December 31, 2011

டர்ட்டி பிக்சர்ஸ் :ஆண்நோக்குப் பார்வையின் இன்னொரு வடிவம்


சில்க் ஸ்மிதா, தமிழ்ச் சினிமாவில் பிம்பமாக அலைந்து கொண்டிருந்தபோது அவளது உடல் ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. சில்க்கின் தற்கொலை அவளது வாழ்க்கையை திறந்த புத்தகமாக மாற்றி விட்டது. திறந்த புத்தகங்களை யார் யார் எப்படி வாசிக்கிறார்கள் என்பது அவரவர் வாசிப்பு முறை சார்ந்தது மட்டுமல்ல; மன அமைப்பு சார்ந்ததும் கூட. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தும் ரசித்தும் விமரிசித்தும் விளக்கியும் வளர்ந்து கொண்டிருக்கும் நான் ஆகக் கூடிய முறை பார்த்த ஒரு சினிமாப் பாடல் காட்சி எதுவெனக் கேட்டால் சிலுக் நடித்த பாடல் காட்சி என்றே சொல்வேன்

December 28, 2011

தொலைந்து போகுமோ வெள்ளைக் கிறிஸ்துமஸ்.செயிண்ட் பால் சர்ச்
டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டொரு நாள் பூஜ்யத்திற்கும் கீழே வெப்பநிலை போன போது துறைத்தலைவர் டேனுதா ஸ்டாய்ஸ்டிக் சொன்ன எச்சரிக்கைக் குறிப்புகள் நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு நாளும் அறைக்குள் வந்து தான் அவரது கையுறையைக் கழற்றுவார். . வெளியில் நடக்கும்போது கையுறைகளைக் கழற்ற வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே மேலும் சில குறிப்புகளைச் சொன்னார். உறையைக் கழற்றி மாட்டிக் கொள்வதற்குள் கைகள் விறைத்து விடும் வாய்ப்புண்டு என்று சொன்னவருக்கு இந்தியாவின் தட்பவெப்பம் பற்றியும் தெரியும்.

December 27, 2011

சிங்கத்திடமிருந்து தலைவரை யாராவது காப்பாற்றுங்கள்


தமிழ்நாட்டில் பேராசிரியராக இருந்து தமிழைக் கற்றுத் தந்தேன். ஆனால் வார்சாவில் வருகைதரு பேராசிரியராக வந்து தமிழைச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆம்,”கற்றுத் தருதல்” ”சொல்லித் தருதல்” என்ற இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கவனமாகவே சொல்கிறேன்.வார்சாவில் எனது வேலை போலந்து மாணவ, மாணவிகளுக்குத் தமிழ் பேசக் கற்றுக் கொடுப்பதுதான். மாணவ, மாணவிகள் என்று சொல்வதற்குப் பதிலாக மாணவிகள் என்றே குறிப்பிடலாம். ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே மாணவர்; எட்டுப்பேர் மாணவிகள். 

December 21, 2011

மாறிக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்புகள்: புதுவகைக் கலப்புத்திருமணங்கள் பற்றி ஒரு கலந்துரையாடல்


        உலகமயம், தாராளமயம், தனியார் மயம் எனக் கடந்த 20 ஆண்டுகளாகப் பேசப் படும் பின்னணியில் பொருளா தார மாற்றங்கள் பெரும ளவில் நடந்து விட்டன. நாடுகளின் எல்லைக் கோ டுகள் கற்பனைக் கோடு களாக மாறிக் கொண்டிருக் கின்றன. பொருளாதார மென்னும் அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேல் கட்டுமானங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற மார்க்ஸின் கண்டு பிடிப்பு மொழி,கலை, இலக்கியம்,பண்பாடு என்னும்பொது வெளிகளில் ஏற்கெனவே உண்மையாகி விட்டன. அவற்றில் எல்லாம் உலகமயத்தின் அடையாளங்களைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். பொதுவெளியைத் தாண்டி தனிமனிதர்களின் அந்தரங்க வெளிகளுக்குள் - சமயம், குடும்பம், காதல் போன்றனவற்றிற்குள் மெல்ல மெல்லப் பரவி வருவதை இப்போது உணர முடிகிறது. இந்த உணர்வுக்குப் போலந்து வாழ்க்கை ஒரு கண் திறப்பாக இருக்கிறது கூடுதல் தகவல்

December 11, 2011

இவனே இல்லையென்றால் யார்தான் மாகவி?


கவி பாரதி எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பலவிதப் பதிப்புகளில் கிடைக்கின்றன. கவிதைகள் அனைத்தும் இணையம் வழியாக வாசிக்கக் கிடைப்பதும், அவனது கவிதை சார்ந்த கருத்துக்கள் நேரடி மொழிபெயர்ப்பாகவும், சாராம்சம் சார்ந்த சுருக்கமாகவும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அதன் காரணமாக அவனது படைப்புகளும், படைப்பு வழியே முன் வைக்கப்பட்ட கருத்துக்களும் உலகம் தழுவிய இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமாயுள்ளன.

December 09, 2011

நூறில் ஒன்று: அரசியல் பேசத் தொடங்கிய ஊடகங்கள்


உயிர்மையின் 100 வது இதழுக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அனுப்பிய பதில். அச்சில் எப்படி வந்திருக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி:
தமிழ் ஊடகங்கள் அரசியல் மயமானதன் விளைவுகள் என்ன?

கடந்த காலத்திற்குள் பதுங்கி இருக்கிறது இந்தியவியல்


பல்கலைக்கழக நுழைவு வாயில்
போலந்து வந்த மூன்றாவது நாளில் நான் பணியாற்றும் இந்தியவியல் துறையின் தலைவர் பேரா.டேனுடா ஸ்டாசிக் கொடுத்த அழைப்பிதழ் தமிழ்நாட்டு நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது. பாண்டிச் சேரி பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பொறுப்பேற்று நண்பர் குணசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்த அரங்கியலாளர் சந்திப்பு தொடங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடத்திய தலித் எழுத்தாளர் சொற்பொழிவு வரிசை, செவ்வியல் கவிதைகளோடு நவீன கவிகளை உறவாட வைத்த பத்துநாள் பயிலரங்கு வரை ஒவ்வொன்றும் வந்து போய்க் கொண்டே இருந்தன.

