December 31, 2011

டர்ட்டி பிக்சர்ஸ் :ஆண்நோக்குப் பார்வையின் இன்னொரு வடிவம்


சில்க் ஸ்மிதா, தமிழ்ச் சினிமாவில் பிம்பமாக அலைந்து கொண்டிருந்தபோது அவளது உடல் ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. சில்க்கின் தற்கொலை அவளது வாழ்க்கையை திறந்த புத்தகமாக மாற்றி விட்டது. திறந்த புத்தகங்களை யார் யார் எப்படி வாசிக்கிறார்கள் என்பது அவரவர் வாசிப்பு முறை சார்ந்தது மட்டுமல்ல; மன அமைப்பு சார்ந்ததும் கூட. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தும் ரசித்தும் விமரிசித்தும் விளக்கியும் வளர்ந்து கொண்டிருக்கும் நான் ஆகக் கூடிய முறை பார்த்த ஒரு சினிமாப் பாடல் காட்சி எதுவெனக் கேட்டால் சிலுக் நடித்த பாடல் காட்சி என்றே சொல்வேன்

December 28, 2011

தொலைந்து போகுமோ வெள்ளைக் கிறிஸ்துமஸ்.செயிண்ட் பால் சர்ச்
டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டொரு நாள் பூஜ்யத்திற்கும் கீழே வெப்பநிலை போன போது துறைத்தலைவர் டேனுதா ஸ்டாய்ஸ்டிக் சொன்ன எச்சரிக்கைக் குறிப்புகள் நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு நாளும் அறைக்குள் வந்து தான் அவரது கையுறையைக் கழற்றுவார். . வெளியில் நடக்கும்போது கையுறைகளைக் கழற்ற வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே மேலும் சில குறிப்புகளைச் சொன்னார். உறையைக் கழற்றி மாட்டிக் கொள்வதற்குள் கைகள் விறைத்து விடும் வாய்ப்புண்டு என்று சொன்னவருக்கு இந்தியாவின் தட்பவெப்பம் பற்றியும் தெரியும்.

December 27, 2011

சிங்கத்திடமிருந்து தலைவரை யாராவது காப்பாற்றுங்கள்


தமிழ்நாட்டில் பேராசிரியராக இருந்து தமிழைக் கற்றுத் தந்தேன். ஆனால் வார்சாவில் வருகைதரு பேராசிரியராக வந்து தமிழைச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆம்,”கற்றுத் தருதல்” ”சொல்லித் தருதல்” என்ற இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கவனமாகவே சொல்கிறேன்.வார்சாவில் எனது வேலை போலந்து மாணவ, மாணவிகளுக்குத் தமிழ் பேசக் கற்றுக் கொடுப்பதுதான். மாணவ, மாணவிகள் என்று சொல்வதற்குப் பதிலாக மாணவிகள் என்றே குறிப்பிடலாம். ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே மாணவர்; எட்டுப்பேர் மாணவிகள். 

December 21, 2011

மாறிக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்புகள்: புதுவகைக் கலப்புத்திருமணங்கள் பற்றி ஒரு கலந்துரையாடல்


        உலகமயம், தாராளமயம், தனியார் மயம் எனக் கடந்த 20 ஆண்டுகளாகப் பேசப் படும் பின்னணியில் பொருளா தார மாற்றங்கள் பெரும ளவில் நடந்து விட்டன. நாடுகளின் எல்லைக் கோ டுகள் கற்பனைக் கோடு களாக மாறிக் கொண்டிருக் கின்றன. பொருளாதார மென்னும் அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேல் கட்டுமானங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற மார்க்ஸின் கண்டு பிடிப்பு மொழி,கலை, இலக்கியம்,பண்பாடு என்னும்பொது வெளிகளில் ஏற்கெனவே உண்மையாகி விட்டன. அவற்றில் எல்லாம் உலகமயத்தின் அடையாளங்களைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். பொதுவெளியைத் தாண்டி தனிமனிதர்களின் அந்தரங்க வெளிகளுக்குள் - சமயம், குடும்பம், காதல் போன்றனவற்றிற்குள் மெல்ல மெல்லப் பரவி வருவதை இப்போது உணர முடிகிறது. இந்த உணர்வுக்குப் போலந்து வாழ்க்கை ஒரு கண் திறப்பாக இருக்கிறது கூடுதல் தகவல்

December 11, 2011

இவனே இல்லையென்றால் யார்தான் மாகவி?


கவி பாரதி எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பலவிதப் பதிப்புகளில் கிடைக்கின்றன. கவிதைகள் அனைத்தும் இணையம் வழியாக வாசிக்கக் கிடைப்பதும், அவனது கவிதை சார்ந்த கருத்துக்கள் நேரடி மொழிபெயர்ப்பாகவும், சாராம்சம் சார்ந்த சுருக்கமாகவும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அதன் காரணமாக அவனது படைப்புகளும், படைப்பு வழியே முன் வைக்கப்பட்ட கருத்துக்களும் உலகம் தழுவிய இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமாயுள்ளன.

December 09, 2011

நூறில் ஒன்று: அரசியல் பேசத் தொடங்கிய ஊடகங்கள்


உயிர்மையின் 100 வது இதழுக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அனுப்பிய பதில். அச்சில் எப்படி வந்திருக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி:
தமிழ் ஊடகங்கள் அரசியல் மயமானதன் விளைவுகள் என்ன?

கடந்த காலத்திற்குள் பதுங்கி இருக்கிறது இந்தியவியல்


பல்கலைக்கழக நுழைவு வாயில்
போலந்து வந்த மூன்றாவது நாளில் நான் பணியாற்றும் இந்தியவியல் துறையின் தலைவர் பேரா.டேனுடா ஸ்டாசிக் கொடுத்த அழைப்பிதழ் தமிழ்நாட்டு நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது. பாண்டிச் சேரி பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பொறுப்பேற்று நண்பர் குணசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்த அரங்கியலாளர் சந்திப்பு தொடங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடத்திய தலித் எழுத்தாளர் சொற்பொழிவு வரிசை, செவ்வியல் கவிதைகளோடு நவீன கவிகளை உறவாட வைத்த பத்துநாள் பயிலரங்கு வரை ஒவ்வொன்றும் வந்து போய்க் கொண்டே இருந்தன.

December 01, 2011

பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?”


அது போன்ற விருந்தோன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியாவில் கிடைத்ததில்லை. தாராளமாகக் குடிக்கலாம் என அனுமதிக்கும் பாண்டிச்சேரியில் ஏழரை ஆண்டுகள் இருந்தும் இந்த அனுபவத்திற்காக வார்சா வர வேண்டியதாகி விட்டது.  இதுபோலப் பல அனுபவங்களை வார்சா தர இருக்கிறது என்பதை ஒரு மாத காலத்திற்குள் புரிந்து கொண்டு விட்டேன்.