இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்படும் நேரம் 23 மணி நேரம் தான்

படம்
காலையில் வழக்கம் போல எழுந்து காலைக் கடன்களை முடித்து கணிணியின் திரையைத் திறந்தபோது 06.15,2012 மார்ச் 25 எனக்காட்டியது. எல்லா நாளும் இரவு 11.00 மணியை ஒட்டித் தூங்குவது வழக்கம். எத்தனை மணிக்குப் படுத்தாலும் ஆறு மணி நேரம் கழித்து விழிப்பு வந்து விடும். அதிகாலை 05.00 யை ஒட்டி எழுந்து விடுவேன். நேற்று இரவு 11. 00 மணியளவில் தான் தூங்கப் போனேன். ஆனால் எழுந்து பார்த்தபோது கணிணியின் திரை 06.15 எனக் காட்டியது. அலைபேசியின் திரையிலும் 06.15 என்று தான் இருந்தது. அலமாரியில் பத்து நாட்களாகவே வெளியே நல்ல வெளிச்சம். கடந்த இருந்த கடிகாரத்தில் நேரம் 05.15 மணி என்றிருந்தது.

ஜெயகாந்தனின் பாரிஸுக்குப் போ: காலத்தை எழுதுவதற்கான முன்மாதிரி

படம்
விடுதலைக்குப் பிந்திய இந்திய சமூகத்தின் திசை வழிகள் சரியானவை தானா? என்ற கேள்வியைப் பல்வேறு தளங்களில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்த கால கட்டமாக 1950-களின் பின் பாதியையும் 60-களின் முன்பாதியையும் சொல்ல வேண்டும்.. சிந்தனை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் ஐரோப்பிய மாதிரிகளை இந்தியர்கள் உள்வாங்க வேண்டும் என நம்பிய ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலம் அது. அவரது நிலை பாடுகளுக்கு எதிராக இருந்தவர்கள் பண்பாட்டு வெளியை முன்னிறுத்திப் பலவகையான சொல்லாடல்களை உருவாக்கினார்கள். குறிப்பாக ஐரோப்பிய வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது அதிகப் படியான எதிர்ப்புணர்வுகளை வெளிப் படுத்தினர்.மேற்கத்தியக் கல்வி முறையின் அடிப் படைக் கோட்பாட்டையும் கற்பிக்கும் முறையியலையும் விட்டுவிட்டு வெறும் பணியாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என விமரிசனம் செய்யப்பட்டது.

மீட்டெடுக்க வேண்டிய தனித்தன்மை

படம்
நம்முன் நிகழும் நிகழ்வுகளுள் எவை நம்பிக்கை சார்ந்தவை? எவை பாவனை சார்ந்தவை எனக் கண்டுபிடிப்பது எல்லோருக்கும் சுலபமல்ல. அப்படிக் கண்டு பிடிப்பதில் தேர்ந்தவர்களும் கூட தொடர்ச்சி யான கவனிப்பின் மூலமே சாத்தியப் படுத்து கின்றனர். சாத்தியப்படும் நிலையில் சிலவற்றை நம்பிக்கைகள் என்கிறார்கள்; சிலவற்றைப் பாவனைகள் என்கின்றனர். நம்பிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; பாவனைகள் அம்பலமாக்கப்படுகின்றன.

பெயரிலும் இருக்கிறது; முகவரியிலும் இருக்கிறது

படம்
முன்குறிப்பு : இந்தக்கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் தகவல்களும் உண்மையானவை; உண்மையத் தவிர வேறில்லை; உண்மையை உறுதி செய்வதற்காகக் கற்பனை தவிர்க்கப் பட்டுள்ளது . ============================================= உலக நாடக இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைத் தமிழில் ‘செகசுப்பியர்’ என்று ஒருவர் மொழிபெயர்த்து எழுதி இருந்தார் ஒருவர். செகப்பிரியர், செகசிற்பியர் என்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் அந்தப் பெயருக்குத் தமிழில் உண்டு. எனக்கோ பொல்லாத கோபம். பெயரை மொழிபெயர்க்கலாமா? பெயரின் உச்சரிப்பை – ஓசையை மாற்றலாமா?