December 01, 2011

பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?”


அது போன்ற விருந்தோன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியாவில் கிடைத்ததில்லை. தாராளமாகக் குடிக்கலாம் என அனுமதிக்கும் பாண்டிச்சேரியில் ஏழரை ஆண்டுகள் இருந்தும் இந்த அனுபவத்திற்காக வார்சா வர வேண்டியதாகி விட்டது.  இதுபோலப் பல அனுபவங்களை வார்சா தர இருக்கிறது என்பதை ஒரு மாத காலத்திற்குள் புரிந்து கொண்டு விட்டேன்.

November 30, 2011

உள்ளூர் விளையாட்டுகள் அழிந்து கிரிக்கெட் உருவானது.இந்தியாவில் நடக்கும் மாற்றங்களின் பின்னணியில் ’சமஸ்கிருதமயமாதல்’ என்னும் மனநிலை செயல்படுவதாக எம். என். ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவார். இந்திய சாதியக் கட்டமைப்பு அடுக்கின் உச்சத்தில் இருப்பதாக நம்பப்பட்ட பிராமணர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளைச் சொந்தமாக்குவதன் மூலம் தங்களையும் பிராமணர்களாகக் கருதிக் கொள்ளும் மனநிலை வெளிப்பாடு என்பது அவரது கருத்து.

(தமிழ்ச்சினிமா அரசியலான கதை
”கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்று தான் சொல்கிறேன்”  எனப் பராசக்தியில் குணசேகரனை (சிவாஜி) ஆவேச வசனம் பேச வைத்தததின் மூலம், தமிழக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டது தமிழ்ச் சினிமா. அந்தவகையில் முதற்காரணம் மு.கருணாநிதிதான். அன்று முதல்  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படும் வெற்றிகரமான ஆயுதமாகத் தமிழ்ச் சினிமா தமிழக அரசியலின் இணையாகவே கருதப்படுகிறது. 

November 29, 2011

கல்வியில் கொள்கையின்மை


நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன.

உயர்கல்வி சந்திக்கும் சிக்கல்கள்


உயர்கல்வியில் காலத்தின் தேவைக்கேற்பச் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் அமைப்புகள் இருக்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, மாநில உயர்கல்வி மன்றம், அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி மன்றம் போன்ற பெயர்களில் இயங்கும் இந்த அமைப்புகளே அவ்வப்போது பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வழிகாட்டு நெறிகளையும் விதிகளையும் உருவாக்கித் தருகின்றன.

November 28, 2011

;கலைப்பாடங்களின் அழிவு


ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்றுத்தந்த பாடங்கள் மூன்று பெரும் பிரிவுகளாகவே இருந்தன, இன்றளவும் கூடப் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அறிவியல் புலம், சமூக அறிவியல் புலம், மொழிப்புலம் என மூன்று புலங்கள் தான் இருக்கின்றன.

தமிழ் வாழ்க்கை ஏன் தமிழ்ப் படத்தில் இல்லை


தமிழில் பெயர் வைத்தாலேயே தமிழ்ச் சினிமாவாக ஆகி விடும் என்று கருதிய தமிழக  அரசின் நம்பிக்கையை மூட நம்பிக்கையாக ஆக்கியது தமிழ்த் திரையுலகம். ரோபோ என்ற பெயருக்குப் பதிலாக எந்திரன் என்றொரு பெயரைச் சூட்டி வரி விலக்குப் பெற்று கல்லாக் கட்டும் வல்லமை அவர்களிடம் உண்டு. சினிமா என்றாலே லாபம் ஈட்டும் தொழில் மட்டுமே என நினைக்கும் சினிமாத் தயாரிப்பாளர்களிடமிருந்து தமிழ் வாழ்வும், தமிழ் மண்ணும், தமிழ்ச் சமூகமும் தமிழ் மனமும் பதிவாகும் என எதிர்பார்ப்பது அதிகப்படியான ஆசை தான்.

November 16, 2011

பெரிய முள்ளை பதினோரு தடவை சுற்றிக் கொள்ளுங்கள்


டாடா மோட்டார்ஸ் சந்திரசேகர் காரில் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் இறகுப் பந்து(ஷட்டில்) விளையாடப் போயிருக்க மாட்டேன்.  வார்சாவுக்குப் போனதிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன். வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த விளையாட்டு மைதானத்திற்கு நடந்து போக முடியாது. பஸ்ஸில் போவதென்றாலும் ஒரே பஸ்ஸில் போய்த் திரும்ப முடியாது.

November 15, 2011

குளியலறையில் குளிக்கக் கூடாது.வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு செய்து முடிக்க வேண்டும் எனப் போட்ட பட்டியலில் பாபநாசம் கீழணைக் குளியலும் ஒன்று. திருநெல்வேலிக்குப் போன பிறகு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் தான். ஆனால் குற்றாலம் எனக்கு அலுத்துப் போய்விட்டது. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை.

November 06, 2011

இந்தியவியல் துறைகளின் தேவை.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் புலத்தில் தமிழ்ப் வந்திருக்கிறேன். இந்தியவியல் புலத்தில் போலந்து மாணவ மாணவி களுக்கு காலப்பழமையும் பாரம்பரிய வளமும் கொண்ட இந்தியாவின் செவ்வியல் மொழிகளான  சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றோடு இந்தி, பஞ்சாபி, வங்காளம் ஆகிய சார்பு மொழிகளையும் கற்பிக்கப் போலந்து பேராசிரியர்களும், இந்தியாவிலிருந்து வருகை தந்து குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இம்மொழிகளின் நிகழ்கால இருப்பைக் கற்றுத்தரும் வருகை தரு பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.

