January 31, 2012

ஒரு விருது; பாராட்டு விழா


தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இயல் விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய நூல்களை அச்சிடும் உயிர்மை பதிப்பகம் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பீர்களா?

இயல் விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்துகிறேன். இப்படியொரு பாராட்டு விழா ஏற்பாடு செய்த உயிர்மை பதிப்பகத்தின் போக்கிற்காகக் கவலைப்படுகிறேன்.

January 28, 2012

நம்பிக்கைகள், தொன்மங்கள், வரலாறுகள் – புனைவுகளாக்கப்படும் போது


அண்மையில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் வரவில்லை. ஆனால்  பார்த்து முடித்தவுடன் திரும்பத் திரும்ப நினைவில் வந்ததைத் தள்ளவும் முடியவில்லை. பார்த்து முடித்த படம் ஏ.ஆர்.முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின், சூர்யா கூட்டணியில் வந்த 7-ஆம் அறிவு. நினைவுக்கு வந்த படம் 15 வருடங்களுக்கு முன்னால் நடிகர் நாசரின் இயக்கத்தில் வந்த தேவதை.

January 23, 2012

பொங்கலோ பொங்கல் :குமரி முதல் வார்சா வரைபொங்கல் கொண்டாட்டம் எப்போதும் விரும்பப்படும் ஒன்று. மதுரையை விட்டு பாண்டிச்சேரிக்கு வந்த பிறகுதான் பொங்கல் கொண் டாட்டம் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது. அதற்கு முன்பு மூன்று நாள் கொண்டாட்டத்தில்  ஒருநாளா வது பக்கத்து ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளுக்குப் போய் வருவேன்.  அமெரிக்கன் கல்லூரி யில் படித்த காலத்தில் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டிலும்  சிங்கம் புணரிக்குப் பக்கத்தில் நடக்கும் மஞ்சு விரட்டிலும் கலந்துகொண்டிருக்கிறேன். இரண்டுக்கும் அழைத்துப்போனவர்கள் வகுப்புத்தோழர்களே..

January 18, 2012

அறிவுசார் மண்டலம் என்னும் கனவு.


நெருக்கடிகள் எப்போதும் நினைப்புகளையும் கனவுகளையும் தான் குறி வைக்கின்றன. சென்னை கொட்டிவாக்கம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஒருமுறை பார்த்து விட்டு வார்சா வர வேண்டும் என்பது நினைப்புகளில் ஒன்று. அந்த நினைப்பு புதிதாகத் தோன்றிய ஒன்றல்ல; அதன் வயது மூன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அப்படியொரு நினைப்புத் தோன்றக்காரணம் எனது புத்தக ஆசையோ! படிக்கும் விருப்பமோ அல்ல. அரசின் செயல்பாடு தான் காரணம். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுச் செயல்பாடு வேறொன்றும் அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.  

January 13, 2012

வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்தமிழ்ச் சிறுகதை தோன்றிய பத்தாண்டுகளிலேயே நவீன சிறுகதையாக மாறி விட்டது. ஆனால் தமிழ் நாவல் தன்னை நவீனமாக்கிக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் முக்கால் நூற்றாண்டு என்பது நாவல்  வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய உண்மை. தொடர் நிகழ்வுகளை அடுக்கி நீண்ட வரலாற்றைச் சொல்ல உரைநடையை வெளிப்பாட்டுக் கருவியாக  மாற்றிக் கொண்ட போதிலும், காவியபாணியும் புராணிகத் தன்மையும், கதை சொல்லலில் கைவிடப் படாமல் தான் இருந்தன. சிறுகதை இலக்கியம் நவீன சிறுகதையாக மாறியதைப் பார்த்தே நாவல் இலக்கியம் நவீன நாவலாக மாறியது என்று கூடச் சொல்லலாம்.

January 09, 2012

ஏழாம் அறிவு: திரைப்பட விமரிசனம் அல்ல தொலைந்து போன இந்திய அறிவு“ஒரு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே விமரிசனம் எழுதி விடும் நபர்” என என்னைக் குறித்து, லட்சுமி மணி வண்ணன் தனது சிலேட்டுப் பத்திரிகையில் எழுதியது கிண்டல் குறிப்பா? உருவேற்றி அனுப்பிய மந்திரத் தகடா என்று தெரியவில்லை. மூன்று வருடங் களுக்குப் பிறகு தன் வலிமையை இழந்து விட்டது.
மாதம் தோறும் சினிமாவைப் பற்றிக் கட்டுரை எழுதிய நான், அவர் சொன்னது சரிதான் எனத் தோன்றியதால் கொஞ்சம் நிறுத்தி வைத்தேன். அதற்காக மொத்தமாக நிறுத்தி விட்டேன் என்று நினைத்து விட வேண்டாம்.

January 04, 2012

தோருண்: நடந்தே பார்க்க வேண்டிய நகரம்.கிறிஸ்துமஸ் இரவில் வார்சாவைச் சுற்றிவந்தபோது இந்தத்திட்டம் உருவானது. இந்தக் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வார்சா அல்லது ஒரு கிராமம் அல்லது தூரத்திலிருக்கும் நகரம் ஒன்றில் ஓரிரவாவது தங்கலாம் என்று திட்டமிட்டோம். போலந்து நகரங்களைப் பற்றிய குறிப்புகளுக்காக இணையத்துக்குள் செல்ல மனம் விரும்பவில்லை. முதல் அனுபவங்கள் தேவை என்பதால் அதை நான் செய்வதில்லை.  படங்கள், விவரங்கள், வரலாறு என எல்லாவற்றையும் தரும் விக்கிபீடியாக்கள் ஒருவிதத்தில் முதன்முதலாய்ப் பார்க்கும் ஆர்வத்தைக் குறைத்து விடுகின்றன.