April 23, 2010

வானவில்லால் வளைத்துக் கட்டலாம்.

சிறுவர்களின் உலகம் கதைகளால் நிரம்பி வழியும் உலகம் எனப் பல நாடகக்காரர்கள் கண்டு சொன்ன உண்மை திரும்பவும் ஒரு முறை உறுதியாக்கப்பட்டது.

April 12, 2010

ஒரு மரணத்தின் பதிவுகள்நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்லவில்லை.அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கி யிருந்தேன்.எனது குடும்ப உறுப்பினர்களில் மகள் சினேக லதாவுக்கு மட்டும் அவரது இலக்கிய ஆளுமையின் சில அடுக்குகள் தெரியும்.மற்றவர்களுக்கு அந்தப் பகுதிகள் தெரியாது. என்றாலும் அவரது வீட்டிற்கு ஒரு முறை போயிருக்கிறோம். அனைவருக்கும் அந்த வீடு அறிமுகம். அந்த வீட்டைப் பற்றிய நினைவுகளும் உண்டு. அத்துடன் என்னுடைய பெயரும் அவருடைய பெயரும் ஒன்றாக இருப்பது நினைவில் நிற்கக் கூடுதல் காரணம். அந்தத் தகவல் வந்த அன்று எங்கள் வீட்டு காலைச் சாப்பாட்டு நேரத்தில் நிலவிய சோகத்திற்கு வேறு காரணம் எதுவும் இல்லை.

உள்ளுணர்வின் முன் அறிவிப்புகள்


அது நடந்தது எட்டாண்டுகளுக்கு முன்னாள் ஒரு குடியரசு தினத்தன்று. குடியரசு தினம், சுதந்திர தினம் என்றால் நமது தொலைக்காட்சிகள் தேசப்பற்று வெளிப்படும் படங்களை ஒளிபரப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்பதை அனைவரும் அறிவோம். பெரும்பாலும் மணிரத்னத்தின் ரோஜா, உயிரே, பம்பாய் போன்ற படங்கள் அடிக்கடி திரும்பத் திரும்ப ஒளிபரப்புப் பெற்று தேசப்பற்று வளர்ப்பதை இன்றும் நமது தொலைக் காட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. ஆனால் அன்று மணிரத்னத்தின் மனைவி சுகாசினி இயக்கிய,'இந்திரா’ படத்தைப் பிற்பகல் ஒளிபரப்பாக ஒரு தொலைக்காட்சி காட்டத் தொடங்கியதும் குட்டித் தூக்கத்திற்காகப் போய்விட்டேன். ஏற்கெனவே சிலதடவை பார்த்த படம். தூக்கம் கலைந்து திரும்பவும் வந்த போது படம் இன்னும் முடியவில்லை. முடியும் கட்டத்தில் இருந்தது. மனைவி விஜயா, மகள் சிநேகா, மகன் ராகுலன் ஆகியோர் மட்டுமல்ல, பக்கத்து வீட்டுச் சிறுமியும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

April 08, 2010

மனக் கண்ணாடிப் படிமங்கள்: சுரேஷ் குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல்


சுரேஷ் குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல் கதையை எத்தனை முறை படித்திருப்பேன் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறை குற்றாலம் போக வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் அந்தக் கதையை ஒரு தடவை வாசித்து விட்டுச் செல்வது வழக்கம்.

வலிய எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்கள்:சு.சமுத்திரத்தின் முகம் தெரியா மனுசி


விளிம்புநிலை வரலாற்று ஆய்வுகள் என அழைக்கப்படும் ஆய்வுகள் பெரும் பாலும் வட்டாரங்களையே தரவுகளுக்கான களன்களாகக் கொள்கின்றன. அவ்வட்டாரத்திலும் கூட முழுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளே வரலாற்றுக்கான தரவுகளாக அமைய முடியும் எனக் கருதாமல் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் அகப் புற மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் பிரச்சினைகளைக் கூட விளிம்புநிலை ஆய்வுகள் முக்கியத்துவப் படுத்தி ஆய்வுகளைச் செய்கின்றன.