November 01, 2011

வலதுசாரியாக மாறியாக வேண்டும்


பல்கலைக்கழகம் வரை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்த மாணவிகள் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். வீட்டிலிருந்து கிளம்பிப்  பல்கலைக் கழகத்திற்கு வந்து சேரும் பாதையைப் புரிந்து கொண்டு விட்டேன் என்ற உறுதி எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. பாதை பிடிபட்டு விட்டது என்று நான் சொல்லவும் இல்லை; ஆனால் அந்த முடிவை அவர்களே எடுத்து விட்டார்கள். ஏதாவது பிரச்னை என்றால் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இரண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து விட்டு வாபஸான போது கொஞ்சம் கலக்கமாகத் தான் இருந்தது.

October 31, 2011

பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து


இந்தியாவில் இயங்கிவரும் நாடகப்பள்ளிகள் மேற்கத்திய அரங்க நுட்பங்களைப் பயிற்றுவிப்பதோடு, இந்திய அரங்கவியலையும் பயிற்றுவிக்கின்றன. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் 'முறைப்படுத்தப்பட்ட நடிப்புக் கோட்பாட்டை 'ப் போலவே, பாரம்பரிய அரங்கில் ஒரு நிகழ்த்துபவன் (performer) அவசியம். இந்த அடிப்படையில்தான் கர்நாடகத்திலுள்ள நாடகப்பள்ளிகள் யட்சகானத்தையும், கேரளத்தில் கதகளியையும் கூடியாடத்தையும் பயிற்றுவிக்கின்றன.

October 24, 2011

ராஜ் கௌதமனின் தன் வரலாற்று நாவல்கள்

                                     கதை அல்லாத பிற குறிப்புகள்
எப்போதும் தன்னை அந்நியனாக உணரும் சிலுவையின்
அங்கதம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தையும்
தன்னையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
இலக்கிய உத்திகளின் துணையின்றி,
தன் ‘வாழ்க்கைப் பார்வையையே’ மையமாகக் கொண்டு
இயங்கும் புதிய புனைகதை முயற்சி இது.
இப்படியான சிறு அறிமுகத்தைப் பின் அட்டையில் கொண்டிருக்கிறது ராஜ் கௌதமனின் இரண்டாவது நாவல் காலச்சுமை,

October 16, 2011

வாழ்ந்து கெடும் குடும்பங்களின் கதை: பாவண்ணனின் ஒரு மனிதரும் சிலவருஷங்களும் ரங்கசாமி நாயக்கர்
காலை எட்டுமணிக்கு நாயக்கர் கடை திறப்பார். கடை திறப்பு ஒரு தினுசுதான். விசிறிக்காம்பு நீளத்துக்கு பெரிய சாவியை மடியில் வைத்திருப்பார். கடைக்கு நூறு அடி தூரத்தில் நாயக்கர் வருகிறார் என்றால் கடைவாசலில் வேலைக்காரப் பையன்கள் வந்திருப்பார்கள்.
பாவண்ணன் சொல்லும் கதை

October 11, 2011

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு:பெண்ணெழுத்தின் முதல் அடையாளம்


தமிழில் புனைகதை இலக்கியம் தொடங்கிய காலந்தொட்டே இந்த வேறுபாடு உண்டு. இலக்கியத்தின் நோக்கம் சார்ந்த இந்த வேறுபாடு தமிழுக்கு மட்டும் உரியதல்ல. உலக இலக்கியம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒன்று தான். அதிலும் உழைப்பு, ஓய்வு என அன்றாட வாழ்க்கையைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து வாழப் பழகிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் தோற்றத்தோடு தொடர்புடைய புனைகதை எழுத்தின் வரவிற்குப் பின் இந்த வேறுபாடுகள் இருப்பது ஆச்சரியம் எதுவுமில்லை.
தீவிர எழுத்துக்காரர்கள் ( Serious literature ) வணிக எழுத்துக்காரர்கள் (Commercial ) என்பதாக அணி பிரிந்து போட்ட சண்டைகளே ஒரு காலகட்டத்தில் தமிழின் திறனாய்வாகக் கருதப்பட்டது.

October 09, 2011

வார்சாவிற்கு வந்து விட்டேன்.என்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக அறிமுகப் படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை என்றாலும் அதுதான் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக ஆக்கியிருக்கிறது.

October 03, 2011

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்


ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கின்ற ஒன்றுதான்.இலக்கியத் துறையில் செயல்படும் ஒருவன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, "நிகழ்கால இலக்கியப்பரப்பில் எனது இடம் என்ன ?" என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு விடை தேட வேண்டும். திருப்தியளிக்கும் பதில் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் வாசகர்களுக்கு அல்லது இலக்கிய வரலாற்றுக்குப் புதுவகையான படைப்பு கிடைக்க வேண்டும். தூர்வை என்ற நாவல் மற்றும் மூன்று சிறுகதைத் தொகுதிகள் வழியாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில்

September 26, 2011

தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்தமிழக எல்லைக்குள் வாழ நேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி தன்னையொரு தமிழ் உயிரியாகக் கருதிக்கொண்டாலும்சரி அல்லது இந்திய மனிதனாகக் கருதினாலும் சரி கடந்த பதினைந்து ஆண்டுகளில்-1990 முதலான பதினைந்து ஆண்டுகளில்- இரண்டு முக்கியமான நிகழ்வுளுக்காகத் தன் கவனத்தைத் திருப்பியிருக்கவேண்டும். முதலாவது நிகழ்வு ஊடகப் பெருக்கம் என்னும் சர்வதேச நிகழ்வு.

September 18, 2011

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்


பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப்  பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப் பண்பாடு x விளிம்புநிலைப் பண்பாடு என்று எதிர்வு எனச் சொல்லலாம்.

