August 03, 2012

பாத்திரம்: அரங்கியல் அறிவோம்-4

பாத்திரம் (Charactor) - நாடகம் எழுதும் ஆசிரியன், ஒரு கருத்தை அல்லது சிந்தனையை விவாதிக்கவே நாடகம் எழுதுகிறான் என்றாலும் அதனை விளங்க வைக்க ஒரு நபரின் வாழ்க்கைக் கதையையே வழியாகக் கொள்கிறான். அப்படிக் கொள்ளப்படும் மனிதனே பாத்திரம் எனப் படுகிறது.


நாடகப் பாத்திரங்கள் பொதுவாக மையப் பாத்திரங்கள் அல்லது தலைமைப் பாத்திரங்கள் (Central Characters ) ,துணைமைப் பாத்திரங்கள் (Supportive Characters ), எனவும் தோன்றும் (Appeared) பாத்திரங்கள், தோன்றாப் (Referred ) பாத்திரங்கள் எனவும் வகைப்படுத்தப்படும்.

சிலம்பில் கண்ணகி

தலைமைப் பாத்திரங்களில் இருநிலைப் பட்ட தலைமைப் பாத்திரங்களை உருவாக்குவது மரபான நாடக எழுத்தின் அடிப்படை. ஒரு சமூகம் நல்லவை என நம்பும் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுகிற அல்லது அதைக் காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபடும் பாத்திரங்கள் முதல் வகைப் பட்டவை. அவ்வகைப்பட்ட நிலையின் மையமாக இருக்கும் பாத்திரமே நாயகப்பாத்திரம் (Protoganist) எனச் சுட்டப்படுகிறது. இதன் எதிர்நிலையாக நிற்கும் பாத்திரம் எதிர்நிலைப் (Antoganist) பாத்திரமாக அறியப்படுகிறது. இவ்விருநிலை மையப் பாத்திரங்களுக்கும் துணை நிற்கக் கூடிய பாத்திரங்கள் துணைமைப் பாத்திரங்கள் எனப்படும். சேக்ஸ்பியரின் மாக்பெத்
நாடகத்தை மேடையில் நடத்தும் போது ஒரு நடிகரால் ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரம் தோன்றும் பாத்திரம் . ஆனால் நடிகரால் நடிக்கப்படாமல், அவர்களின் உரையாடலில் சுட்டப்பெற்று நாடக நிகழ்வின் போக்கிற்குக் காரணமான பாத்திரம் தோன்றாப்பாத்திரம் என அழைக்கப்படும். உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுக்¢கும் மூன்று பரிமாணங்கள் உண்டு. நீளம் , அகலம், உள்ளீடு என்பன அவை. இதனோடு மனிதர்களுக்குக் கூடுதலாக உடல், சமூகம், உள்ளம், என்ற பரிமாணங்கள் உள்ளன. இம்மூன்று பற்றிய அறிவின்றி ஒரு மனிதப் பாத்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாது.ஒரு பாத்திரத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள நாடகப் பிரதிக்குள் நாடகாசிரியன் தரும் உடலியல், சமூகவியல், உளவியல் தகவல்களைத் தொகுத்துக் கொண்டு விவாதிக்க வேண்டும். ம்மூன்றும் பாத்திரத்தின் முதுகெலும்புகள். இவைபற்றிய அறிவு நாடகத்தை வாசிக்கிறவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது போல இம்மூன்றுக்குமான தகவல்களைத் தருவதாக தான் எழுதும் நாடகப்பிரதி இருக்க வேண்டும் என்பது  நாடகாசிரியருக்கும் தெரிந்திருப்பது அவசியம். தன் மேல் தான் பாத்திரத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதனால் தான் இம்மூன்று கூறுகளும் பாத்திரத்தின் முக்கியக் கட்டமைப்புக் கூறுகள் எனச் சொல்லப்படுகின்றன..

