April 20, 2011

தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு -கருத்தரங்கம்


தமிழ்ச் சிறுகதைக்கு நூறு ஆண்டு ஆகும் நிகழ்வைக் கொண்டாடும் விதமாகச் சென்னையில் சாகித்ய அகாடெமி ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளது. ஏப்ரல் 26 ,27 தேதிகளில் சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் நடக்கும் இக்கருத்தரங்கில் தொடக்க விழா,

April 12, 2011

சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்


வாசிப்பதற்கு முன் ஒரு குறிப்பு
இந்தக் கட்டுரை 2006 இல் எழுதப்பட்டது. ஆனால் இப்போதும் இக்கட்டுரை விவாதிக்கும் எதுவும் மாறிவிடவில்லை. நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கின்றன. இப்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் நிகழ்ச்சிகளின் பெயர்களை அந்த இடத்தில் மாற்றிப் போட்டு நீங்கள் வாசித்துக் கொள்ளலாம். இனிக் கட்டுரைக்குப் போகலாம்...

April 10, 2011

மறதியின் புதை சேற்றில் :பொதுத்தேர்தல்கள் குறித்த ஒரு பரிசீலனை


2011,மார்ச்,19 – நடக்கப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகாரபூர்வமான பணிகள் தொடங்கும் நாள். “தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரம் செலுத்தப் போகும் அரசமைப்பின் அடித்தள உறுப்பினருள் ஒருவராக இருக்க நான் விரும்புகிறேன்” எனத் தன்னை முன் மொழிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் முதல் நாள். அன்று தொடங்கும் இந்த முன் மொழிதல்கள் ஒருவார காலத்திற்குத் தொடரும். பின்னர் விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்; தகுதியுடைய மனுக்கள் ஏற்கப்படும்; தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்படும்.

ஞானபீடத்துக்கான பாதை


இந்த வருடம் தமிழுக்கு ஞானபீட விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என அதன் பரிந்துரைக் குழுவில் இருக்கும் அந்தப் பேராசிரியர் சொன்னார். 1977 இல் அகிலனுக்குக் கிடைத்தபின்னர் 23 ஆண்டுகள் காத்திருந்து ஜெயகாந்தனுக்கு வழங்கப் பட்டது. இனியும் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

April 07, 2011

தமிழில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது?


பட்டப்படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் முடித்து விட்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பில் சேர்ந்திருந்தேன். வகுப்புகள் தொடங்கி இரண்டு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. எனக்கொரு கடிதம் வந்திருப்பதாக வகுப்புத் தோழி சொன்னவுடன் அதை எடுப்பதற்காகத் துறைக்கு வரும் கடிதங்கள் போடப்படும் பெட்டிக்கு அருகில் போய்க் கடிதங்களைப் புரட்டினேன்.  எனக்கு வந்த கடிதத்தைத் தேடிக் கொண்டிருந்த போது எனது பெயரைச் சொல்லி அவர் அழைத்தார். அவருடன் இன்னும் நான்கு பேர் இருந்தார்கள். அருகில் போன போது எனது பெயருக்கு வந்த தபால் அட்டை அவர் கையில் இருந்தது. அழைத்தவர் மற்றவர்களை விட நல்ல உயரம்.  தயங்கித் தயங்கி அவரருகில் சென்றேன். காரணம் ’ராகிங்’ செய்யப்போகிறார்கள் என்ற பயம்.

April 04, 2011

கதவைத் திறந்து வையுங்கள் ; காற்றுக்காக மட்டுமல்ல.


அதைப் பயணம் எனச் சொல்வதை விடப் பங்கேற்பு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்லூரிக்குத் தரப்பட்ட   தன்னாட்சி நிலையை மேலும் தொடரலாமா? இல்லையென்றால் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் பழையபடி கொண்டு வந்து விடலாமா? எனப் பரிந்துரைக்கும் பல்கலைக்கழகக் குழு ஒன்றின் உறுப்பினராகச் சென்றிருந்தேன். நான் அந்தக் கல்லூரிக்குப் புதியவன். பிற பல்கலைக்கழக வல்லுநர் என்ற வகையில் அக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.