February 24, 2011

காலம் என்னும் பெருங்கணக்கு: ஒரு வாரத்திற்குப் பின் ஒரு குறிப்பு

எனது பாடங்களுக்கு நான் கற்பிக்கும் முறையில் எனக்கு எப்போதும் திருப்தி இருப்பதில்லை. அதனால் திறனாய்வாளர்களையும் படைப்பாளிகளையும் அழைத்து அவர்களோடு உரையாடும் வாய்ப்பை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்தித் தருவது ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்வு. இந்த வருடம் கடந்த வாரம் சிறுகதையாளர் வண்ணதாசனும், நாவலாசிரியர் இமையமும் எங்கள் துறைக்கு வந்திருந்தனர்.

இன அடையாளங்களைத் தாண்டி..


இலங்கையில் நிகழ்ந்து வந்த யுத்தம் 
பேரினவாதக் கருத்தியலை 
மெல்லமெல்ல ஏற்றுக் கொள்ளச் செய்வதில் 
வெற்றி பெற்றுள்ளது. 
முடிவுக்கு வந்த யுத்தத்தின் பிந்திய மௌனங்கள் 
அதற்கு முழுச்சாட்சி. 
ஆனால் மௌனங்கள் கலையும் ஓசைகளும் கேட்கவே செய்கின்றன 
என்பதை அவ்வப்போது வரும் தகவல் குறிப்புகள்
சொல்லித்தான் காட்டுகின்றன. 
இன்று காலை எனக்கு வந்த 
இந்தக் கடிதம் எனக்குச் 
சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்
அ.ராமசாமி


February 15, 2011

ஐயா, உங்கள் காலம் முடிந்து போய் விட்டது


அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்து நிற்கும் அவரிடம் அப்படிச் சிரித்துக் கொண்டே பேசியிருக்கக் கூடாது என்பது இப்போது உறைக்கிறது. சிரித்துக் கொண்டே சொன்ன போது அவர் நிச்சயம் கோபம் அடையவே செய்திருப்பார்.

February 06, 2011

எல்லை கடக்கும் உரிமைகள்


திலகவதியைச் சிறப்பாசிரியராகவும், அவரது புதல்வர் பிரபுதிலக்கை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் மாத இதழ் அம்ருதா. நான்கு ஆண்டுகளைக் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள அம்ருதாவில் எனது நீண்ட நேர்காணல் முன்பு ஒருமுறை வெளி வந்துள்ளது. அதில்லாமல் அம்ருதாவில் நாடகம், திரைப்பட விமரிசனம், சில கட்டுரைகள் என அவ்வப்போது எழுதியுள்ளேன். இந்த மாதம் தொடங்கி , கும்மியடி.. கூடி நின்று கும்மியடி என்ற தலைப்பில் பத்தித் தொடராகக் கட்டுரைகளை எழுதப்போகிறேன். எல்லை கடக்கும் உரிமைகள் என நான் தலைப்பிட்ட அந்தக்கட்டுரை படைப்பாளிகள் அரசியல்வாதியாகலாமா? என இன்னொரு தலைப்புடன் அட்டைப்படக்கட்டுரையாக இந்த மாதம் (2011, பிப்ரவரி) அச்சாகியுள்ளது. இந்தியாவில் அலை வீசிக் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மையப்படுத்திய கட்டுரை என்றாலும் நேரடி அரசியல் கட்டுரை அல்ல. நேரடியாக அரசியல் கட்டுரைகள் எழுதும் அளவுக்குத் தைரியமும் அரசியல் ஞானமும் எனக்கு இல்லை. ஆனால் பரபரப்பான பேரரசியல் போலவே இலக்கியம், கலை, பண்பாடு, படைப்பாளி, அதற்குள் செயல்படும் அறம் சார் கேள்விகளுக்குள் செயல்படும் நுண் அரசியல் பற்றி எழுதும் தைரியமும், ஞானமும் எனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு எழுதப் போகிறேன். அம்ருதா இதழைக் கடைகளில் வாங்கிப் படிக்க முடிபவர்கள் அச்சிலேயே வாசியுங்கள். அந்தப் பாக்கியமும் அனுகூலங்களும் இல்லாதவர்களுக்காக கட்டுரை அச்சாகி ஒருவாரம் கழித்து இங்கே பதிவேற்றம் செய்யப்படும்.  இனி முதல் கும்மி…

February 05, 2011

சசிகுமாரின் ஈசன் : சமகாலத் தமிழ்வாழ்வின் பெருந்துயரம்


வெற்றியை மட்டுமே கொண்டாடும் நமது திரைப்பட உலகமும், பார்வையாளர் மனமும் தோல்விப் படம் எடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வெற்றியாளரின் அடுத்த பாய்ச்சலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன. இந்த மனநிலை திரைப்படம் சார்ந்தது மட்டுமல்ல. போட்டிகள் நிரம்பிய மனித வாழ்க்கையின்பல தளங்களின் இயக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.