இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியச் செவ்வியல் மொழிகள் இரண்டு: தமிழும் சமஸ்கிருதமும்

படம்
                                                                  முன்குறிப்பு: இந்தியவியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் இந்தியச் செவ்வியல் மொழிகள் பற்றிச் சொன்ன ஒரு குறிப்பை அண்மையில் ரவிக்குமார் தனது நிறப்பிரிகை என்னும் வலைப்பூவில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தமிழ் வடிவம் பலருக்கும் படிக்கக் கிடைத்தால் நல்லது என்பதால் தமிழாக்கிப் பதிவு செய்துள்ளேன்.

தொல்கதையிலிருந்து ஒரு நாடகம்

மூட தேசத்து முட்டாள் ராஜா ================================================================= இந்த நாடகத்தின் கதைப்பகுதி நாட்டுப் புறக்கதை ஒன்றைத் தழுவியது. இந்திய மொழிகள் பலவற்றில் இந்தக் கதையை- . சின்னச் சின்ன மாறுபாடுகளுடன் இந்தக் கதையைக் கேட்க முடியும். தொல்கதையிலிருந்து உருவாக்கப்பட்ட இந்நாடகத்தை மேடை ஏற்ற விரும்புபவர்கள் எனக்கு ஒரு தகவல் மட்டும் அனுப்பினால் போதும். அனுமதியெல்லாம் பெற வேண்டியதில்லை.

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

படம்
இலக்கிய இயக்கங்களில் அதிகம் கொண்டாடப்படாத இயக்கம் நடப்பியல் (Realisam) இயக்கம் ஆனால் நீண்ட கால வாழ்வையும் நிகழ்காலத் தேவையையும் கொண்ட இயக்கமாக இருப்பது. நடப்பியலின் சிறப்பு. அதன்  விளைநிலம் புனைகதை. புனைகதையின் வரவோடு நடப்பியல் வந்ததா? நடப்பியலின் தோற்றத்தோடு புனைகதைகள் உருவாக்கப் பட்டனவா? என்ற ஐயத்தைத்  தீர்க்க முடியாத அளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைந்தனவாக இருக்கின்றன.

விடியல் சிவா :நினைவுக்குறிப்புகள்..

படம்
எனது முதல் பதிப்பாளர் ========================= நேர்க்காட்சியில் விடியல் சிவஞானத்தைக் கடைசியாக பார்த்தது 2011 மதுரை புத்தகக் காட்சியில். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்கு வரப் போகப் போகிறேன் என்ற தகவல் அப்போதே தெரிந்திருந்தது. சொன்னேன். சொன்னவுடன் ”அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தோழர் து.மூர்த்தி ஏற்கெனவே வார்சாவுக்குப் போய்ப் பணியாற்றியவர். அவரது தொலைபேசி எண் இருக்கிறது: உங்களுக்கு அறிமுகம் உண்டா?. தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். பேரா. து.மூர்த்தியை

அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாழ்க்கை

படம்
தூங்கும் குழந்தைப் பொம்மைகள் அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை தமிழ்நாட்டின் எல்லா நகரங் களுக்கும் பொதுவானதாக இன்னும் மாறிவிடவில்லை. நான் வசித்துக் கொண்டிருந்த திருநெல் வேலி நகரத்தில் அதிகபட்சம் ஐந்து மாடிக் கட்டங்களைத் தாண்டியதாகக் குடியிருப்புகள் கட்டப்படவில்லை. அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டிக் கொடுக்கும் என்.ஜி.ஓ. காலனிகளும் கூட ஒரு மனையளவு நிலத்தில் இரண்டு வீடுகள் அல்லது கீழே இரண்டு மேலே இரண்டு என நான்கு வீடுகள் கொண்டதாகவும் தான் கட்டப்பட்டுள்ளன. மிகக் குறைந்த   சாக்ரட்ஸ் வாசலில் வருவாய்ப் பிரிவினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கூட ஐந்துமாடிகளைத் தாண்டிவிடவில்லை. சுற்றிச் சுற்றி மேலேறும் படிக்கட்டுகள் வழியாகவே மொட்டைமாடிகளுக்குச் சென்று துணி காயப்போடும் பெண்களின் அவஸ்தையை நினத்துக் கொண்டால் போதும். அடுக்கு மாடிக் குடியிருப்பை வேண்டாம் என்று சொல்ல விடலாம். திருநெல்வேலியில் வேண்டாம் என்று சொல்பவர்களின் பிள்ளைகள் சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தான் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேரும் வேலைக்குப் போகும் சூழலில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பாதுக