September 14, 2011

சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்-புறம்கவிதையியல் என்னும் கலைக்கோட்பாடு:
ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப்பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக் கோட்பாடு என்னும் பொதுவரையறை அர்த்தம் பெற்றுள்ளது. பொதுவரையறையின் அர்த்தம் கவிதையியல் என்னும் அதன் கூறுக்கும் பொருந்தும். நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழில் கவிதையியல் என்பதற்கும்  இலக்கியக் கோட்பாடு என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. ஐரோப்பியர்களின் வருகைக்கும் பின்னால் சில மாற்றங்கள் உள்ளன

தமிழகத்தில் தலித் இலக்கியம்


தலித் - ஒரு பதமாக  நுழைந்து நிகழ்வாக மாறிவிட்ட அந்த வார்த்தைக்கு வயது பத்து. இருபதாம் நூற்றாண்டின்  இறுதிப் பத்தாண்டுகள்.  நுழைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தமிழ்ச் சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் தளங்களை ஆக்ரமித்துக்கொண்ட சொல்லை - இதைப்போல் வேறு சொல்லை - தமிழ் மொழி இதற்கு முன் சந்தித்திருக்க வாயப்பில்லை.

September 10, 2011

சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் விலகல் பயணம்பெண்களை மையப்படுத்தியதாகவே தமிழில் புனைகதை வடிவம் தொடங்கியது. தமிழில் பட்டியலிடப் பட்டுள்ள முதல் ஐந்து நாவல்களில் மூன்று நாவல்கள்  பெண்களின் பெயரால்- கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், முத்து மீனாட்சி -அமைந்த நாவல்கள். தொடங்கி முடிக்கப்படாத பாரதியின் நாவல் முயற்சியான சந்திரிகையின் கதையும் ஒரு பெண்ணை மையப்படுத்திய புனைகதையே.

September 07, 2011

இமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ்வின் மீதான விசாரணை


எழுத்தாளர்களில் ஒரு சிலர் தாங்கள் இயங்கும் இலக்கிய வகைமைகளில் ‘மைல்கல்’  அல்லது ‘திருப்புமுனைப்’ படைப்பு என்று சொல்லத்தக்க படைப்புகளை எழுதுவதன் மூலம் கவனிக்கத்தக்க படைப்பாளிகள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். அதுவும் ஒரு படைப்பாளியின் முதல் படைப்பே அப்படிப்பட்ட ஒன்றாக அமைந்து விடும் பொழுது படைப்பாளியின் மீது குவியும் கவனம் ஆழமானது. முதல் நாவல் கோவேறு கழுதைகள், இமையத்திற்கு அப்படியொரு கவனக்குவிப்பைப் பெற்றுத் தந்தது.

September 04, 2011

முருகபூபதியின் சூர்ப்பணங்கு: சோதனைப் பேய் பிடித்தா(ட்)டும் மனிதர்கள்முருகபூபதியின் மிருக விதூஷகம் நாடக நிகழ்த்தப்பட்டுச் சரியாக ஓராண்டு முடிந்து விட்டது. 2010, ஜுனில் கோவில்பட்டி, மதுரை, திருவண்ணாமலை, சென்னை என ஒரே மூச்சில் அடுத்தடுத்த நாட்களில் மேடையேற்றினார். சென்னையில் எலியட் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் நடனக் கலைஞர் சந்திரலேகாவின் பயிற்சி அரங்கத்தளத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  இப்போது அடுத்த நாடகம்; சூர்ப்பணங்கு.  அதே வரிசையில் அதே நகரங்களில் அதே மேடைத்தளங்களில். 2011 ,ஜூலையில் 7,8,9,10 தேதிகளில்.

September 02, 2011

நீயா நானாவில் அன்னா ஹசாரேயும் நானும்


விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் தொழில் நுட்பக் கல்வி X சமூக அறிவியல் கல்வி என்ற தலைப்பிலான விவாதத்தின் விருந்தினராக அழைக்கப்பட்ட நான் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவைப் பற்றிய விவாதத்திலும் கலந்து கொள்ள நேர்ந்ததைத் தற்செயல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.

August 17, 2011

திக்குத்தெரியாத காட்டில்…இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் நுழைய உள்ளவர்களில் ஏறத்தாழப் பாதிப்பேர் தமிழ் வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைச் சாளர முறையின் வழியாகச் சேர உள்ள மொத்த மாணாக்கர்களில் 43.5 % பேர் தமிழ்வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 26.34 சதவீதம் தான்.  

August 11, 2011

சேலத்தில் ஓர் உரையாடல் அரங்கம்

தமிழ் நாட்டில் பலநகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ்ச் சங்கத்திற்கும் அதனை நிர்வாகம் செய்பவர்கள் சார்ந்து தனித்த அடையாளங்கள் உண்டு. அந்தந்த ஊரின் பொதுப்போக்கோடு சேர்ந்து பயணம் செய்யும் தமிழ்ச் சங்கம் போல் இல்லாமல் சேலம் தமிழ்ச் சங்கம் அவ்வப்போது நவீன இலக்கியம், நவீன இலக்கிய ஆளுமைகள்  எனத்தொடர்பு கொண்டு வரும் ஒன்றாக இருந்து வருகிறது. அதற்குக் காரணம் அதன் செயலாளராக இருக்கும் கவி க.வை. பழனிசாமி என்று நினைக்கிறேன்.

August 04, 2011

குதிரை முட்டை:பார்வையாளர்களின் தரவேற்றுமையை அழிக்கும் நாடகம்மேற்கத்திய நிகழ்த்துக்கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும், இந்திய நிகழ்த்துக் கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதைப் பலர் எழுதியுள்ளனர்; பேசியுள்ளனர்; விளக்கியும் காட்டியுள்ளனர். அத்தகைய வேறுபாடுகள் பார்க்கும் முறையிலும் பார்வையாளர்களாக இருந்து ரசிக்கும் முறையிலும் கூட இருக்கின்றன என்றே தோன்றுகின்றது. நிகழ்த்துக்கலைகளின் இந்தியப் பார்வையாளர்கள் புதியன பார்த்து திகைப்பவர்களோ, அதன் வழிக் கிடைக்கும் அனுபவம் அல்லது சிந்தனை சார்ந்து குழப்பிக் கொள்பவர்களோ அல்ல.

