் நீதிபதியின் கையைப் பிடித்துக் குலுக்குகிறான். அவர்கள் வெளியேறத் தயாராகின்றனர்)
இந்த விருந்துக்காக நீங்கள் நன்றி சொல்லக் கூடாதா..?
நீதிபதி
ஏய்.. ஆம்.. நன்றி சொல்ல வேண்டும்.. நன்றி.. மிக்க நன்றி..
தேவதத்தன்
(எரிச்சலுடன்) தயவு செய்து அதைச் சொல்ல வேண்டாம். நீங்கள் இங்கே வந்ததே போதும். உங்கள் வருகை எனக்கு சந்தோஷம் தந்தது. குட்நைட் .. (கடிகாரத்தைப் பார்த்தபடி) ஓ..மைகாட்.. எட்டு பதினைந்தாகி விட்டது. நான் உடனே படுத்தாக வேண்டும். ( தேவதத் சாப்பாட்டு மேசையிலேயே கையை வைத்து படுத்து விடுகிறான். நீதிபதி உள்ளே போகிறார். ப்ரதிபா தடியை எடுத்து அவனை அடிக்கிறாள்)
ப்ரதீபா
ஏய்.. மிஸ்டர்.. கனவானே..!
தேவதத்தன்
(எழுந்தவுடன் சொல்கிறான்) என்னிடம் உனது கண்ணாடி இல்லை.
ப்ரதீபா
ரொம்பவும் நன்றி. நான் கண்ணாடி அணிவதே இல்லை. எனக்குப் பார்வைக் கோளாறு எதுவும் இல்லை.
தேவதத்தன்
அப்படியானால் உனது காது.
ப்ரதீபா
நான் செவிடும் கிடையாது.
தேவதத்தன்
உன் மூட்டு வலி
ப்ரதீபா
அதுவும் இல்லை
தேவதத்தன்
அப்படியானால் நீ ஒரு முட்டாள். உன்னுடைய பொது அறிவு பூஜ்யம் தான்.
ப்ரதீபா
இல்லை..
தேவதத்தன்
அப்புறம்..
ப்ரதீபா
நான் நடித்தேன். என்னுடைய கல்லூரி வாழ்க்கையை இழக்க விரும்பவில்லை. சந்தோசமான அந்த வாழ்க்கையை கல்யாணமானால் போய்விடுமே.. அதே நேரத்தில் எனது அப்பாவின் சந்தோஷத்தையும் கெடுக்க விரும்பவில்லை
தேவதத்தன்
உனக்கு நல்லதே நடக்கும். இப்பொழுது நீ போகலாம். நான் தூங்கப் போகிறேன். குட்நைட்.. (அவன் தூங்குகிறான் அவள் திரும்பவும் அடிக்கிறாள். இந்த முறை கொஞ்சம் அடி பலமாக விழுகிறது. அவன் எழுகிறான்.)
ப்ரதீபா
உன்னோட கோட்டைப் போட்டுக் கொண்டு வெளியே போ.. நீயொரு குடிகாரன்
தேவதத்தன்
(அவன் டையைச் சரி செய்தபடி கோட்டை மாட்டுகிறான்) இல்லை நான் குடிகாரனில்லை
ப்ரதீபா
அப்படியானால் நீயொரு பைத்தியம்.. உன்னோட தலை முழுக்க கிரிமினல்தனம்தான் நிரம்பியுள்ளது. உன்னைத் தூக்கில் தான் போட வேண்டும்.
தேவதத்தன்
அதற்கு வாய்ப்பே இல்லை
ப்ரதீபா
உன்னோட வலிப்பு..
தேவதத்தன்
அதுவும் இல்லை
ப்ரதீபா
அதனால்..
தேவதத்தன்
வேறு ஒரு பெண்ணை மணப்பதென்று ஏற்கெனவே முடிவு செய்து விட்டேன். அதனால் உனது அப்பா – கனம் நீதிபதி அவர்கள் என்னை வெறுக்கும்படியாக நடந்து நானே கொண்டே கொண்டேன்
ப்ரதீபா
(தடியை அவனிடம் கொடுத்து) இது ரொம்பவும் புதுமையானதுதான்
தேவதத்தன்
இல்லை.. இல்லை.. இதில் புதுமை ஒன்றும் இல்லை. நீ பதினைந்து வரை எண்ணத் தொடங்கு எல்லாம் சரியாகவே இருக்கும்.. ஓ மைகாட்.. என்னோட காதலியைச் சந்திக்க வேண்டும். நேரந்தவறாமையில் எனக்கு நம்பிக்கை உண்டு. பங்ச்வாலிட்டி இஸ் வெரி இம்பார்ட்டெண்டு டு மீ..

தேவதத் ப்ரதீபாவிடம் தடியைக் கொடுத்துவிட்டு வெளியே ஓடுகிறான். அதை அவள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒன்று.. இரண்டு.. மூன்று ..  நான்கு என எண்ணத் தொடங்குகிறாள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்