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

படம்
இந்தியச் சாதீய முறை, இந்தியச் சமுதாய வரலாறு பற்றிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கும் சிக்கலாகவும் இருக்கிறது.இந்திய வரலாற்றையறிய உதவும் சான்றுகளுள் மிகத் தொன்மையானவைகளாகக் கருதப்படும் வேதங்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து சாதிப்பிரிவுகள் இருந்து வந்துள்ளன. தமிழ் நிலப்பரப்பிற்குள் ஆகத் தொன்மையான தனிநூல் தொல்காப்பியம். அதன் முன்பின் இலக்கியங்கள் சங்கக் கவிதைகள். இவைகளும் ஒருவித சாதிவேறுபாடுகளைக் காட்டியுள்ளன. இந்தக்கட்டுரை தமிழக வரலாற்றில் சாதியமைப்பு இறுக்கமும் பெருக்கமும் பெற்றதாகக் கருதப்படும் நாயக்கர்களின் காலத்தில் சாதிகளின் இருப்பு நிலையை மையப்படுத்தி அக்கால சமூக அசைவியக்கம் எவ்வாறு இருந்நது எனப் பேச முயல்கிறது. அம்முயற்சியில் முதலில் சாதிகள் பற்றிய தகவல்களையும் அவற்றின் இயல்புகளையும் விவரித்துவிட்டு, அதன்பின்னர் அதன் கட்டமைப்பையும் அசைவுகளையும் பற்றிப் பேசுவது என்ற முறையிலைப் பின்பற்றியுள்ளது.

விலானொவ் அரண்மனை : இயற்கையும் செயற்கையும்

படம்
போலந்து நாட்டில் எதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற விவரங்களைத் தருவதில் என்னுடைய மூன்றாமாண்டு மாணவிகள் காஸ்யாவும் மரிஸ்யாவும் போட்டிபோட்டுக் கொண்டே இருப்பார்கள். முதலில் பார்க்க வேண்டிய நகரம் க்ரோக்கோ எனச் சொன்னதோடு அங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியும் சொன்ன காஸ்யாவிடம் க்ராக்கோ பயணத்திற்குப் பின் பேசிக் கொண்டிருந்தபோது,. வாவெல் அரண்மனையையும் அங்கு சேமிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் உண்டாக்கிய பிரமிப்பையும் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது குறுக்கிட்டு ”உங்களை எளிமையின் பிரமிப்பைக் காட்டும் அரண்மனை ஒன்றுக்கு அழைத்துப் போகிறேன்; ” என்றார் மரிஸ்யா. . ” எந்த அரண்மனை விலனோவாவா?” என்று பதிலின் வழியாகவே கேள்வியைக் கேட்டுவிட்டு “ மரிஸ்யா ஊருக்குப் பக்கத்தில் இருக்கிறது” என்ற தகவலையும் காஸ்யா சொன்னாள். விலனொவ் அரண்மனையின் பின்புறக் கோட்டை மதில் மரிஸ்யாவின் வீடு வார்சாவில் இல்லை. வார்சா பல்கலைக் கழகத்திலிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கிறது. அங்கிருந்து வார்சாவிற்குள் நுழைய ஒவ்வொரு நாளும் விலானொவ் நகரத்தின் பேருந்து நிலையத்தில் இறங்கித் தான் வர வேண்டும். மரி