July 19, 2011

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை : முன்னிலைச் சொல்முறையின் சாத்தியங்களும் பலவீனங்களும்


இலக்கியப்பிரதிகள் செய்யுளைக் கைவிட்டு உரைநடைக்கு மாறியதின் வழியாகவே இக்கால இலக்கியங்கள் தோன்றின. அவற்றுள் நிகழ்காலத்தின் வாசிப்புத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவது புனைகதை வடிவமே.  புனைகதையின் அழகியல் கூறுகளுள் முதன்மையானது சொல்முறை உத்தி. சொல்முறையின் வழியாகவே புனைகதையாசிரியன் புனைவுவெளியையும், புனைவுக்காலத்தையும் புனையப்பட்ட மனிதர்களையும் உருவாக்குகிறான்.

July 12, 2011

தமிழும் வாழ்க! தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும் வாழ்க!!

தமிழுக்கென்று தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கடைசியாக வந்து சேர இருந்தது உலகச் செம்மொழித் தொல்காப்பியத் தமிழ்ச் சங்கம். கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, மதுரையில் அந்நிறுவனத்திற்கென நிலத்தையும் அளித்திருந்தது முந்திய திராவிட முன்னேற்றக் கழக அரசு.

July 10, 2011

எழுத்தாளர்களின் இரட்டைக்குதிரைப் பயணம்: பாலாவின் அவன் இவனுக்குப் பின்


அவன் இவன்–பாலாவின் இயக்கத்தில் வந்துள்ள இந்தப் படம் அவரது முந்திய படங்கள் சந்தித்த விமரிசனங்களைப் போல அதிகமும் நேர்மறை விமரிசனங்களைச் சந்திக்காமல், பல தரப்பினரிடமிருந்தும் எதிர்மறை விமரிசனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன் வழியாக அந்தப் படம் வெற்றிப்படமாகவும் ஆகலாம்; விரைவில் தியேட்டர்களை விட்டு வெளியேறவும் செய்யலாம்.

July 07, 2011

கலாநிதி. கா. சிவத்தம்பி என்னும் பேராசான்கல்விப் புலம் வழியாகத் தமிழ் இலக்கியம் படிக்க வரும் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாத பெயராகத் தன்னை நிறுவிய ஆளுமை கலாநிதி கா.சிவத்தம்பி. அவரது இடதுசாரி அரசியல் சார்பு பிடிக்காத ஒரு தமிழ் மாணவனும் இலக்கியவாதியும் கூட அவரது நூல்களை வாசிக்கத்தொடங்கினால் மறுதலிக்க முடியாத புலமையை ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

June 30, 2011

அரபு நாட்டில் முதல் இரவு


பொதுவாக விமான நிலையங்கள் நகர எல்லையிலிருந்து பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலேயே அமைக்கப்படுகின்றன. நான் முதன் முதலில் பார்த்த விமான நிலையம் மதுரை விமான நிலையம் தான். மதுரை நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அவனியாபுரம் என்னும் சிற்றூருக்கு அருகில் இருந்தது.

June 17, 2011

சுந்தரராமசாமியின் கவிதைகளுக்குள் உள்ளிருப்போரும் கேட்போரும்

                      மேற்கத்திய கவிதைகளில் மேற்கத்திய விமர்சகர்கள் கண்டு   
பிடித்த    சிறப்புகளைத்தமிழ்க் கவிதையின் மீது யந்திரரீதியாகப் பிணைப்பது            தமிழ்த் திறனாய்வு ஆகிவிடாது

நம் இலக்கியச் செல்வங்கள் நமக்குத் தரும் அனுபவங்களின் சாரங்களிலிருந்து நம் இலக்கியக் கோட்பாடுகள் உருவாகி வரவேண்டும்”        
                                         (ப.22,25/ ந.பி. கலை: மரபும் மனிதநேயமும்.)
இந்தக் குறிப்புகள் என்னுள் நிலைகொள்வதற்கு முன்பாகவே வேறு ஒரு கேள்வி அலையடித்துக்கொண்டே இருந்தது.

June 12, 2011

பாதல் சர்க்கார் : மாற்று அரங்கின் இந்திய அடையாளம்

2011, மே 13 தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது இந்தியாவின் பெருநகரங்களில் வீசிக் கொண்டிருந்த அனல் காற்று திசைமாறிக் கொண்டிருப்பதாக வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் தொலைக் காட்சி ஊடகங்கள் அரசியல் சூறாவளிகளைக் கொண்டு வந்த இரண்டு பெண்களைப் பற்றி சூடாகப் பேசிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் வீசிய ஜெ.ஜெயலலிதா என்னும் அசுரக் காற்று ஐந்தாண்டுக்கொரு முறை வந்து போகும் பெருங்காற்று என்பதைத் தமிழ் ஊடகங்கள் அறிந்திருந்ததால் பெரிய ஆரவாரம் எதையும் செய்து விடவில்லை. ஆனால் தேசிய அலைவரிசைத் தொலைக்காட்சிகள் மேற்கு வங்கத்தில் வீசிய மம்தா பானர்ஜி என்னும் புதிய சூறாவளியின் வேகம் பற்றியும் ஜெ.ஜெயலலிதா என்னும் பெண் சக்தி பற்றியும் பேசிய பேச்சுகள் ஊடகங்கள் பெருமறதிக்குள் சட்டெனக் குதித்து விடுவதை உணர்த்தின.

June 08, 2011

அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்


சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்தது தொடங்கித் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியிடம் தோல்வியைச் சந்தித்தது. கூட்டணி வெற்றி பெற்றது என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகவே ஆட்சியை அமைத்தது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போதிருந்து எல்லாத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு கூட்டணி தான் வெற்றி பெறுகிறது. ஆனால் ஆட்சி அமைப்பது அக்கூட்டணிக்குத் தலைமை தங்கும் கட்சி மட்டும் தான். கூட்டணியில் தனியொரு கட்சிக்குப் போதிய எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்புக் கிடைத்து விடும் நிலையில் தனியே ஆட்சி அமைப்பதைக் கூட்டணிக் கட்சிகளால் தட்டிக் கேட்க முடியாது; தடுத்து விடவும் முடியாது.

