கலாநிதி. கா. சிவத்தம்பி என்னும் பேராசான்



கல்விப் புலம் வழியாகத் தமிழ் இலக்கியம் படிக்க வரும் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாத பெயராகத் தன்னை நிறுவிய ஆளுமை கலாநிதி கா.சிவத்தம்பி. அவரது இடதுசாரி அரசியல் சார்பு பிடிக்காத ஒரு தமிழ் மாணவனும் இலக்கியவாதியும் கூட அவரது நூல்களை வாசிக்கத்தொடங்கினால் மறுதலிக்க முடியாத புலமையை ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.
அவரது தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதல் நூலின் வழியாகவே அவரை நான் அறிந்தேன். பட்டப்படிப்புக் காலம் தொட்டே என்னை வாசிக்கும்படி ஈர்த்த நூல்கள் அவருடையவை. நாவலும் வாழ்க்கையும் , தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி போன்ற நூல்களை ஒரு தடவைக்கும் மேலாக வாசித்துள்ளேன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்த போது செய்த இரண்டு வேலைகளும் மிகவும் முக்கியமானவை. அவரோடு நட்புடன் பழகிய அ.மார்க்ஸுடன் இணைந்து எழுதிய பாரதி- மறைவு முதல் மகாகவி வரை(1984) என்ற நூலும், பல்கலைக்கழகத்திற்கு ஆங்கிலத்தில் கொடுத்துப் பின்னர் தமிழ்ப் படுத்தப்பட்ட தமிழில் இலக்கிய வரலாறு என்ற நூலும் அவரது தேடுதல் பணிக்குச் சான்றாக இருப்பவை. என்னுடைய ஆய்வின் நெறியாளராக பேரா. தி.சு.நடராசன் இருந்தார் என்றாலும் பேரா.கா.சிவத்தம்பியின் நூல்களும் ஒருவிதத்தில் நெறிப்படுத்தியவை என்பதை நான் மறந்ததில்லை. அவர் பின்பற்றிய முறையியல் எனக்குள் பதிந்து கிடக்கிறது என்றே நினைக்கிறேன்.

இலக்கியம் சமூகத்தின் இருப்பு மற்றும் நிகழ்வுகளின் காரண காரியங்களின் வினையாகவும் எதிர்வினையாகவும் இலக்கியம் பிறக்கிறது என்ற நம்பிக்கை கொண்ட பலருக்கும் அவரது முறையியல் சரியான திசைவழியைக் காட்டும். வருகை தரு பேராசிரியராகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது தஞ்சையில் ஒரு முறையும் சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் இருமுறையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். கல்விப் புலம் சார்ந்த சந்திப்புகளாக மட்டுமே அவை இருந்தன. விடுதலைப் புலிகள் தாங்கள் நடத்திய விடுதலை அரசியலில் அவரது பல்துறை சார் புலமையை மதித்து இடைக்கால அரசுக்குத் தலைமை தாங்கும் தகைமையராகக் கருதினார்கள் . அவரது பெருமையும் மதிப்பும் அவரை மதித்த புலிகளின் எதிர்காலவியல் சிந்தனையும் மரணத்திற்குப் பிந்திய நினைவில் நதியாக நகர்ந்து கொண்டிருக்கிறது


1. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் - 1969
2. ஈழத்தில் தமிழ் இலக்கியம் - 1978
3. நாவலும் வாழ்க்கையும் - 1978
4. இலக்கியத்தில் முற்போக்குவாதம் - 1978
5. தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி - 1979
6. இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல் - 1980
7. இலக்கணமும் சமூக உறவுகளும் - 1981
8. இலக்கியமும் கருத்துநிலையும் - 1981
9. தற்காலத்தமிழ் இலக்கியத்தில் வறுமையும் சாதியமும் - 1981
10. தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும் - 1981
11. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் - 1983
12. பாரதி- மறைவு முதல் மகாகவி வரை [அ.மார்க்ஸுடன்] - 1984
13. தமிழில் இலக்கிய வரலாறு [1986-ஆங்கிலம்] - 1988
14. தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டு பிடிப்பு - 1989
15. பண்பாட்டு உருவாக்கத்தில் பத்திரிகைகளின் பங்கு - 1989
16. யாழ்ப்பாணத்தில் தொடர்பும் பண்பாடும் - 1991
17. யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் - 1993
18. தமிழ்ப் பண்பாட்டில் கிறிஸ்தவம் - 1993
19. தமிழ் கற்பித்தலில் உன்னதம் - ஆசிரியர் பங்கு - 1996
20. கற்கை நெறியாக அரங்கு - 1996
21. திராவிடக் கருத்தியலின் இன்றையப் பொருத்தப்பாடு - 1999
22. மதமும் கவிதையும் - 1999
23. யாழ்ப்பாணம் -சமூகம், பண்பாடு, கருத்துநிலை - 2000
24. இலங்கைத் தமிழர் யார்? எவர்? - 2000
25. விமரிசனச் சிந்தனைகள் - 2001
26. ஈழத்துத்தமிழ் இலக்கியத்தடம் [ 1980-2000]
27. பார்வைகளும் விமரிசனங்களும் - 2001
28. நவீனத்துவம் தமிழ் பின் நவீனத்துவம் - 2002
29. கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - 2003
30. பண்டைத் தமிழ்ச் சமுகம் புரிதலை நோக்கி - 2003
31. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் - 2004
DRAMA IN ANCIENT TAMIL SOCIETY -1981
1.Problems and Method of study
2. The Evolution of Greek Drama
3.The Sources
4. The Social and Historical Perspective
5.Dance and Drama in the Historic Phase
6.. Dance and Drama in the Feudal Phase
7.Dance and Drama in the Mercantilist Phase
8.Character and Continuity of the Dance and Dramatic Forms
9.The Dramatic Art in the Greece and TamilNadu
10.Factors in Origin and Development

கருத்துகள்

மணிவானதி இவ்வாறு கூறியுள்ளார்…
பேராசிரியர் கா.சிவதம்பி அவர்களின் குறிப்புகள் முழுமையானதாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

பேராசிரியரின் மறைவு தமிழ் உலகத்தின் இழப்பாகும்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
எம்.ஏ.சுசீலா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் அஞ்சலிச் செய்தி கண்டேன்.பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு என் அஞ்சலியும் இணைகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்