 

உடலியல் கூறுகள்
சமூகவியல் கூறுகள்
உளவியல் கூறுகள்
பாலினம்
வர்க்கம்-அடித்தட்டு, நடுத்தர, உயர் வர்க்கம்
பாலியல் , ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள்
வயது
தொழில் - பணியின் தன்மை, வேலை நேரம், வருமானம், பணிக் கட்டுப் பாடுகள், தொழிற்சங்க உறுப்பின்மை அல்லது உறுப்பின்மை, அமைப்புகள் பற்றிய பார்வைக் கோணம், பணிக்கான பொருத்தம்
சொந்த நோக்கம் , இலட்சியம்
உயரமும் எடையும்
கல்வி: செலவழித்த தொகை, படித்த கல்விக் கூடங்களின் தன்மை, பெற்ற மதிப்பெண்கள், விருப்பப்பாடங்கள், விருப்ப மில்லாத பாடங்கள், அவை பற்றிய பார்வைக்கோணம்
இயலாமை, தோல்விமனப்பான்மை
தலைமுடி, கண்கள், தோலின் நிறங்கள்
குடும்ப வாழ்க்கை:  பெற்றோர் இருப்பு அல்லது இல்லாமை, பெற்றோர் சேர்ந்து அல்லது தனித்து அல்லது விவாகரத்துப் பெற்று வாழ்வுசம்பாதிக்கும் திறன், அனாதை. பெற்றோரின் பழக்க வழக்கங்கள், பெற்றோரின் மூளைத் திறன், பெற்றோரின் குற்றச்செயல்கள, ஒதுக்கல்கள், பாத்திரத்தின் மண வாழ்க்கை முறை
நிலைப்பாடுகள் - நம்பிக்கைகொண்ட அல்லது நம்பாத , சுலபமாக எடுத்துக் கொள்ளுதல் அல்லது கடுமையுடன் நடத்தல்,
உடலின் நிலை
சமயம்
வாழ்க்கையைப் பற்றிய பார்வை- விலகலான, தீவிரமான, தோல்வியடைந்த
தோற்றம்: பார்க்கத்தக்க தோற்றம்தடிய அல்லது ஒல்லியான தோற்றம், சுத்தமான, பொலிவான, மகிழ்ச்சியான,கடுகடுப்பான தோற்றம், தலையின் வடிவம், முகத்தோற்றம், பிற உறுப்புக்கள்
இனம், தேசம்
மனப்பான்மைகள்- மிகை விருப்பம், கூச்சம், அதீதத்தன்மை, ஒன்றின்மேலானக் காதல்
குறைகள்: அமைப்பற்ற, இயல்பற்ற, பிறவிக்குறைகள், நோய்க்குறைகள்
சமூகத்தில் இடம், நண்பர்களுக்குள் தலைமை, சங்கம் அல்லது விளையாட்டுக் குழுவில் பொறுப்பு
வெளிப்படையான, உள்முகமான, குழப்பமான
பரம்பரை
அரசியல் ஈடுபாடு
ஆற்றல்கள்¢: மொழித்திறன்கள், நினைவாற்றல்

வேடிக்கை விருப்பங்கள், விருப்பச்செயல்கள், விருப்பமான புத்தகங்கள், விரும்பும் செய்தித்தாள்கள், இதழ்கள்
குணங்கள்:கற்பனை, முடிவு எடுத்தல், சுவை, சமநிலை


புத்திசாலித்தனம்

இப்சனின் பொம்மை வீடு

கிரிஷ் கர்னாடின் நாகமண்டலம்
நாடகப் பிரதியை வாசித்துப் பாத்திரங்களைப் புரிந்து கொள்வதோடு ஒரு நாடகத்தை இயக்குவது எனவும், அதில் இடம் பெறும் பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடிப்பது எனவும் முடிவு செய்யும் ஒருவர் மேலும் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை இவ்வாறு பட்டியலிடலாம்.

1.    பாத்திர அடையாளங்கள்
2.    பாத்திரத்தின் புறச் சூழல்
3.    இயங்கியல் பார்வை
4.    பாத்திர வளர்ச்சி
5.    பாத்திரத்தின் தீர்மான நிலை
6.    கதைப்பின்னல். பாத்திரம் - எது முக்கியம்?
7.    பாத்திரங்கள் தனது நாடகத்தைத் தானே பின்னிக் கொள்கின்றன.
8.    முதன்மைக் கதாபாத்திரம்
9.    எதிர்நிலைக் கதாபாத்திரம்
10.   இயைபுருவாக்கம்
11.   எதிர்வுகளின் ஒத்திசைவு

No comments :