June 06, 2011

அழகர்சாமியின் குதிரை:வட்டார சினிமாவிலிருந்து இந்திய சினிமாவை நோக்கி:


புதுவகை சினிமாக்களைத் தமிழ்ப் பார்வையாளர்களுக்குத் தரும் முயற்சியில் திரைப்படப் படைப்பாளிகள் ஆர்வமோடு இருக்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு அடையாளம் அழகர்சாமியின்  குதிரை என்று சொல்லி இந்தக்  கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். தமிழின் பெருவாரியான சினிமா, திரும்பத் திரும்பச் சுற்றிச் சுழலும் ஒரு வகைச் சூத்திரக் கட்டமைப்பு சினிமா என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை... எல்லாக் காலங்களிலும் காதல் தான் தமிழ்ச் சினிமாவின் கச்சாப்பொருள். அதிலிருந்து யாராவது ஓரிருவர் எப்போதாவது அத்திபூத்தாற்போல

June 04, 2011

கி.ரா.வின் கோபல்ல கிராமம்: நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும்நான் அறிந்த மனிதர்களும்
 எனக்குத் தெரிந்த கதைகளும்

நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது? என்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும்  இல்லாமல் கி.ராஜநாராயணனின்  கோபல்ல கிராமம் ”  என நான் சொன்ன போது எனக்கு வயது 21. நிகழ்கால அரசியல், பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கி, அவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும், நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும், நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன.

May 27, 2011

காற்றில் மிதக்கும் கனவு


2011 மே, ஏழாம் தேதி திருவனந்தபுரத்தில் விமான நிலையத்திற்குள் நுழைந்த போது அயல் தேசப் பயணம் செல்வது இது முதல் முறை என்பதை நினைத்தவுடன் கூச்சமாக இருந்தது. 52 வயதுவரை விமானம் ஏறாத பேராசிரியராக இருந்து விட்டோமே என்ற நினைப்பு கவலையாக இல்லை என்றாலும் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. ஜெட் ஏர்லைன்ஸில் ஒரு பயணிக்கு அனுமதிக்கும் 30 கிலோ எடை அளவு கூட என்னிடம் இல்லை.

May 15, 2011

தொலைநெறிக் கல்வி என்னும் மாய யதார்த்தம்


இந்தப் பயணம் 2010 டிசம்பரிலேயே போய் வந்திருக்க வேண்டிய பயணம். நிர்வாகக் காரணங்களாலும் சொந்தக் காரணங்களாலும் ஆறு மாதத்திற்குப் பின் இப்போதுதான் வாய்த்தது. மே 7 இல் விமானம் ஏறி, மே 11 இல் திரும்பி வந்து விட்டேன். அங்கே இருந்த நாட்கள் சரியாக நான்கு நாட்கள் தான். நான்கு நாட்களும் பணி சார்ந்த பயணம் தான்.

May 09, 2011

மதிப்புக் கூட்டப்படும் உள்ளூர்ச் சரக்குகள்


ஆங்கிலத்தில் ஓரியண்டல்(Oriental),ஆக்சிடெண்டல்(Occidental) என இரண்டு சொற்கள் உள்ளன. அவ்விரு சொற்களையும் எதிர்ச்சொற்களாகப் பயன்படுத்தும் போக்கு 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளின் வணிகக் குழுமங்கள் வியாபாரத்திற்காக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வந்த போது

April 20, 2011

தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு -கருத்தரங்கம்


தமிழ்ச் சிறுகதைக்கு நூறு ஆண்டு ஆகும் நிகழ்வைக் கொண்டாடும் விதமாகச் சென்னையில் சாகித்ய அகாடெமி ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளது. ஏப்ரல் 26 ,27 தேதிகளில் சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் நடக்கும் இக்கருத்தரங்கில் தொடக்க விழா,

April 12, 2011

சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்


வாசிப்பதற்கு முன் ஒரு குறிப்பு
இந்தக் கட்டுரை 2006 இல் எழுதப்பட்டது. ஆனால் இப்போதும் இக்கட்டுரை விவாதிக்கும் எதுவும் மாறிவிடவில்லை. நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கின்றன. இப்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் நிகழ்ச்சிகளின் பெயர்களை அந்த இடத்தில் மாற்றிப் போட்டு நீங்கள் வாசித்துக் கொள்ளலாம். இனிக் கட்டுரைக்குப் போகலாம்...

April 10, 2011

மறதியின் புதை சேற்றில் :பொதுத்தேர்தல்கள் குறித்த ஒரு பரிசீலனை


2011,மார்ச்,19 – நடக்கப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகாரபூர்வமான பணிகள் தொடங்கும் நாள். “தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரம் செலுத்தப் போகும் அரசமைப்பின் அடித்தள உறுப்பினருள் ஒருவராக இருக்க நான் விரும்புகிறேன்” எனத் தன்னை முன் மொழிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் முதல் நாள். அன்று தொடங்கும் இந்த முன் மொழிதல்கள் ஒருவார காலத்திற்குத் தொடரும். பின்னர் விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்; தகுதியுடைய மனுக்கள் ஏற்கப்படும்; தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்படும்.

ஞானபீடத்துக்கான பாதை


இந்த வருடம் தமிழுக்கு ஞானபீட விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என அதன் பரிந்துரைக் குழுவில் இருக்கும் அந்தப் பேராசிரியர் சொன்னார். 1977 இல் அகிலனுக்குக் கிடைத்தபின்னர் 23 ஆண்டுகள் காத்திருந்து ஜெயகாந்தனுக்கு வழங்கப் பட்டது. இனியும் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

April 07, 2011

தமிழில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது?


