July 29, 2012

அரங்கு:அரங்கியல் அறிவோம் 1 :


அரங்குகள்










அரைவட்ட அரங்கின் வரைபட்ம் 

நிகழ்த்துக்கலைகள் (நாடகம், நடனம்) காட்சிக்கலைகள் (ஓவியம், சிற்பம், சுவரொட்டிகள்) சலனக்கலைகள் ( திரைப்படம்) போன்றன நிகழும் இடத்தைக் குறிக்கும் சொல்லாக இச்சொல் வழக்கில் இருக்கிறது. அரங்கேற்றுக் காதை என இளங்கோ சிலப்பதிகாரத்தில் ஒரு காதைக்கு பெயர் வைத்துள்ளதின் மொத்தக் காரணங்களையும் பார்க்கும்போது ஆங்கிலத்தில் உள்ள தியேட்டர்(Theatre) என்ற சொல்லுக்குப் பொருத்தமான சொல்லாக இதனையே சொல்லத் தோன்றுகிறது. 

அரைவட்ட அரங்கு




செவ்வக அரங்கு
திறந்த வெளி அரங்கு
உருண்டை அரங்கு
அண்மை அரங்கு
படச்சட்டக அரங்கு

மேடைத்தள உருவாக்கம்,  வகைகள்,  கட்டமைப்பு, நிகழ்விப்பு, பிரதி, இசைக்கோர்வை, பயிற்சி, நுட்பம், தேர்ச்சி, அங்கீகாரம் என அரங்கில் நடக்கும் அனைத்தும் அரங்கேற்றுக் காதையில் பேசப்படுகிறது. எனவே அரங்கு என்ற சொல்லை அடிப்படைச் சொல்லாகக் கொண்டு அரங்கியல், அரங்கக் கலை, அரங்கவெளி, அரங்க நுட்பம் எனக் கலைச் சொற்களை உருவாக்கிப் பேசுவதே சரியாக இருக்கும் எனச் சொல்லத் தோன்றுகிறது

No comments :