August 11, 2011

சேலத்தில் ஓர் உரையாடல் அரங்கம்

தமிழ் நாட்டில் பலநகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ்ச் சங்கத்திற்கும் அதனை நிர்வாகம் செய்பவர்கள் சார்ந்து தனித்த அடையாளங்கள் உண்டு. அந்தந்த ஊரின் பொதுப்போக்கோடு சேர்ந்து பயணம் செய்யும் தமிழ்ச் சங்கம் போல் இல்லாமல் சேலம் தமிழ்ச் சங்கம் அவ்வப்போது நவீன இலக்கியம், நவீன இலக்கிய ஆளுமைகள்  எனத்தொடர்பு கொண்டு வரும் ஒன்றாக இருந்து வருகிறது. அதற்குக் காரணம் அதன் செயலாளராக இருக்கும் கவி க.வை. பழனிசாமி என்று நினைக்கிறேன்.


ஆகஸ்டு 13,14 தேதிகளில் நவீன இலக்கியம் மீதான உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் க.வை. பழனிச்சாமி. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பலரையும் அழைத்து இரண்டு நாள் தங்க வைத்து, உணவு, இருப்பிடம் வழங்கி எழுத்தாளர்களோடு உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளார். 400 பேருக்கும் குறையாமல் இதில் கலந்து கொள்ளவர்களோடு உரையாடல் நடத்த இருப்பவர்கள்:
பிரபஞ்சன்   நாஞ்சில் நாடன் அ.ராமசாமி தேவதச்சன் ச.தமிழ்ச்செல்வன்
எஸ்.ராமகிருஷ்ணன் பெருமாள் முருகன் ஆனந்த், மோகனரங்கன்
மொத்த நிகழ்வையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருப்பவர் தமிழவன்.
நவீன இலக்கியம் பற்றிய உரையாடல் பொதுவிவாதமாகவும், குழுவிவாதமாகவும் நடக்கும் என நினைக்கிறேன். நாளை இரவு கோயம்புத்தூர் விரைவு வண்டியில் ஏறி அதிகாலை ஈரோட்ட்டில் இறங்கிச் சேலம் சேர்ந்தபின்பு தான் இரண்டு நாளில் என்ன நடக்கும் எனச் சொல்ல முடியும்.
பார்க்கலாம்.

No comments :