பட்டப்படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் முடித்து விட்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பில் சேர்ந்திருந்தேன். வகுப்புகள் தொடங்கி இரண்டு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. எனக்கொரு கடிதம் வந்திருப்பதாக வகுப்புத் தோழி சொன்னவுடன் அதை எடுப்பதற்காகத் துறைக்கு வரும் கடிதங்கள் போடப்படும் பெட்டிக்கு அருகில் போய்க் கடிதங்களைப் புரட்டினேன்.  எனக்கு வந்த கடிதத்தைத் தேடிக் கொண்டிருந்த போது எனது பெயரைச் சொல்லி அவர் அழைத்தார். அவருடன் இன்னும் நான்கு பேர் இருந்தார்கள். அருகில் போன போது எனது பெயருக்கு வந்த தபால் அட்டை அவர் கையில் இருந்தது. அழைத்தவர் மற்றவர்களை விட நல்ல உயரம்.  தயங்கித் தயங்கி அவரருகில் சென்றேன். காரணம் ’ராகிங்’ செய்யப்போகிறார்கள் என்ற பயம்.

April 04, 2011

கதவைத் திறந்து வையுங்கள் ; காற்றுக்காக மட்டுமல்ல.


அதைப் பயணம் எனச் சொல்வதை விடப் பங்கேற்பு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்லூரிக்குத் தரப்பட்ட   தன்னாட்சி நிலையை மேலும் தொடரலாமா? இல்லையென்றால் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் பழையபடி கொண்டு வந்து விடலாமா? எனப் பரிந்துரைக்கும் பல்கலைக்கழகக் குழு ஒன்றின் உறுப்பினராகச் சென்றிருந்தேன். நான் அந்தக் கல்லூரிக்குப் புதியவன். பிற பல்கலைக்கழக வல்லுநர் என்ற வகையில் அக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.   

March 28, 2011

தூரம் அதிகம்; நேரம் குறைவு

தஞ்சையின் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது நேரம் காலை 6.35. நெல்லையில் நேற்றிரவு கிளம்பிய நேரம் 11.35. ஏழுமணி நேரப் பயணத்தில் வந்து சேர்ந்தாகி விட்டது. இத்தனைக்கும் ஒரே பேருந்தில் பயணம் செய்யவில்லை. இடையில் மதுரையில் இறங்கி முக்கால் மணி நேரம் காத்திருந்து அங்கிருந்து கிளம்பும் இன்னொரு அரசுப்பேருந்ததைப் பிடித்துத்தான் வந்தேன்.

March 21, 2011

மரணத்தை எதிர்கொள்ளும் சாகசப் பயணம்

மனிதர்களின் பயணங்களுக்குப் பின்னால் வெறும் கொண்டாட்ட மனநிலை மட்டுமே இருப்பதில்லை. திகைத்து நிற்கும் சாகசங்களும் தேவைப்படுகின்றன. தூக்கம் வராமல் போனதற்கு அந்த சாகசப் பயணமே காரணம் என்று தோன்றியது. நடை பயணங்களாலும்சரி, வாகனப் பயணங்களானாலும்சரி அதன் முடிவில் உடல் ஓய்வை எதிர்பார்க்கவே செய்கிறது.

March 18, 2011

திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக்கட்டமைப்பை வரையறை செய்யும் மார்க்சியச் சமூகவியலாளர்கள் கூட  2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலச் சமூகக் கட்டமைப்பைத்  தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.  
இந்த நேரத்தில்,

March 15, 2011

இலக்கிய ஆய்வுகளும் சமுதாய அறிவியலும்

இன்று தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங் களுக்குள் மாறிவிட்டன.புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழுக்கள் பரிந்துரைக்கின்றன. பல்கலைக் கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன.

March 13, 2011

ஆமாம் நண்பர்களே! அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.


அனுபவங்கள் எப்போதும் கடந்தகாலத்தைச் சேர்ந்தவைகளாகவே இருக்கின்றன. கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குக்  கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அந்த நிகழ்வை அதிசயம் என்று தானே சொல்ல வேண்டும்.

March 08, 2011

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்….


இப்போது நான் நிற்பது பயணச்சீட்டு வாங்குவதற்காக அல்ல; வாங்கிய பயணச்சீட்டை ரத்து செய்வதற்காக. ஆறு நாட்களுக்கு முன்பு நான் பதிவு செய்த போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது பெயர் நேற்றுத் தான் உறுதியானது. ஆனால் இன்றோ ரத்து செய்யும்படி ஆகி விட்டது. அப்படி ஆனதற்குக் காரணம் நான் அல்ல; இந்திய தேர்தல் ஆணையம் செய்த அறிவிப்பு தான் காரணம். இந்தத் தேர்தல் இன்னும் என்னென்ன திருப்பங்களைக் கொண்ட வரப்போகிறதோ தெரியவில்லை.

விருதுகளின் பெறுமதிகள்

தைமாதம் தமிழ்நாட்டின் அறுவடைக்காலம். அதனைத் தொடர்வது கொடையின் காலம். கொடை நடைபெறுகிறபோது கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. உடல் உழைப்பில் ஈடுபடும் தமிழக விவசாயிகளுக்குத் தை மாதம் கொண்டாட்டத்தைக் கொண்டு வரும் மாதமாக இருந்த நிலை இப்போது இல்லை. அதற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்ற புத்திஜீவிகளுக்கு தை மாதம் அறுவடைக்காலமாக மாறிவிட்டது.

March 07, 2011

மாற்றப்படும் சினிமாப் பொருளாதாரமும் அழிக்கப்படும் பிம்ப உருவாக்கமும்- சமகாலத்தமிழ்ச் சினிமாக் கலாச்சாரம் குறித்த ஓர் அலசல்


ரஜினிகாந்த் நடித்து 1994 இல் வெளிவந்த பாட்ஷா வெற்றிப் படமா? தோல்விப் படமா? என்று யாரும் கேள்வி எழுப்பி விடைதேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு நகரங்களிலும் வெளியிடப் பட்ட பெரும்பாலான திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களையும், பெருநகர அரங்குகளில் 200 நாட்களையும் தாண்டி ஓடிய படம்.

March 01, 2011

அன்பரே! தாங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.


கோயில்களுக்குப் போவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் பலமுறை என்னை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை நிராகரிக்க ஏதாவது ஒரு காரணமும் வேலையும் இருந்து கொண்டே இருந்தது. அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்குத் தரவே இல்லை.

February 24, 2011

காலம் என்னும் பெருங்கணக்கு: ஒரு வாரத்திற்குப் பின் ஒரு குறிப்பு

எனது பாடங்களுக்கு நான் கற்பிக்கும் முறையில் எனக்கு எப்போதும் திருப்தி இருப்பதில்லை. அதனால் திறனாய்வாளர்களையும் படைப்பாளிகளையும் அழைத்து அவர்களோடு உரையாடும் வாய்ப்பை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்தித் தருவது ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்வு. இந்த வருடம் கடந்த வாரம் சிறுகதையாளர் வண்ணதாசனும், நாவலாசிரியர் இமையமும் எங்கள் துறைக்கு வந்திருந்தனர்.

இன அடையாளங்களைத் தாண்டி..


இலங்கையில் நிகழ்ந்து வந்த யுத்தம் 
பேரினவாதக் கருத்தியலை 
மெல்லமெல்ல ஏற்றுக் கொள்ளச் செய்வதில் 
வெற்றி பெற்றுள்ளது. 
முடிவுக்கு வந்த யுத்தத்தின் பிந்திய மௌனங்கள் 
அதற்கு முழுச்சாட்சி. 
ஆனால் மௌனங்கள் கலையும் ஓசைகளும் கேட்கவே செய்கின்றன 
என்பதை அவ்வப்போது வரும் தகவல் குறிப்புகள்
சொல்லித்தான் காட்டுகின்றன. 
இன்று காலை எனக்கு வந்த 
இந்தக் கடிதம் எனக்குச் 
சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்
அ.ராமசாமி


February 15, 2011

ஐயா, உங்கள் காலம் முடிந்து போய் விட்டது


அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்து நிற்கும் அவரிடம் அப்படிச் சிரித்துக் கொண்டே பேசியிருக்கக் கூடாது என்பது இப்போது உறைக்கிறது. சிரித்துக் கொண்டே சொன்ன போது அவர் நிச்சயம் கோபம் அடையவே செய்திருப்பார்.

February 06, 2011

எல்லை கடக்கும் உரிமைகள்


திலகவதியைச் சிறப்பாசிரியராகவும், அவரது புதல்வர் பிரபுதிலக்கை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் மாத இதழ் அம்ருதா. நான்கு ஆண்டுகளைக் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள அம்ருதாவில் எனது நீண்ட நேர்காணல் முன்பு ஒருமுறை வெளி வந்துள்ளது. அதில்லாமல் அம்ருதாவில் நாடகம், திரைப்பட விமரிசனம், சில கட்டுரைகள் என அவ்வப்போது எழுதியுள்ளேன். இந்த மாதம் தொடங்கி , கும்மியடி.. கூடி நின்று கும்மியடி என்ற தலைப்பில் பத்தித் தொடராகக் கட்டுரைகளை எழுதப்போகிறேன். எல்லை கடக்கும் உரிமைகள் என நான் தலைப்பிட்ட அந்தக்கட்டுரை படைப்பாளிகள் அரசியல்வாதியாகலாமா? என இன்னொரு தலைப்புடன் அட்டைப்படக்கட்டுரையாக இந்த மாதம் (2011, பிப்ரவரி) அச்சாகியுள்ளது. இந்தியாவில் அலை வீசிக் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மையப்படுத்திய கட்டுரை என்றாலும் நேரடி அரசியல் கட்டுரை அல்ல. நேரடியாக அரசியல் கட்டுரைகள் எழுதும் அளவுக்குத் தைரியமும் அரசியல் ஞானமும் எனக்கு இல்லை. ஆனால் பரபரப்பான பேரரசியல் போலவே இலக்கியம், கலை, பண்பாடு, படைப்பாளி, அதற்குள் செயல்படும் அறம் சார் கேள்விகளுக்குள் செயல்படும் நுண் அரசியல் பற்றி எழுதும் தைரியமும், ஞானமும் எனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு எழுதப் போகிறேன். அம்ருதா இதழைக் கடைகளில் வாங்கிப் படிக்க முடிபவர்கள் அச்சிலேயே வாசியுங்கள். அந்தப் பாக்கியமும் அனுகூலங்களும் இல்லாதவர்களுக்காக கட்டுரை அச்சாகி ஒருவாரம் கழித்து இங்கே பதிவேற்றம் செய்யப்படும்.  இனி முதல் கும்மி…

February 05, 2011

சசிகுமாரின் ஈசன் : சமகாலத் தமிழ்வாழ்வின் பெருந்துயரம்


வெற்றியை மட்டுமே கொண்டாடும் நமது திரைப்பட உலகமும், பார்வையாளர் மனமும் தோல்விப் படம் எடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வெற்றியாளரின் அடுத்த பாய்ச்சலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன. இந்த மனநிலை திரைப்படம் சார்ந்தது மட்டுமல்ல. போட்டிகள் நிரம்பிய மனித வாழ்க்கையின்பல தளங்களின் இயக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

January 10, 2011

பள்ளிப்பருவமும் பயணங்களும்

எனது பள்ளிக்கூட நினைவுகள் எப்போதும் பயணங்களோடு சேர்ந்தே மனதிற்குள் அலையடிக்கக் கூடியன. பள்ளிக்கூடமே போகாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த நான் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியதற்கு  மறுக்கப்பட்ட ஒரு பயணமே காரணமே.

January 09, 2011

புலமையின் உச்சம்

 தமிழ் மொழி, செவ்வியல் மொழி  (செம்மொழி என்னும் சொல் பொருத்தமான சொல் அல்ல)  என்னும் உயர் தகுதியைப் பெறுவதற்குக் காரணமாக இருப்பன பாட்டும் தொகையுமாக இருக்கும் சங்க இலக்கியங்களே. காலப் பழைமையோடு குறிப்பிட்ட இலக்கியக் கொள்கை அடிப்படையிலான  வரையறைக்குள் இருப்பதும் அதன் சிறப்புக்கள். இவ்விரு முக்கியக் காரணங்கள் தான் அவ்விலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்கள் எனவும், அவ்விலக்கியங்கள் எழுதப்பட்ட தமிழ் மொழியைச் செவ்வியல் மொழி எனவும்